செவ்வாய், 30 டிசம்பர், 2014

காஞ்சிரங்குடி ஊராட்சியில் முஸ்லிம் மயானம் சுற்றுச்சுவர் ரூபாய் 10.00 பத்து லட்சம் நிதி ஒதுக்கீடு !



ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் திருப்புல்லாணி ஒன்றியம், காஞ்சிரங்குடி ஊராட்சியில் முஸ்லிம் மயானம் சுற்றுச்சுவர் கட்டுதல் பணிகளுக்காக ரூபாய் 10.00 பத்து லட்சம் நிதி ஒதுக்கீடு !

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்புல்லாணி ஒன்றியம், காஞ்சிரங்குடி ஊராட்சி, காஞ்சிரங்குடி கிராமத்தில் முஸ்லிம் மயானம் சுற்றுச்சுவர் கட்டுதல் பணிகளுக்காக

ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற குழு தலைவருமான பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2014 - 2015 ம் ஆண்டின் கீழ்

மேற்படி கட்டிட பணிகளுக்காக ரூபாய் 10.00 ( பத்து லட்சம் ) நிதி பரிந்துரை செய்து, ஒப்புதல் பெறப்பட்டு, புதிய கட்டிட பணிகளுக்கான அரசாணை பெற்று வழங்கப்பட்டது.

திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர் ( கிராம ஊராட்சி ) கடித எண் : ந.க.தி4 /4146 /2014

அரசாணை எண் : ந.க.ஆர்.4/6311/2014.

இணைப்பு : -

அரசாணை நகல்.

வெள்ளி, 28 நவம்பர், 2014

ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் நகராட்சி கான்சாஹிப் தெரு பகுதிகளில் கள ஆய்வு !






ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ராமநாதபுரம் நகராட்சி கான்சாஹிப் தெரு பகுதிகளுக்கு நகராட்சி ஆணையாளர் மற்றும் முனிசிபல் பொறியாளருடன் நேரடியாக சென்று கள ஆய்வு !
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி, ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட வெளிப்பட்டிணம் கான்சாஹிப் தெரு, மற்றும் நாகநாதபுரம் புதுத்தெரு பகுதிகளுக்கு தொடர் மழை காரணமாக வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளை காண்பதற்காக
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்கள் சென்றபொழுது முறையான வடிகால் அமைக்கப்படாததால் மழைநீர் குளம்போல் தேங்கியிருந்தது, அதை உடன் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் இப்பகுதி பொதுமக்களிடம் குறைகள் கேட்டறியப்பட்டது. இப்பகுதியில் ஐநூறுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன இதில் குறைந்த மின் விநியோகம் காரணமாக மின்விளக்குகள் குறைந்த வெளிச்சத்தில் எரிவதாகவும், மின்மோட்டார் இயக்க முடியவில்லை அதனால் அன்றாட தேவைகளை சரியாக நிறைவேற்ற முடியவில்லை எனவும், கூடுதல் குறைவாக மின்சாரம் வந்து வந்து செல்வதால் மின்சாதனங்கள் அடிக்கடி பழுது ஏற்படுவதாகவும்,
அறிவிக்கப்படாத மின்வெட்டினால் மாணவர்கள் முதியோர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதாகவும் இந்த நிலையை போக்க கூடுதல் மின்மாற்றி அமைத்துத்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது சம்பந்தமாக மின்சார வாரிய முதுநிலை அதிகாரியை உடன் தொடர்புகொண்டு குறைகளை சரிசெய்ய ஆவண செய்யப்பட்டது.

மேலும் இப்பகுதியில் சில இடங்களில் தெரு விளக்குகள் பல மாதங்களாக எரியவில்லை எனவும், கொழும்பு ஆலிம் உயர்நிலைப்பள்ளிக்கு மாணவர்கள் செல்லும் பகுதியில் நாய், பன்றிகளால் மிகுந்த சுகாதாரக்கேடு இருப்பதாகவும், குப்பைகளை அவ்வப்பொழுது அகற்றாததால் நோய் பரவும் அபாயமும் உள்ளதாக தெரிவித்தனர். நகராட்சி ஆணையாளர் உடன் இருந்து பொதுமக்களின் அனைத்து குறைகளையும் நேரடியாக பார்த்ததால் அவ்வப்பொழுது அந்தந்த துறை அலுவலர்களுக்கு பொதுமக்கள் குறை சம்பந்தமான நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டார்.
வார்டு கவுன்சிலர் திருமதி.ஐனுல் சரிபா அவர்கள் கூறும்பொழுது மழைகாலத்தில் குப்பை மற்றும் வாறுகால் பிரச்சினை காரணமாக பாம்பு போன்ற விஷ உயிரினங்கள் தெருக்களில் நடமாடுவதால் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே இப்பகுதியில் தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றார்.
நகராட்சி கமிஷனர் திரு.சிராஜ் மற்றும் முனிசிபல் இஞ்சினியர் திரு.சேர்மக்கனி அவர்கள் கூறும்பொழுது சாலையில்லாத தெருக்களுக்கு சாலை அமைக்க அரசுக்கு Proposal அனுப்பப்பட்டுள்ளதாகவும் விரைவில் அனுமதிபெற்று சாலைகள் அமைக்கப்படும் எனவும், நகராட்சி சம்பந்தமான அனைத்து குறைபாடுகளுக்கும் படிப்படியாக தீர்வு காணப்படும் எனவும் கூறினார்கள்.
இந்த ஆய்வின் பொழுது சட்டமன்ற உறுப்பினருடன் மாவட்ட நிர்வாகிகள் அன்வர் அலி, முஹம்மது சித்திக், ஒன்றிய நிர்வாகிகள் பாக்கர் அலி, அகமது இப்ராஹீம், சுல்தான், நகர் நிர்வாகிகள் பஷீர்அகமது, பரக்கத்துல்லா, மன்சூர் ஆகியோர் உடனிருந்தனர்.
இணைப்பு படங்கள் விபரம் : -
1 . அரசு அதிகாரிகளுடன் சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டு அறியப்பட்டது.
2 . பொதுமக்கள் நடமாட முடியாத வண்ணம் குடியிருப்பு வீடுகளுக்கு மத்தியில் மழைநீர் வெளியேற வாறுகால் இல்லாததால் குப்பைகள் கலந்து குளம்போல் தேங்கிநிற்கும் மழைநீர்.
3 . குறைவான மின்சாரம், நாய் மற்றும் பன்றி தொல்லைகள், குப்பைகளை அகற்ற கால தாமதம் பற்றி முறையிடும் பொதுமக்கள்.
4 . தேங்கிநிற்கும் மழைநீரை அகற்ற உத்தரவிடும் ஆணையாளர் மற்றும் அதிகாரிகளுடன் சட்டமன்ற உறுப்பினர்.

2004 தஞ்சைப் பேரணி -- தமுமுக


புதன், 19 நவம்பர், 2014

அரசு முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்ததா?


நாடாளுமன்றத் தேர்தலும் நமது எழுச்சியும் -- தமீமுன் அன்சாரி


அரசியல் விழிப்புணர்வு -- கோவை செய்யது


இஸ்லாத்தின் பார்வையில் ஸதக்காவும் ஜக்காத்தும் --- மௌலவி அலிஅக்பர் உமரி


முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டில் தமுமுகவின் பங்கு


இலங்கை சிறையில் வாடிய தமிழக சிறைவாசிகள் மமகவின் தொடர் முயற்சியால் விடுதலை!!!


இலங்கை வெலிக்கடை சிறையில் வாடிய தமிழகத்தை சேர்ந்த அனைத்து சமுதாய சிறைவாசிகள் எட்டுபேர் மனிதநேய மக்கள்கட்சியின் தொடர் முயற்சியால் விடுதலையடைந்தனர் !




இலங்கை சிறையில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த நபர்கள் தண்டனை அனுபவித்து வந்தனர். கடந்த 2010 ல் நடந்த இலங்கை மற்றும் இந்தியாவின் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை வெலிக்கடை சிறையில் இருந்து 16 கைதிகள் தமிழகம் கொண்டு வரப்பட்டு இங்குள்ள தமிழக சிறையில் தண்டனை அனுபவித்து வந்தனர்.

இந்நிலையில் தண்டனை பெற்று தன் குடும்பத்தாருடன் திருந்திவாழ விருப்பப்படும் அனைத்து சமுதாயத்தை சேர்ந்த நபர்களின் நிலை அறிந்து சிறைவாசிகளின் விடுதலை தொடர்பாக மனிதநேய மக்கள்கட்சியின் சட்டமன்றகுழு தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான  பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹி
ருல்லா MLA அவர்கள் தமிழக அரசிடம் பரிந்துரை செய்து இப்பிரச்சினையில் கூடுதல் கவனமெடுத்து பேசி வந்தார்கள்.

