ஓரினச் சேர்க்கை புகாரில் மத்தியப் பிரதேச முன்னாள் பா.ஜ.க நிதியமைச்சர் ராகவ்ஜி இன்று கைது செய்யப்பட்டார். மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2004ம் ஆண்டு முதல் நிதியமைச்சராக இருந்து 10 பட்ஜெட்களை தாக்கல் செய்தவர் ராகவ்ஜி(79). இவரது வீட்டில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்த நபர், ராகவ்ஜி மீது போலீசில் ஓரினச் சேர்க்கை புகார் அளித்தார். மேலும், ராகவ்ஜி, ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோ ஆதாரமும் தன்னிடம் உள்ளதாகவும் கூறியுள்ளார். ராகவ்ஜியை உடனடியாக ராஜினாமா செய்யும்படி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.
அதன்படி தனது அமைச்சர் பதவியை ராகவ்ஜி ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து பா.ஜ.கவில் இருந்தும் ராகவ்ஜி நீக்கப்பட்டார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் கைதாகாமல் தப்பிக்க ராகவ்ஜி முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், இந்த மனுவை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இதையடுத்து ராகவ்ஜி இன்று கைது செய்யப்பட்டார்.

DINAKARAN