புதுடில்லி: "இஷ்ரத் என்கவுன்டர்' வழக்கில், சி.பி.ஐ., இன்று தனது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. நடந்தது போலி என்கவுன்டர் தான் என கூறப்பட்டு்ளது. .
குஜராத் மாநிலத்தில், 2004ல் ஜூன், 15ம் தேதி, மும்பை கல்லூரி மாணவி இஷ்ரத் ஜகான், 19, பிரனேஷ் கோபிநாத் என்கிற ஜாவீத் ஷேக், அம்ஜத் அலி அக்பர் அலி ராணா, ஜீஷன் ஜோகர் ஆகிய நான்கு பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதை, "என்கவுன்டர்' என, போலீசார் கூறினர். ஆனால், பல்வேறு கட்சிகள், இதை போலி என்கவுன்டர் என, குற்றம் சாட்டின. இது குறித்து விசாரணை நடத்தும்படி சி.பி.ஐ.,க்கு உத்தரவிடப்பட்டது. தீவிர விசாரணை நடத்தி வரும், சி.பி.ஐ., குஜராத் ஐகோர்ட்டில், ஜூலை, 4ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என, உறுதியளித்து இருந்தது. இதையடுத்து சி.பி.ஐ., இன்று தனது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதில் பி.பி.பாண்டே, ,வஞ்சாரா உள்ளிட்ட ஐ.பி.எஸ்.,கள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் போலி என்கவுன்டர்கள் நடத்தியுள்ளார்கள். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. மேலும் முழுவதுமாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டுள்ளது.

Dinamalar