அதனடிப்படையில் கடந்தமாதம் திருச்சி சிறையில் இருந்த மஞ்சத்திடல் திருச்சியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சிங்கராயர் 50/M, கண்ணன் 45/M, ராமநாதன் 48/M, ராஜகோபால் 49/M, முனியசாமி 50/M, காசீம் 50/M, இபுராஹீம் மகன் மீரா முஹைதீன் 50/M, மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை சேர்ந்த முஹைதீன் மகன் முஹைதீன் அபூபக்கர் 40/M ஆகிய எட்டு நபர்களும் தன் வாழ்நாளில் அதிகமான நாட்களை தன்னுடைய மனைவி மக்களை விட்டு பிரிந்து சுமார் 11 வருடங்களுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து தான் செய்த தவறுக்காக மனம் வருந்தி தற்போது விடுதலையடந்துள்ளனர்.

மேலும் சிறையில் உள்ள மீதமுள்ள அனைத்து சமுதாயத்தை சேர்ந்த பெண்கள் உட்பட எட்டு நபர்களும் வரும் மாதங்களில் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.


சிறையிலிருந்து விடுதலையான அனைவரும் தொலைபேசியிலும், நேரிலும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களை தொடர்புகொண்டு நன்றி தெரிவித்தனர். குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முஹைதீன் அபூபக்கர் பேராசிரியர் அவர்களை நேரில் சந்தித்து அறிவுரை ஏற்றார்.

பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்களின் முயற்சியால் பாம்பனில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது !




ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்டபம் ஒன்றியம், பாம்பன் ஊராட்சியில் பாம்பன்,தோப்புக்காடு, சின்னப்பாலம் மற்றும் K.K.நகர் பகுதிகளில் நீண்ட நாட்களாக குறைந்த மின் அழுத்தம் இருந்து வந்தது. இதனால் அப்பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கும்,வியாபாரிகளுக்கும், இல்லத்தரசிகளுக்கும், மாணவ,மாணவிகளுக்கும் முழுமையான மின்சாரம் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனடிப்படையில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்கள் வழியாக இது சம்பந்தமாக கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பொதுமக்களின் கஷ்டங்களை எடுத்துக்கூறி இப்பகுதிக்கு புதிய மின்மாற்றி அமைத்துத்தர கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும் புதிய மின்மாற்றி அமைக்க சிறு சிறு தடங்கல்கள் ஏற்பட்டு வந்தது. ஆகவே மின்சாரத்துறை அமைச்சரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்ட மின்சாரத்துறை அலுவலர்களிடமும் இது சம்பந்தமாக பலமுறை தொடர்ந்து தொலைபேசியிலும் நேரடியாகவும் பேசி முடிவில் அனுமதி பெறப்பட்டது.

அதன் பலனாக 100 KV திறன்கொண்ட புதியமின்மாற்றி பொதுமக்களின் சிரமங்களை போக்கும் விதமாக அதிகாரிகள் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரின் நேரடி செயலாளர் அவர்களும், மின்சாரத்துறை உதவி கோட்டபொறியாளர் (ஊரகம்) அவர்களும்(ADE), மண்டபம் துணைமின்நிலைய உதவி பொறியாளர் அவர்களும், பாம்பன் ஊராட்சிமன்ற தலைவர் பேட்ரிக் அவர்களும், மற்றும் வார்டு உறுப்பினர் சுரேஷ், தோப்புக்காடு கிராம தலைவர் நம்புராஜன், சின்னப்பாலம் கிராம தலைவர் முருகேசன் உள்ளிட்ட பெருந்திரளான கிராம பொதுமக்கள் மற்றும் மனிதநேய மக்கள்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் இந்தபுதிய மின்மாற்றி அமைவதற்கு காரணமாக இருந்த ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு கிராமபொதுமக்கள் தங்களது நன்றியை தெரிவித்துகொண்டனர்.

குறிப்பு :மேலும் மின்சாரத்துறை சம்பந்தமான பல குறைபாடுகளுக்கு விரைவில் தீர்வு செய்யப்படும் என இத்துறையின் மூலம் நமக்கு கடிதம் வரப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதன், 5 நவம்பர், 2014

தந்தி டிவியில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தடை : அவசியமா? அரசியலா? -- பேரா.ஜவாஹிருல்லா

அஸ்ஸலாமு அலைக்கும்



இன்று 5-11-2014 தந்தி டிவியில்  ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தடை : அவசியமா? அரசியலா? என்ற தலைப்பில் சட்டஉறுப்பினர் போரா.ஜவாஹிருல்லா (மமக). சகோ.ரவீந்திரன் துரைசாமி (அரசியல் விமர்சகர்). சகோ.சித்தண்னன் (முன்னால் காவல்துறை அதிகாரி). சகோ.சடகோபன் (ஆர்.எஸ்.எஸ்) ஆகியோர் கலந்து கொண்ட விவாதம் சகோ.ரங்கராஜ் பாண்டே முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சமுதாயத் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் பேரா.ஜவாஹிருல்லா அவர்கள் தன் வாதமாக ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் பேரணி என்ற பெயரில் மதக்கலவரத்தை தூண்டி மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்துகிறது என்றும் உதாரணமாக மண்டைக்காடு கலவரத்தை சுட்டிக்காட்டியதோடு மகாத்மா காந்தி படுகொலை முதல் இன்று பல குண்டு வெடிப்புகளை ஆர்.எஸ்.எஸ் நடத்தி அதை முஸ்லிம்கள்  மீது பழியைப் போட்டு வருகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

பேச்சுரிமை இழந்து கிடந்த சமுதாயத்தை சமுதாயத்தின் குரலை இன்று பொது ஊடகங்களிலும் , சட்டமன்றத்திலும் ஒலிக்கச் செய்த பெருமை இறைவனின் கிருபையால் அது தமுமுகவையேச் சாரும்.
SSM

திங்கள், 22 செப்டம்பர், 2014

2010 டிசம்பர் 6 போராட்டம் --- இராமநாதபுரம் தமுமுக


16 வருடங்களுக்கு முன் ரியாத்தில் தவறிய தமிகபணிப்பெண் தமுமுக மற்றும் சமூகஆர்வலரின் முயற்சியால் மீட்பு:

                                                ஏக இறைவனின் திருப்பெயரால்...



விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சந்தைபேட்டையைச் சேர்ந்த சகோதரி நஜீமுனிஸா தனியார் ஏஜென்ஸி மூலம் 1998 ஆம் ஆண்டு தன் குடும்பத்தின் வருமையை போக்க பணிப்பெண் வேலைக்கு சவுதிஅரேபியாவின் ரியாத் நகருக்குவந்துள்ளார்.
வேலைக்குவந்த இடத்தில் அவருக்கு பலபிரச்சனைகள் ஏற்பட்டு கடந்த 16 வருடங்களாக தன் குடும்பத்தாருடன் எந்தவிததொடர்பும் இல்லாமல் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. ஊரில் உள்ள உறவினர்களும் சரியான தொடர்பு இல்லாதகாரணத்தால் குழப்பமான நிலையில் பத்தரிக்கைகள்இதொலைக்காட்சிகள் மற்றும் மாவட்டஆட்சிரியர் அலுவலகம் வழியாக தேடிக் கொண்டே இருந்தார்கள். மேலும் இப்பெண்ணின் சகோதரர் நஜீர் பலவருடங்களாக ரியாத் வந்துஇவேலை செய்துகொண்டேதேடிக் கொண்டு இருந்தார்கள்.
    இந்தசூழ்நிலையில் தான் இறைவனின் நாட்டத்தால் அப்பெண்ணின் நிலையில் சிலமாறுதல்கள் ஏற்பட்டது. அதாவது கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இப்பணிபெண் வேலைசெய்யும் சவுதிவீட்டிற்குஇ இவரின் உறவினர் விருந்திளர்களாக சென்றார்கள். அப்போது அவர்களுடன் அந்தவீட்டில் வேலைசெய்த இலங்கைநாட்டைச் சேர்ந்த தமிழ் பேசும் பணிப் பெண்ணும் சென்றார். அப்போது இருவரும் சந்திக்கநேரிட்டது. சகோதரி நஜீமுனிஸா தன்னுடைய நிலையை எடுத்துக் கூறினார். சில மாதங்களுக்கு பிறகு இலங்கையைச் சோந்த பணிப்பெண் இலங்கை நாட்டிற்கு சென்றுவிட்டார்கள். அங்கு திருவண்ணாமலையைச் சேர்ந்த சகோதர் ஒருவரிடம் இக்கதையை கூறியதோடுஇசகோதரி நஜீமுனிஸா அவர்கள் வேலைசெய்யும் இடத்தின் சிலஅடையhளங்களையும் கூறினார். இந்த அடையாளங்களை வைத்துக் கொண்டு தன்னுடைய தாயைதேட மூத்தமகன் நஜீமுதீன் ரியாத்திற்கு வந்துதேடியும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
    இந்தநேரத்தில் தமுமுக மத்தியமண்டலத்தின் கீழ் செயல்படும் நஸீம் கிளையின் துணைத்தலைவர் மௌலவி முஸ்தாகஅஹமதுஅவர்களுக்கு இச்செய்திசென்றது. இதை அவர் தமுமுக மத்திய மண்டலத்திற்கு தெரியப்படுத்தினார். மண்டலத்தின் பொதுச்செயலாளர் மீமிசல் நூர் முஹம்மதுஇசமூகஆர்வலர் கோட்டார் பாரூக் மற்றும் கேரளவைச் சேர்ந்த சமூகஆர்வலர் ரஃபீக் இவர்களின் முயற்சியால் சில அடையாளங்களை வைத்துக் கொண்டு இறுதியாக சகோதரி நஜீமுனிஸா வேலையும் செய்யும் வீட்டை கண்டுபிடித்தார்கள். இருந்தபோதிலும் அங்குசகோதரிநஜீமுனிஸா இருக்கிறார் என்பதைஉறுதிபடுத்தமுடியவில்லை.
இது தொடர்பாகஅனைத்துஆதாரங்களை வைத்துக் கொண்டுஇசகோதரியின் சகோதரர் நஜீர்மூலமாக இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டார்கள். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு  துரிதமாக இந்திய தூதரக அதிகாரிகள் சகோதரி நஜீமுனிஸா வேலை செய்யும் பகுதியில் கீழ் உள்ளகாவல் நிலையத்தை தொடர்பு கொண்டார்கள். நல்ல எண்ணம் கொண்ட அந்த காவல்துறையை சேர்ந்தவர்கள் உடனடியாக சகோதரி நஜீமுனிஸா வேலைச் செய்யும் சவுதிவீட்டிற்கு சென்று மீட்டனர். மேலும் உடனடியாக 16 வருடங்களுக்கு உரிய சம்பளத்தை கொடுத்துஇ இந்தியாவிற்கு இரண்டொருநாட்களில் அனுப்பிவைக்க உத்தரவிட்டனர்கள்.. எல்லாபுகழும் அல்லாஹ் ஒருவனுக்கே. மத்தியமண்டலத்தின் சார்பாக மீமிசல் நூர் முஹம்மது இந்நற்காரியத்திற்கு துணைப்புரிந்த ஏக இறைவன்இஇலங்கைசகோதரிஇஅனைத்துசமூகஆர்வலர்கள்இ இந்தியதூதரகஅதிகாரிகள் மற்றும் சவுதிஅரேபியாகாவல்துறைஅதிகாரிகள் அனைவருக்கும் தன்னுடையநன்றியைதெரிவித்துகொண்டார்.
மேலும் சகோதரி நஜீமுனிஸா அவாகளின் எதிர்கால வாழ்க்கை எந்தவித சோகமின்ற சிறப்பாகஅமைய நாம் அனைவரும் துவா செய்யுமாறுகேட்டுக் கொண்டார்.
     இந்நிகழ்வின் மூலமாகவெளிநாடு செல்லும் பணிப்பெண்களுக்கு தெரியப்படுத்துவதுஇமுடிந்தவரை வெளிநாடு செல்லும் வாய்ப்பை தவிர்த்து கொள்ளுங்கள். வேறு வழியின்றி செல்ல நேரிடும் போதுஇஅரசு அங்கீகாரம் பெற்ற டிராவல் ஏnஐன்சி மூலமாக செல்வதோடுஇஅவர்களிடமிருந்து தங்களின் வேலைக்கான அக்ரிமண்டை பெற்றுக் கொள்ளுங்கள். தாங்களின் அனைத்து ஆவணங்களின் நகல்களை தங்களின் குடும்பஉறவினரிடம் கொடுத்துவிட்டு செல்லுங்கள். மேலும் சமுதாய அமைப்பினர் அல்லது சுயதொழில் செய்யும் வல்லுணர்களிடம் உரிய ஆலோசனை பெற்றுசெல்லவேண்டும் என்பதைதெரியப்படுத்துகிறோம்.

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

இந்துத்துவா வேறு; இந்தியத்துவா வேறு !!!!

 
Description: http://tamil.thehindu.com/multimedia/dynamic/02118/0123_2118225h.jpg
அகில இந்திய அளவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு நடந்த இடைத்தேர்தலின் முடிவுகள் சில நல்ல செய்திகளைச் சொல்லியுள்ளன. அதிலும் குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் நடந்த இடைத்தேர்தலின் முடிவுகள் தேசிய அரசியலின் எதிர்கால அணுகுமுறைகளில் சில அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவை.
அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு மக்களின் ஆதரவை அணிதிரட்டுவதே ஜனநாயக அரசியல். பெரும்பான்மை மக்களின் ஆதரவை யார் தங்களுக்குச் சாதகமாக அணிதிரட்டுகிறார்களோ அவர்கள் ஆட்சியையும் அதிகாரத்தையும் கைப்பற்றுகிறார்கள். தங்களவர்அல்லது தங்களுக்கு நெருக்கமானவர்என்று மக்கள் யாரைக் கருது கிறார்களோ, அவர்களின் பின்னால் அணிதிரள்கிறார்கள்.
அடையாள அரசியலின் அபாயங்களை இந்தத் தலைமுறை எவ்வளவு தெளிவாகப் புரிந்துவைத்திருக்கிறது என்பதற்கு உத்தரப் பிரதேச இடைத்தேர்தல் முடிவுகள் அருமையான எடுத்துக்காட்டு. வளைகுடா நாடுகளிலிருந்து திரட்டப்படும் பெரும் பணத்தை முதலீடாகக் கொண்டு இஸ்லாமிய இளைஞர்கள், விவரம் தெரியாத இந்துப் பெண்களை வசியப்படுத்தித் திருமணம் செய்துகொண்டு, பாலியல் பலாத்காரம் செய்து பின்பு மதமாற்றமும் செய்கிறார்கள். இந்த லவ் ஜிகாதை முறியடிப்பதற்கு இந்துக்களே அணிதிரண்டு பாஜகவுக்கு வாக்களியுங்கள்என்று அறைகூவல் விடுத்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் யோகி ஆதித்யாநாத்தைத் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் தளபதியாக நியமித்துத் தேர்தலைச் சந்தித்தது பாஜக. இந்த லவ் ஜிகாதை அரங்கேற்றும் இஸ்லாமியர்கள் இருக்க வேண்டிய இடம் ஒன்று பாகிஸ்தான் அல்லது கபுருஸ்தான் (கல்லறை)என்ற கோஷம்தான் தேர்தல் பிரச்சாரம் எங்கும் எதிரொலித்தது.
புறக்கணித்த மக்கள்
பல நிலைகளில் பலவீனமாகி நின்ற அகிலேஷ் யாதவின் அரசு, லவ் ஜிகாதை அரங்கேற்றும் இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது என்ற சங்க பரிவார நிறுவனங்களின் பிரச்சாரத்தால் தேர்தல் வெற்றி உறுதி என்று பாஜக ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். சட்டம்-ஒழுங்கு, ஊழல், அரசு இயந்திரத்தின் மந்தம், பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பல பிரச்சினைகளில் தோற்றுப்போன சமாஜ்வாதி கட்சிக்கு மக்கள் அமோகமாக வாக்களிக்க என்ன காரணம்? “என்ன நடந்தாலும் ஏற்றுக்கொள்வோம், இந்தியா என்னும் தத்துவத்தை உடைக்க அனுமதிக்க மாட்டோம்என்று இந்தத் தலைமுறை சொன்னதுதானே உண்மை!
வளர்ச்சி, முன்னேற்றம், ஊழலற்ற-திறந்த நிர்வாகம், எல்லோருக்கும் நல்ல காலம் என்று நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குக் கேட்டவர்கள் இடைத்தேர்தலில் அடையாள அரசியலை முன்னெடுத்துச் சென்றதை மக்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் மதரஸாக்களை விரிவாக்க 100 கோடி ரூபாயைத் தந்துவிட்டு, மதரஸாக்கள் தீவிரவாதிகளின் கூடாரம் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சாக்ஷி மகராஜ் பிரச்சாரம் செய்த பாஜகவின் முரண்பட்ட அரசியல் நிலைப்பாட்டை மக்கள் நிராகரித்தார்கள்.
அரசியல் போலித்தனம்
பாஜகவின் முன்னணித் தலைவர்கள் முக்தர் அப்பாஸ் நக்வி, ஷா நவாஸ் ஹுசைன் போன்றவர்களின் மனைவியர் ஆசாரமான இந்துக் குடும்பத்துப் பெண்கள். இன்றும் இந்துக்களாகவே வாழ்கிறார்கள். பாஜகவின் மாநிலங்களவையின் முன்னாள் தலைவர் சிக்கந்தர் பகத்தும் இந்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டவர். பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஹேம மாலினியும், முன்னாள் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மேந்திராவும் திருமணத்துக்காக இஸ்லாமியர்களாக மதம் மாறிக்கொண்டவர்கள். இவர்களைத் தங்களது முன்னணித் தேர்தல் பிரச்சாரகர்களாக வைத்துக்கொண்டு லவ் ஜிகாத்என்று யோகி ஆதித்யாநாத் பிரச்சாரம் செய்ததை கடைந்தெடுத்த அரசியல் போலித்தனம்என்பதை மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
ஆர்எஸ்எஸ் இயக்கத் தலைவர் மோகன் பகவத், “இந்த தேசத்தில் இஸ்லாமியர், கிறிஸ்தவர், பெளத்தர்கள், சீக்கியர்கள் அனைவரையுமே இந்துக்கள் என்றே அழைக்க வேண்டும்என்று சொன்னபோதும், ஆதித்யாநாத், மேனகா காந்தி, சாஷி மகராஜ் போன்ற பாஜகவின் முன்னணித் தலைவர்கள் வகுப்புவாதத்தைத் தூண்டிவிடும் வகையில் பகிரங்கமாகப் பேசியபோதும், பிரதமர் வாய் திறக்கவில்லை என்பதை இந்தத் தலைமுறை கவனித்துக்கொண்டேதான் இருக் கிறது. எப்போதும் பேசாத மன்மோகன் சிங் இப்போதும் பேசாமல் இருப்பதில் வியப்பில்லை. ஆனால், பேச்சே மூச்சென்று இருக்கக்கூடிய பிரதமர் மோடி இதையெல்லாம்பற்றிப் பேசாமல் இருப்பதன் மர்மம் அவர்களுக்கு விளங்கவில்லை. லவ் ஜிகாத் என்றால் என்ன?” என்று கேட்ட உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இவர்கள் நம்பத் தயாராக இல்லை.
ஜாதி விட்டு மாற்று ஜாதியில் திருமணம் செய்துகொள்வதும், மாற்று மதத்தில் திருமணம் செய்துகொள்வதும் தேசவிரோதக் குற்றம்போல் கருதப்படுவதை இந்தத் தலைமுறை ஏற்றுக் கொள்வில்லை. தேசிய மனித உரிமை ஆணையம் தந்துள்ள தகவலின்படி உத்தரப் பிரதேச மாநிலத்தில், மகராஜ் கஞ்ச் மாவட்டத்தில் மட்டும் நடக்கும் திருமணங்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானது குழந்தைத் திருமணங்கள். இந்தக் குழந்தைத் திருமணங்களைக் கண்டிப்பதற்கும் களைந்தெடுப்பதற்கும் சங்க பரிவார நிறுவனங்கள் ஏன் முன்வருவதில்லை என்ற கேள்வியை இந்தத் தலைமுறையினர் முன்வைக்கின்றனர். பாரத் என்றோ - ஹிந்துஸ்தான் என்றோ உங்கள் விருப்பப்படி இந்த நாட்டை அழைத்துக்கொள்ளுங்கள். எங்கள் எதிர்காலம் பிறந்துவிட்டது. எங்களைப் பொறுத்தவரை இது டிஜிட்டல் இந்தியாஎன்று அவர்கள் உரக்கச் சொன்னதை ஆட்சியாளர்கள

Thanks : Mohamed Ali Yousuf

வியாழன், 18 செப்டம்பர், 2014

நான் விரும்பிய எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை.


ஆனால் தேவையான எல்லாமும் எனக்கு இறைவனிடம் இருந்தது கிடைத்தது..
நான் எனக்கு பலம் வேண்டும் எனக் கேட்டேன்.
இறைவன் எனக்கு கஷ்டங்களைக் கொடுத்து என்னை பலமுள்ளவன் ஆக்கினான்.
நான் எனக்கு அறிவு வேண்டும் எனக் கேட்டேன்.
இறைவன் எனக்கு பிரச்னைகளைக் கொடுத்து அவைகளை தீர்க்கச் செய்தான்.
நான் எனக்கு முன்னேற்றம் வேண்டும் எனக் கேட்டேன்.
இறைவன் எனக்கு சிந்தனையையும் சக்தியையும் கொடுத்து உழைக்கச் செய்தான்.
நான் எனக்குத் தைரியம் வேண்டும் எனக் கேட்டேன்.
இறைவன் எனக்கு ஆபத்துக்களை கொடுத்து அவைகளை எதிர்கொள்ளச் செய்தான்.
நான் எனக்கு சாதகங்கள் புரிய வேண்டும் எனக் கேட்டேன்.
இறைவன் எனக்கு சந்தர்ப்பங்களைத் தந்தான்.
நான் விரும்பிய எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை.
ஆனால் தேவையான எல்லாமும் எனக்கு இறைவனிடம் இருந்தது கிடைத்தது... (யாரோ)..
Engr.Sulthan

ஜித்தா வில் பேராசிரியரின் சொற்பொழிவு நிகழ்ச்சி


செவ்வாய், 16 செப்டம்பர், 2014

தனி இடஒதுக்கீட்டில் தமுமுகவின் பங்கு


அல்ஹஸா சிறப்புக் கூட்டம்.


தமுமுக கலங்கரை விளக்கம் - 2008


ஷிர்கும், தக்லீதும் - மௌலவி இஸ்மாயில் ஸலபி


உங்க ஏரியா போஸ்ட் மேன் யார்...?



அஞ்சல் துறையின் தேவை மிகவும் குறைந்து விட்டாலும், இன்னமும் அரசு நிறுவனங்களில் இருந்து வரும் தபால்கள், அரசு வேலைக்கான தபால்கள் போன்றவை தபால் துறை மூலமாக மக்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மணியார்டரை இப்போதும் நிறைய மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
அந்த வகையில், ஏதாவது ஒரு முக்கியமான தபால் நமக்கு வந்து சேர வேண்டியிருக்கும் நிலையில், நாம் வீட்டில் இல்லாததால் அது திருப்பி அனுப்பப்படுகிறது. அல்லது வீட்டு வாசலிலோ, கதவிலோ வைத்து விட்டு செல்வதால் தவற நேரிடுகிறது.
இதுபோன்ற பிரச்னைகளை தீர்க்க, தபால்காரர்களின் முழு விலாசம், மொபைல் நம்பருடன் அவர்கள் எந்தெந்த ஏரியாக்களில் தபால் பட்டுவாடா செய்வார்கள் என்ற தகவலோடு www.chennaipost.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
இதன் மூலம், பொதுமக்கள் தொலைபேசி மூலம் தபால்காரர்களை தொடர்பு கொண்டு, தங்களது தபால் குறித்த தகவலை தெரிந்து கொள்ளலாம்.
நன்றி: தினகரன்.

தமுமுக கொள்கைப் பாடல்கள் - பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி


தேவிபட்டினம் ஊராட்சி தலைவர் இந்துக்களுக்கு விரோதியா?


சனி, 13 செப்டம்பர், 2014

ஹாஜிகளுக்கான (2014) மாபெரும் இரத்ததான முகாம்...

அல்லாஹ்வின் திருப்பெயரால்....






கடல் கடந்தாலும் கடமையில் கண்ணாக இருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அல்கோபர் கிளை  தாயகத்தில் செயல்படும் கழகத்தின் அனைத்து அணிகளையும் கனிகளாகச் சுவைக்கிறது என்றால் மிகையல்ல.

குறிப்பாகக் குருதிக் கொடையில் முன்னுதாரனமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சவூதி அரேபியாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் அவசரத் தேவைக்கான இரத்ததானம் முதல் வருடாந்தோறும் ஹாஜிகளுக்காகவும் இரத்ததான முகாம்களை நடத்திவருகிறது.

அதன் தொடர்ச்சியாக சவூதிஅரேபியா கிழக்குமாகண தமுமுகவின் அல்கோபர் கிளை 2014ஆம் ஆண்டிற்க்கான ஹஜ் பயணிகளுக்காக அக்ரபியாவில் அமைந்துள்ள தம்மாம் பல்கலைக்கழகத்துடன் (கிங் ஃபஹத் மருத்துவமனை) இணைந்து 12-9-2014 அன்று மாபெரும்  இரத்தான முகாமை நடத்தியது. மதியம் சுமார் 12 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிவரை மக்கள் ஆர்வத்துடன் இரத்ததானம் செய்தார்கள். சுமார் 250 பேர் கலந்து கொண்ட இந்த இரத்ததான முகாமில் மருத்துவமனையின் வசதிக்கேற்ப சுமார் 120பேர் குருதிக் கொடையளித்தனர். குறிப்பாக தன்னலம்  மற்றும் ஜாதிஇ மத பேதமற்ற தமுமுகவின் செயல்பாட்டால் கவரப்பட்ட மாற்று மத சகோதரர்களும் மிகவும் ஆர்வத்துடன் இரத்ததானம் செய்தனர்.
 
இந்த முகாமை அல்கோபர் கிளை நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். மண்டல நிர்வாகிகள் உட்பட அனைவரும் கலந்து  இந்த முகாமை சிறப்பித்தனர்.

முகவை சீனி முஹம்மது
விவகாரத்துறைச் செயலாளர் -- தமுமுக
கிழக்கு மாகாணம் சவூதிஅரேபியா

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

அல்கோபர் தமுமுகவின் ஹாஜிகளுக்கான மாபெரும் இரத்ததான முகாம்....

அல்லாஹ்வின் திருப்பெயரால்....
 


இறைவனின் மாபெரும் கிருபையால் அல்கோபர் தமுமுகவின் ஹாஜிகளுக்கான மாபெரும் இரத்ததான முகாம்....

போலி சித்தாந்தத்தைப் பரப்பி அதன் மூலம் வருமானம் ஈட்டிவருபவர்களுக்கு மத்தியில் பல போராட்டக்களங்களில் இரத்தம் சிந்தி மேலும் இரத்தக் கொடைகொடுத்து ஒரு கட்டத்தில் உயிர் தியாகம் செய்து மக்கள் நலப்பணியில் இறைப்பொருத்தத்தை மட்டும் எதிர் நோக்கி உழைத்துக் கொண்டிருக்கும் ஒரே மாபெரும் பேரியக்கம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்றால் அது மிகையல்ல.

தமுமுகவின் மயில் கல்லாக விளங்கும் சவூதிஅரேபியா கிழக்கு மாகாண தமுமுகவின் உதயமாக விளங்கும் அல்கோபர்  தமுமுக கிளை வருடாந்தோறும் ஹாஜிகளுக்காக இரத்ததானம் செய்து வருகிறது. இந்த சேவையை பாராட்டி சவூதிஅரேபியா அரசின் கிங் ஃபஹத் மருத்துவமனை பலமுறை அல்கோபர் தமுமுகவிற்கு விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்ஷாஅல்லா அதன் தொடர்ச்சியாக 2014ஆம் ஆண்டு ஹஜ் பயணிகளுக்காக வரும் 12-9-2014 அன்று கிங் ஃபஹத் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இரத்ததான முகாமை நடத்த உள்ளது.

இந்த முகாம் சிறப்பாக நடக்க பிரார்த்திப்பதோடு முகாமில் கலந்து குருதி கொடைகொடுக்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறது அல்கோபர் தமுமுக



ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் கூடுதல் கழிப்பறை





இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி, மண்டபம் ஊராட்சி ஒன்றியம், தங்கச்சிமடம் ஊராட்சி புனித யாகப்பர் உயர் நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் கூடுதல் கழிப்பறை கட்டுவதற்காக ரூ.4.50 ( நான்கரை லட்சம் ) வழங்கப்பட்டிருந்தது. தற்போது பணிகள் முடிவடைந்து இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் M.H.ஜவாஹிருல்லா MLA அவர்கள் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்கள். 

இந்த நிகழ்ச்சியில் தங்கச்சி மடம் ஊராட்சி மன்ற தலைவர் V.K.ஞானசீலன், பாம்பன் ஊராட்சி மன்ற தலைவர் பேட்ரிக், பள்ளியின் தாளாளர் இன்பராஜ், ஊர் தலைவர் பெர்க் மான்ஸ், தங்கச்சிமடம் அதிமுக பிரமுகர் M.S.அருள்,ஜேசு,எம்ரிட்,சைமன்,ராயப்பன்,ரோச்,சின்னதம்பி மற்றும் ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் தமுமுக மாவட்ட செயலாளர் B.அன்வர் அலி, ஒன்றிய தலைவர் பாக்கர் அலி,தங்கச்சிமடம் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் சதாம் நசுருதீன்,மைதீன் ராஜா,ரபாத்,யாசர் அரபாத்,ஆசிக் சுல்தான்,ஆகியோர் கலந்து கொண்டனர்.

வியாழன், 17 ஜூலை, 2014

'இஸ்ரேல்' விவாதத்தை தடுக்க போராடிய சுஷ்மாவின் முயற்சி தோல்வி!!




டெல்லி: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலை குறித்து ராஜ்யசபாவில் விவாதிக்க கூடாது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விடுத்த கோரிக்கையை சபாநாயகர் ஹமீத் அன்சாரி நிராகரித்துவிட்டார்.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் அட்டூழிய தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் 200க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல் நிகழ்த்தி வரும் இனப்படுகொலையை நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுமே கண்டித்து வருகின்றன. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

புதன், 16 ஜூலை, 2014

இஸ்ரேலின் இனப்படுகொலை.. ராஜ்யசபாவில் விவாதத்தை தடுத்த சுஷ்மா ஸ்வராஜ்- கொந்தளித்த எதிர்க்கட்சிகள்!!



டெல்லி: இஸ்ரேல் நடத்தி வரும் பாலஸ்தீன இனப்படுகொலை குறித்து ராஜ்யசபாவில் விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தலையிட்டு அந்த விவாதம் நடைபெறாமல் தடுத்து நிறுத்தினார். காஸா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வருகிறது. இஸ்ரேலின் இந்த கொடூர தாக்குதலில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். காஸா பகுதிக்குள் நுழைந்திருக்கும் இஸ்ரேலிய தரைப்படையோ அந்த மண்ணின் மக்களை சொந்த மண்ணைவிட்டு வெளியேறச் சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

நாடாளுமன்றம் பாதிப்பு 

ஆனால் மத்திய அரசோ இதுபற்றி விவாதிக்க மறுத்து வருகிறது. இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

 ராஜ்ய சபாவில் இஸ்ரேலின் மிருகத்தனத்தைப் பற்றி விவாதிக்க எத்தனிக்கும் போது யூதர்களின் நகலான சுஷ்மா அதைத் தடுக்க முற்பட்டார். அப்பாவி பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருந்த எதிர்கட்சிகள் வெகுட்டெழுந்தனர். இதனால் சபை ஒத்திவைக்கப்பட்டது.

முன்பு இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட விவகாரத்திலும் எதிர்கட்சித் தலைவராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ், நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் தீர்மானம் கொண்டுவரவும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார். 

அது சரி இனம் (மிருகம்) இனத்திற்குத் தானே பரிந்துபேசும்.



திங்கள், 14 ஜூலை, 2014

புதிய வேலை வாய்ப்புக்களை அடையாளம் காண புதிய இணைய தள வசதி:மத்திய அரசு

திறமையுள்ளவர்களுக்கு உதவும் வகையில் புதிய வேலைவாய்ப்புக்களை அடையாளம் கண்டு, விண்ணபிக்க ஏதுவாக, மத்திய அரசு புதிய இணையத் தளத்தை தொடங்கியுள்ளது.
வேலைக்கு ஆள் தேவை என்று யார், எந்த நிறுவனம் வேண்டுமானாலும் இந்த இணைய தளத்தில் தகவல் வெளியிடலாம். அதுமட்டுமின்றி வேலை தேடுவோரும், தங்களுக்கு இந்த வேலை தேவை என்று விபரம் வெளியிடலாம். 150 பிரிவின் கீழ் இந்த வேலைவாய்ப்புக்கான விவரங்கள் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
www.niesbudnaukri.com என்கிற இணைய தளத்தில் இந்த விவரங்களை அறிந்து பதிவு செய்யலாம், தெரிந்துக் கொள்ளலாம்.

இலங்கை மீதான ஐ.நா. விசாரணை; இந்தியா ஆதரிக்காது: இந்திய வெளியுறவுத்துறை!

இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைக்குழு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகளை இந்தியா ஆதரிக்காது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பேச்சாளர் சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார். 
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸூக்கும் இடையில் புதுடில்லியில் நேற்று வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பேச்சாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்குழு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் இந்த சந்திப்பின் போது ஆராயப்பட்டதா என்றும், இந்த விவகாரத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்துள்ள அவர், ”ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் விசாரணைக் குழுவை அமைக்கும் விவகாரத்தில் இந்தியா ஏற்கனவே தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறது. குறிப்பிட்ட அந்த பிரிவை எதிர்த்து வாக்களித்தது. அந்த நிலைப்பாட்டை இந்திய அரசு மாற்றவில்லை. அதே நிலைப்பாடே தொடர்கிறது” என்றுள்ளார்.

புதன், 2 ஜூலை, 2014

சென்னை கட்டட விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தமுமுகவினர்!

சென்னை கட்டட விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தமுமுகவினர்!

சென்னை: சென்னை கட்டட விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தமுமுக அமைப்பினரும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
சென்னை போரூர் அருகே மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த 11 மாடிக் கட்டடம் நேற்று மாலை திடீரென இடிந்து விழுந்ததில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிய வருகின்றது. மீட்புப் பணிகள் தொடர்கின்றன.
இந்த நிலையில் இந்த விபத்தில் சிக்கியவர்களை தமிழக தீயணைப்பு படை, மெட்ரோல் ரயில் பணியாளர்கள், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆகியோருடன் தமுமுகவின் 5 ஆம்புலன்ஸ்களுடன் காஞ்சி(வடக்கு) மாவட்ட தமுமுகவினர் 50 பேர் இணைந்து மீட்புப் பணி செய்து வருகின்றனர்.
மாவட்டச் செயலாளர் சலீம்கான் தலைமையில் மாவட்ட தொண்டரணிச் செயலாளர் எஸ்.ஆர்.ஏ.இப்ராஹிம், மாவட்ட மாணவரணிச் செயலாளர் கௌஸ் பாஷா, மாணவர் இந்தியா மாவட்டச் செயலாளர் எஸ். தமீம் அன்சாரி உட்பட 50 தமுமுகவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கட்டட இடிபாட்டிற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
INNERAM

ரமலான் மாதம் முழுவதும் அதிகாலைகுடிநீர் விநியோகம் செய்ய தமுமுக வலியுறுத்தல்



 ரமலான் மாதம் முழுவதும் அதிகாலைகுடிநீர் விநியோகம் செய்ய தமுமுக வலியுறுத்தல்
காரைக்கால்: ரமலான் மாதம் முழுவதும், சஹர் நேரத்தில், அதிகாலை 3 முதல் 5 மணிவரை குடிநீர் விநியோகம் செய்யவேண்டும் என காரைக்கால் மாவட்ட தமுமுக வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து, காரைக்கால் மாவட்ட தமுமுக செயலாளர் அப்துல் ரஹீம், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
"இஸ்லாமியர்கள் புனித ரமலான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பு இருப்பது வழக்கம். அவ்வாறு நோன்பு இருக்கும் 30 நாட்களும், அதிகாலை 3 மணி முதல் 5 மணிக்குள், குளித்து, சஹர் உணவு சமைத்து, நோன்பு துவக்குவார்கள். அந்த நேரத்தில், மாவட்ட பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் அதிமுக்கியமாகும்.
எனவே, அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் காரைக்கால், திருநள்ளாறு, திரு-பட்டினம், நிரவி, கருக்கன்குடி, நல்லம்பல், சேத்தூர், அம்பகரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை தடையில்லாமல் வழங்க ஆவணம் செய்யவேண்டும்". இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திங்கள், 30 ஜூன், 2014

அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...


உலகில் அதிக இடங்களில் சமுதாயச் சேவை செய்துவருகிறது தமுமுக. அதன் மையில் கல்லாக விளங்கும் சவூதிஅரேபியா கிழக்கு மகாணத்தின் அல்கோபர் கிளை வருடாவருடம் ஹஜ் மாதத்தில் ஹாஜிகளுக்காக சிறப்பான முறையில் இரத்தானம் செய்துவருகிறது. அதை பாராட்டும் விதமாக அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம் வழங்கியது. அதை அல்போகர் கிளைச் செயலாளர் சகோ.ஹாஜாபஷிர் பெற்றுக் கொண்டார்.

சவூதிஅரேபியா அராம்கோ மருத்துவமனையில் அல்கோபர் தமுமுக இரத்ததானம்....

அல்லாஹ்வின் திருப்பெயரால்....




கடல் கடந்தாலும் கழகப்பணியை சலைக்காமல் செய்துவரும் தமுமுக கடந்த 26-6-2014 அன்று டெஹரானில் உள்ள அராம்கோ மருத்துவமனைக்கு அவசரத் தேவைக்காக அல்கோபர் தமுமுக இரத்தானம் செய்தது.

செவ்வாய், 24 ஜூன், 2014

மனிதநேயப் பணி





மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த பெண்கள் உட்பட அப்பாவி மக்கள் 17 பேரை வேலை வாங்கி தருவதாக கூறி திண்டுக்கலுக்கு அழைத்து வந்து ஏமாற்றி அவர்களிடம் இருந்த பணத்தை பறித்து விதியில் விட்டுவிட்டு சில கயவர்கள் சென்றுவிட்டனர் பின் தகவல் அறிந்து தமுமுக வினர் விரைந்து சென்று அவர்களுக்கு உணவு அளித்து பொருள் உதவி செய்து அவர்களை அவர்கள் ஊருக்கு அனுப்பிவைத்தனர் அவர்களுக்காக துஆ செயுங்கள்.

புதன், 18 ஜூன், 2014

முஸ்லிம்கள் மீது திட்டமிட்டே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது: செல்வம் அடைக்கலநாதன்

மோதல்கள் முடிவடைந்த பின்னரும் இலங்கையில் சிறுபான்மை இன மக்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை அளுத்கம, பேருவளைக் கலவரங்கள் வெளிப்படுத்துவதாகவும், அந்த தாக்குதல் சம்பவங்கள் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்தே நடத்தப்பட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 
களுத்துறை மாவட்டத்தின் அளுத்கம மற்றும் பேருவளைப் பகுதியில் இடம்பெற்ற கலவரங்கள் தொடர்பில் கண்டனம் தெரிவித்து அவர் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவரின் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சிறுபான்மை மக்களை தொடர்ந்தும் நசுக்கும் நோக்குடன் அளுத்கம, பேருவளை, களுத்துறை பிரதேசங்களில் முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாகவும், ரெலோ அமைப்பு சார்பாகவும் வன்மையாக கண்டிக்கின்றேன்.
இச் சம்பவத்தினை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இது முஸ்லிம் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சம்பவத்தின் பின்னணியில் பொதுபலசேனா மட்டுமல்ல, அரசுக்கும் தொடர்பு இருப்பதாகவே சந்தேகிக்க வேண்டியுள்ளது. வன்முறைச் சம்பவங்களையடுத்து ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த போதும்கூட முஸ்லிம்கள் மீது வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது சாதாரண விடயமல்ல. இலங்கையில் பொலிஸ் பிரிவும் இராணுவமும் என்ன செய்கின்றது?
பயங்கரவாதத்தை முறியடித்ததாக மார் தட்டிக் கொள்ளும் அரசும் அரச படைகளும் வன்முறைச் சம்பத்தை கட்டுப்படுத்த முடியாதவர்களாக இருக்கின்றார்களா? அல்லது வன்முறையின் பின்புலத்தில் இருந்து செயற்படுகின்றார்களா என்பதை முஸ்லிம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதனால் சிறுபான்மை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஜனநாயக ரீதியாக தமது உரிமைகளை பெறவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதையே இது வெளிப்படுத்தியுள்ளது.
எனவே தமிழ், முஸ்லிம் உறவைப் பலப்படுத்தி எமது உரிமைக்காக நாம் தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டியவர்களாக நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். எங்களுக்குள் ஒரு பலம் அமையும் போதே எங்களை இன்னொருவர் அச்சுறுத்தும் நிலையை நாங்கள் இல்லாமல் செய்யமுடியும்.
இந்த சம்பவம் அளுத்கமையுடன் முடிவடையும் என்று கருதிவிட முடியாது. கடந்த காலத்தில் இந்த நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் மக்களுக்காக வீதியில் இறங்கி நீதி கேட்க தயாராகவுள்ளது. எனவே முஸ்லிம் மக்களை பிரதிநிதிப்படுத்துவதாக தெரிவித்து அரசுக்கு முண்டு கொடுத்து பாராளுமன்ற கதிரைகளை சூடேற்றும் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அப்பாவி முஸ்லிம் மக்களுக்காக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TM

தாமதமான நீதிக்கு என்ன பெயர்?

செய்யாத குற்றத்துக்காகச் சிறையில் வாடும் முஸ்லிம்கள்… அவர்கள் மீது சுமத்தப்படும் பழிகள்...
“இந்த வழக்கு, தேசத்தின் நேர்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பானது. வழக்கின் தன்மை துயரம்மிக்கது. இத்தகைய வழக்கை இவ்வளவு திறமையற்ற முறையில் புலனாய்வு அமைப்புகள் நடத்தியிருப்பது வேதனையளிக்கிறது. பல உயிர்களைக் கொன்றுகுவித்த உண்மையான குற்றவாளிகளுக்குப் பதிலாக, காவல் துறை அப்பாவிகளைக் கைதுசெய்து கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, தண்டனை வழங்கக் காரணமாக இருந்துள்ளது...

எனவே, மேல்முறையீட்டாளர்கள் அனைவரையும் விடுதலை செய்கிறோம். அவர்கள் மீதான குற்றச்சாட்டுக் கள் அனைத்தையும் தள்ளுபடி செய்கிறோம்.”

16-வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளி வந்த மே 16 அன்றுதான் இத்தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக் மற்றும் இ.கோபால் கெளடா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கியது. 33 பேர் கொல் லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்பற்றிய தீர்ப்பு அது.

அக்‌ஷர்தாம் கோயில் தாக்குதல்

குஜராத் தலைநகர் காந்திநகரில் அக்‌ஷர்தாம் கோயில் மீது 24-9-2002 அன்று தாக்குதல் நடத்தத் தொடங்கிய பயங்கரவாதிகள், அடுத்த நாள் காலை வரை தாக்குதலைத் தொடர்ந்தனர். இதில் 33 பேர் கொல்லப்பட்டனர். 86 பேர் காயமடைந்தனர். இந்தக் கொலைக்கும் தாக்குதலுக்கும் காரணமான பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பயங்கரவாதிகளுக்கு உதவியவர்கள், அவர்களோடு சேர்ந்து சதி செய்தவர்கள் என்று ஆறு பேர் மீது பொடா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த நீதிமன்றம் 1.7.2006 அன்று தீர்ப்பு வழங்கியது. ஆதம்பாய் அஜ்மீரி, அப்துல் கயூம் முஃப்தீசாப் முகமது பாய், சந்த்கான் ஆகியோருக்கு மரண தண்டனையும், முகமது சமிம் ஹனீப் சேக்குக்கு ஆயுள் தண்டனையும், அப்துல்லாமியா யாசீன்மியாவுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், அல்ட்டாஃப் மாலீக்குக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இத்தீர்ப்பை குஜராத் உயர் நீதிமன்றம் ஜூலை 2010-ல் உறுதிசெய்தது. இதன் மீதான மேல்முறையீட்டின் மீதுதான் தண்டனைகளையும் குற்றச்சாட்டுகளையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. குற்றம் நிரூபணமாகவில்லை என்று நீதிமன்றம் சொல்லவில்லை. மாறாக, இவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று விடுவித்தும், குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்துள்ளது.

குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்து தண்டனைகளை ரத்துசெய்ததற்கான பல காரணங்களை உச்ச நீதிமன்றம் தனது 281 பக்கத் தீர்ப்பில் கூறியுள்ளது. அதில், ஒரு அம்சத்தை மட்டும் இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

மரண தண்டனை விதித்ததற்குக் காரணமாக இருந்த வற்றில் முக்கியமானவை என்று பொடா நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்டவை, பயங்கரவாதிகளுக்கு ‘சதிகாரர்களால்' உருது மொழியில் எழுதப்பட்டதாகச் சொல்லப்பட்ட இரண்டு கடிதங்கள்.

இரண்டு பயங்கரவாதிகளும் குண்டுகளால் துளைக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். ஒருவர் உடலில் 46 குண்டுகளும், மற்றொருவர் உடலில் 60 குண்டுகளும் துளைத்திருந்தன. அவர்களின் ஆடைகள் முழுவதும் ரத்தமும் சேறுமாக இருந்தது. அப்படி இருந்தபோது அவர்கள் சட்டையில் இருந்த கடிதங்கள் மட்டும் புத்தம் புதிதாக மடிப்புக் கலையாமல் இருந்திருக்கின்றன. இதிலிருந்தே அவை, குற்றம்சாட்டப்பட்டவர்களை வழக்கில் சிக்க வைப்பதற்காகப் பின்னர் சேர்க்கப்பட்டவை என்பது எளிதில் விளங்கும்.

நீதி பிழைத்தது

உச்ச நீதிமன்றம் தீவிர கவனம் செலுத்தாமல் இருந்திருந்தால், நிச்சயமாக மூன்று பேரும் தூக்கிலிடப் பட்டிருப்பார்கள். அவர்களது குடும்பத்தினர்களும் உறவினர்களும் வழிவழியாக ஒதுக்கப்பட்டும், சபிக்கப்பட்டும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பார்கள். எத்தனை கொடூரமான நிகழ்வு இது. ஆனால், பெரும்பாலான பத்திரிகைகள் இதுகுறித்து ஒரு வார்த்தைகூட எழுதவில்லை. இந்த உண்மை யாருக்கும் தெரியாமலேயே போய்விட்டது.

இப்படி நடப்பது முதல்முறையும் அல்ல. இதுவே, கடைசி முறையாகவும் இருக்கப்போவதில்லை.

8-9-2006-ல் மகாராஷ்டிரத்தின் மலேகானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 37 பேர் கொல்லப்பட்டார்கள். 125 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கை விசாரித்த மகாராஷ்டிரத்தின் பயங்கரவாத எதிர்ப்புக் குழு மற்றும் சி.பி.ஐ-யால் முஸ்லிம் இளைஞர்கள் 9 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

2013 வரை ஏழு ஆண்டுகள் அவர்கள் அனைவரும் சிறையில்தான் இருந்தனர். சி.பி.ஐ. விசாரித்து, இந்த ஒன்பது பேரும் குற்றவாளிகள் என்று வழக்கைக் கொண்டுசென்ற பின்னர், எதிர்பாராதவிதமாக இந்தக் குற்றத்தைச் செய்ததாக அசீமானந்தா ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தார். இதன் பின்னர்தான் அந்த ஒன்பது முஸ்லிம் இளைஞர்களும் வெளியே வந்தனர். இல்லையேல், அவர்களில் சிலருக்குத் தூக்குத் தண்டனை கிடைத்திருக்கக் கூடும். அவர்களது குடும்பத் தினருக்குப் பழிச்சொற்கள் பட்டமாகக் கிடைத்திருக்கும்.

மிகப் பெரிய அவமானம்

இன்னொரு முக்கியமான வழக்கு, ஐதராபாத்தில் மெக்கா மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தொடர் பானது. இந்த வழக்கிலும் பின்னர் குற்றம்சாட்டப்பட்டு ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் அசீமானந்தா. அதற்கு முன்னதாக 70 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் 2013-ல்தான் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த மூன்று வழக்குகளும் ஒன்றை வெளிப்படுத்து கின்றன. முதலாவது வழக்கு, குஜராத்தில் நடந்தது. அங்கு பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. மலேகான் வழக்கும் மெக்கா மசூதி வழக்கும் காங்கிரஸ் ஆண்ட மாநிலங்களில் நடைபெற்றன. இந்த வழக்குகளை விசாரித்ததில் மாநிலத்தில் உள்ள புலனாய்வுக் குழுக்கள் மட்டுமின்றி மத்திய புலனாய்வுக் குழுவும் ஈடுபட்டுள்ளது. ஆயினும் அந்தக் குற்றங்களில் தொடர்பே இல்லாத 70 பேர், ஆறு ஆண்டுகள் முதல் 11 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ஆளும் அரசு என்பதையும் தாண்டி, சிறுபான்மை வெறுப்பு அரசு நிறுவனங்களுக்குள்ளும் புகுந்திருப்பது ஆபத்தான அறிகுறி.

இவர்களில் பெரும்பாலானவர்களின் வயது 25-க்கும் குறைவு. இளமைக் காலத்தின் பொன்னான காலத்தைக் குற்றமேதும் செய்யாமலேயே சிறையில் கழித்துள்ளனர். வெளியே வரும்போது குடும்பமும் சமூகமும் இவர் களைச் சந்தேகத்துடனேயே பார்க்கும். ஒருவேளை இவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டிருந்தால், அவர்களின் சந்ததியும் ‘பயங்கரவாதிகளின் சந்ததி' என்று சமூகத்திலிருந்து விலக்கிவைக்கப்பட்டிருக்கும்.

இந்தியாவில் நீதி வழங்கும் முறைக்கும், ஜனநாயகத்துக்கும் இது மிகப் பெரிய அவமானம். ஆபத்தானதும்கூட. இன்று முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த ஆபத்து, நாளை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதை அனைத்துத் தரப்பினரும் மனதில் இருத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.
INNERAM

ஈரோட்டில் பாஜகவுக்கு எதிராக உதயமாகியுள்ள மோடி பேரவை- அடிதடி, அலுவலகம் உடைப்பு


ஈரோடு: ஈரோட்டில் பாஜகவினருக்கும், பிரதமர் நரேந்திரமோடி பெயரில் 'மோடி பேரவை' என்ற அமைப்பு நடத்திய கோஷ்டிக்கும் நடுவே தகராறு முற்றியுள்ளது. மோடி பேரவை அலுவலகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டடது. ஈரோட்டில் மோடி பேரவை என்ற பெயரில் அமைப்பு தொடங்கியுள்ள சிலர், பாஜக சின்னமான தாமரை, பிரதமர் மோடியின் உருவப்படங்களை பயன்படுத்திவருகின்றனர். இதையடுத்து, இரு தினங்களுக்கு முன்னர் உள்ளூர் பா.ஜனதாவினர் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்தனர். அதில், சிலர் பா.ஜனதாவின் பெயரை தவறாக பயன்படுத்தி நிதி வசூலில் ஈடுபடுவதாகவும், அவர்கள் பா.ஜனதா உறுப்பினர்கள் அல்ல என்றும், பா.ஜனதா மாநில தலைமையிடமிருந்தோ அல்லது தேசிய தலைமையிடமிருந்தோ எவ்வித முன் அனுமதியும் பெறாமல் கட்சியின் சின்னத்தையும், பிரதமர் மோடியின் பெயரையும் தவறாக பயன்படுத்துவதாகவும் கூறியிருந்தனர். இந்நிலையில், 'மோடி பேரவை'யின் அலுவலகத்திற்குள் சிலர் புகுந்து அங்குள்ள ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் மேஜை நாற்காலிகளை அடித்து நொறுக்கிவிட்டு, தப்பிச்சென்றுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் பா.ஜனதாவினர்தான் என்று கூறப்படுகிறது. இதேபோல மோடி பேரவையை சேர்ந்தவர்கள் வேன் ஒன்றில் சென்றபோது அவர்கள் வழிமறிக்கப்பட்டு கற்கள் மற்றும் கம்புகளால் தாக்கப்பட்டதாகவும், இருப்பினும் டிரைவர் சாமர்த்தியத்தால் அவர்கள் தப்பியதாகவும் போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த சம்பவங்களால் ஈரோடு பாஜக வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.


திங்கள், 16 ஜூன், 2014

இலங்கை தூதரகம் முன்பு மாபெரும் முற்றுகைப் போராட்டம்


அளுத்கம- பேருவளை கலவரம்: மத அடிப்படைவாதம் எனும் கருவி!




இலங்கை பல மோசமான விடியல்களைக் கண்டிருக்கிறது. அதுவும், மதவாதமும், இனவாதமும் சேர்ந்து மக்களையும், உடமைகளையும், உரிமைகளையும் வேட்டையாடிய விடியல்களைக் கண்டிருக்கிறது. அப்படியான  அசம்பாவீதத்தின் வடுக்களோடு விடிந்த மற்றொரு காலையிலேயே இன்றைய ‘எமது பார்வையில்’ பகுதியை எழுத வேண்டிய ஏற்பட்டிருக்கிறது.
மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் குறிப்பிடளவில் வாழும் அளுத்கம மற்றும் பேருவளைப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஆரம்பித்த மோதல்கள் கலவரமாக மாறி சில உயிர்களை பலிவாங்கியிருக்கிறது. 80க்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருக்கிறார்கள். பல வீடுகளும், 10க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களும் எரியூட்டப்பட்டிருக்கின்றன. அதன் கொந்தளிப்பு கொழும்பின் தெஹிவளையில் இருக்கும் முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் மருந்தகத்தை குண்டர் குழுவொன்று அடித்து உடைத்து தீவைக்கும் அளவுக்கு சென்றது.


பொது பல சேனா என்கிற பௌத்த அடிப்படைவாத அமைப்பு பொலிஸாரின் அனுமதியோடு அளுத்கம பகுதியில் நேற்று மாலை ஊர்வலத்தினையும், கூட்டத்தினையும் நடத்தியது. அதன்போதே, பொது பல சேனாவினருக்கும், அப்பகுதி முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு, அது கலவரமாக மாறியது. இதன்போது,, வெளியிடங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட குண்டர்கள் அப்பகுதி மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.



“விலை குறைவாக கிடைக்கின்றது என்பதற்காக, முஸ்லிம் கடைகளில் பொருட்களை வாங்க வேண்டாம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூளை இல்லை. இருந்திருந்தால், முஸ்லிம் ஒருவருக்கு நீதியமைச்சைக் கொடுத்திருப்பாரா?” என்று நேற்றைய கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசிய பொது பல சேனாவின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டிருக்கிறார். 



பொது பல சேனாவும், செயலாளரான கலபொட அத்தே ஞானசார தேரரும் அரசின் ஆதரவோடு இயங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு பல தரப்பினாலும் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. முஸ்லிம்கள் பின்பற்றும் ஹலால் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் நடத்தியதன் மூலம் பொது பல சேனா பல தளங்களினதும் கவனத்துக்கு வந்தது. அப்போது அந்த அமைப்பின் அலுவலகமொன்றை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ திறந்து வைத்திருந்தார்.



முஸ்லிம்களை பிரதான இலக்காகவும், மற்றைய சிறுபான்மை மதங்களான இந்து, கிறிஸ்தவர்களை பகுதி இலக்காகவும் கொண்டே பொது பல சேனா தன்னுடைய செயற்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது. அந்தச் செயற்திட்டங்களை சிறுபான்மையினரை அதிகம் கோபத்துக்குள்ளாக்கும் செயற்பாடுகளாகவே இருந்து வருகிறது. பல நேரங்களின் பொலிஸாரை மீறிய அதிகாரத்தைப் பெற்றவர்கள் போல செயற்படுகின்றார்கள். அண்மையில் கூட ஜாதிக பல சேனா என்ற அமைப்பு கொழும்பில் நடத்தவிருந்த ஊடகவியலாளர் மாநாட்டை பலவந்தமாக உள்நுழைந்து பொது பல சேனாவின் பிக்குகள் நிறுத்தியிருந்தனர்.



அடிப்படையில் பொது பல சேனா, பௌத்த மதத்தையும், நாட்டையும் காப்பாற்றுவதே தன்னுடைய இலக்கு என்று கூறிக்கொள்கிறது. ஆனால், அதன் உள்நோக்கங்கள் அல்லது செயற்பாடுகள் மிகமோசமான விளைவுகளை நாட்டில் மீண்டும் ஏற்படுத்தி விடக் கூடும் என்கிற அளவிலேயே இருக்கின்றது.



முஸ்லிம் மக்கள் செறிவாக வாழும் அளுத்கம பகுதில் கூட்டமொன்றை நடத்தி, அங்கு வைத்து முஸ்லிம்களின் அழிவு தொடங்கிவிட்டது என்பது மாதிரியான கருத்துக்களை கலபொட அத்தே ஞானசார தேரர் வெளியிடுகிறார். இது, என்ன மாதிரியான கொந்தளிப்பை முஸ்லிம் சமூகத்தினரிடையே ஏற்படுத்தும்? அதன் விளைவுகள் தெரிந்த நிலையிலேயே இவ்வாறான செயற்பாடுகளை பொது பல சேனா முன்னெடுக்கின்றது என்று நம்ப வேண்டியிருக்கிறது. நாட்டின் மத அடிப்படைவாதம் எல்லாத் தரப்பிற்குள்ளும் புற்றுப்போல பெருகிக் கொண்டேயிருக்கிறது. அதில், பெரும்புற்றுக்கள் வெளியே தெரிய ஆரம்பித்திருக்கின்றன.



முஸ்லிம் மக்களுக்கு எதிரான பொது பல சேனாவின் சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளை அரசாங்கம் இன்னமும் கட்டுக்குள் கொண்டு வரவில்லை. அதுவும், இலங்கையின் பிரதான அனைத்து முஸ்லிம் கட்சிகளும் இப்போது அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளாகவே இருக்கின்றன. அதிக தருணங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை சர்வதேச ரீதியாக முஸ்லிம் நாடுகளே காப்பாற்றுகின்றன. இவ்வாறான நிலை இருக்கின்ற போதிலும், இலங்கையிலுள்ள முஸ்லிம்களுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.



“எனது மக்களை பாதுகாப்பதற்கு தவறிவிட்ட நான், இந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பதற்கு வெட்கப்படுகின்றேன். எனது மக்களை காப்பாற்ற முடியாத நிலையில், இந்த அரசாங்கத்தில் தான் தொடர்ந்து இருக்கவேண்டுமா?“ என்று அளுத்கம பிரதேசத்திற்கு இன்று திங்கட்கிழமை காலை விஜயம் செய்த சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்திருக்கிறார்.



அளுத்கம- பேருவளைப் பகுதியில் கலவரம் இடம்பெற்றவேளை ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் இல்லை. ஜனாதிபதிக்கு அடுத்து நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களைக் கையாளும் பாதுகாப்புச் செயலாளரான கோத்தபாய ராஜபக்ஷவும் நாட்டில் இல்லை. இவ்வாறான நிலையிலேயே கலவரம் இடம்பெற்றிருக்கிறது. இது, திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டிருக்கிறதா என்கிற சந்தேகமும் எழுகிறது.



இதனிடையே, G77 மாநாடுகளில் கலந்து கொள்வதற்காக பொலிவியா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றைய கலவரங்கள் பற்றி தன்னுடைய உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில், ”சட்டத்தைக் கையில் எடுப்பதற்கு எவரையும் அரசாங்கம் அனுமதிக்காது. சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். அளுத்கமையில் இடம்பெற்ற சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது தண்டனையை வழங்குவதற்காக விசாரணை ஒன்று இடம்பெறும்“ என்று எழுதியிருக்கிறார்.



இலங்கையில் சிறுபான்மையின மக்கள் தமது பிரதிநிதிகளை ஒவ்வொரு முறையும் ஏதோவொரு நம்பிக்கையில் தேர்வு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்புகிறார்கள். அவர்கள் ஒன்றில் முற்றாக அரசாங்கத்தோடு இணைந்து கொண்டு அடிமைகளாக வலம் வருகிறார்கள். இல்லை, எதிர்க்கட்சியில் இருக்கிறார்கள். அப்போதும், சரியான அரசியலைச் செய்வதில் தெம்பின்றி இருக்கிறார்கள்.



நாட்டின் அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்கு இங்கு இனப்பிரச்சினையோ, மதப்பிரச்சினையோ தேவையாக இருக்கிறது. ஒவ்வொரு தேர்தலையும் கட்சிகள் அந்த விடயத்தை முன்னிறுத்தியே அணுகுகின்றன. இந்த நிலையில், பெரும்பான்மை அரசாங்கமொன்றை அமைப்பதற்கு இன ரீதியிலான அல்லது மத ரீதியிலான உணர்ச்சி வசப்படுதல்களை முன்னிறுத்த வேண்டிய தேவை அரசியல் தலைவர்களுக்கு இருக்கிறது. அதன், பிரதிபலிப்பாகவே பொது பல சேனா போன்ற அடிப்படைவாத அமைப்புக்களின் எழுச்சியையும், அதற்கான ஆட்சியாளர்களின் அங்கீகாரத்தையும் காண வேண்டியிருக்கிறது!