திங்கள், 30 டிசம்பர், 2013

என் மகன் எங்கே? -மோடியின் முதலைக் கண்ணீர் என்கிறார் தாய்!

அஸ்ஸலாமு அலைக்கும்



அஹமதாபாத்: "2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தை முன்னின்று நடத்திவிட்டு தற்போது மோடி முதலைக்கண்ணீர் வடிக்கிறார்"
என்று கலவரத்தில் இழந்து இன்று வரை மகனைக் காணாமல் தவிக்கும் தாய் ரூபா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "மோடிக்கு கல்இதயம். அதற்கு வேதனை ஏற்படாது. இப்போதும் சொந்த மகன் உயிரோடு இருக்கிறானா? என்பதை தெரியாத தாய் நான். 12 ஆண்டுகளாக என் வேதனை என்னவென்று மோடிக்குத் தெரியுமா?எனக்குத்தான்  தெரியும். கலவரத்தின்போது, என்  மகனுடன் இஹ்ஸான் ஜாஃப்ரியின் வீட்டில் அடைக்கலம் தேடினேன். அங்குதான் என் மகனை காணவில்லை" என்று ரூபா கூறியுள்ளார். இவரின் கதையை பின்னணியாகக் கொண்டுதான் பர்ஸானியா என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டது.
மேலும் இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஹாத்தூன் ஆபா கூறுகையில், "அன்று எல்லா காவல்துறையினரையும் உதவி தேடி அழைத்தோம். ஆனால் அவர்கள் அப்போது கூறிய வார்த்தை."இன்று நீங்கள் மரணிக்க வேண்டிய தினமாகும்.மேலிட உத்தரவே அதுதான்" என்கிறார்.
அன்று மோடி நினைத்திருந்தால் கலவரத்தைத் தடுத்து பெரும் இழப்பைத் தவிர்த்திருக்கலாம். அதையெல்லாம் விட்டு தற்போது முதலைக் கண்ணீர் வடிக்கிறார் என்று குஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நினைவு கூறுகின்றனர்.
SOURCE : INNERAM

புத்தாண்டு கொண்டாட்டமும், முஸ்லிம்களும்

அஸ்ஸலாமு அலைக்கும்


Inline image 2அன்பு உறவுகளுக்கு..! அஸ்ஸலாமு அலைக்கும்

புத்தாண்டு கொண்டாட்டமும்முஸ்லிம்களும்.
நாளை செவ்வாய்க்கிழமை இரவு 12 மணியுடன் 2013 நிறைவடைந்து 2014-01-01 புது வருடம் பிறக்கின்றது.
புது வருடத்தை வரவேற்பதற்காக கிறிஸ்தவ உலகம் தயாராகின்றதுஏனைய சமூகங்கள் தயாராகின்றன என்றால் அதில் வியப்பேதும் இல்லை. ஆனால் இஸ்லாமிய உலகும் தயாராகின்றது என்றால் அதை விட வேதனை வேறு என்ன இருக்க முடியும்!?.
தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதற்காக அதை மகிழச்சியுடன் கொண்டாடுவது என்பது ஒரு விதத்திலும் அறிவுப்பூர்வமான விடயமாக இருக்க முடியாது. மறாக தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதே! என்று கவலைப்பட்டுஅதைப் பின்னோக்கிப்பார்த்து தனது கடந்த வருடத்தின் குறை நிறைகளை சரி செய்து அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்ற ஒரு அடியானாக தன்னை எவ்வாறு மாற்றிக்கொள்வது என்பதைப் பற்றி சிந்திப்பவனே உண்மையான புத்திசாலியாக இருக்க முடியும்.
இஸ்லாமிய வரலாற்றில் மிகப் பெரிய எழுச்சியையும்புரட்சியையும் ஏற்படுத்திய ஹிஜ்ரத் எனும் வரலாற்று சிறப்பு மிகு பயணத்தை வைத்துத்தான் இஸ்லாமிய காலண்டர் உருவாக்கப்பட்டது. ஆனால் அதன் துவக்கத்தில் ஏற்படாத புத்துணர்வும்,எழுச்சியும் ஜனவரி முதல் திகதி இஸ்லாமிய உள்ளங்களுக்கு ஏற்படுகின்றது என்றால் இந்த அறியாமையை எங்கு போய் சொல்வது?.
அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:
أَفَحُكْمَ الْجَاهِلِيَّةِ يَبْغُونَ وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ حُكْمًا لِقَوْمٍ يُوقِنُونَ
அஞ்ஞான காலத்துத் தீர்ப்பையா அவர்கள் விரும்புகிறார்கள்உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வை விட தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்?” (அல்மாயிதா 5: 50).
அல்லாஹ்வும்அல்லாஹ்வுடைய தூதரும் காட்டித்தராத அனைத்தும் அறியாமை (ஜாஹிலிய்யத்) என்பதை இந்த வசனம் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.

அல்லாஹ்வின் தூதர் நமக்குக் காட்டிய வழி எது?.

அறியாமை கால மக்களிடம் வருடத்தில் இரு நாட்கள் கொண்டாடி மகிழ்வதற்காக இருந்தன. அல்லாஹ்வின் தூதர் மதினாவுக் ஹிஜ்ரத் செய்து வந்தபோதுநீங்கள் வருடத்தில் விளையாடி மகிழும் இந்த இரு நாட்களை விட சிறந்த இரு நாட்களை அதற்குப் பகரமாக அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கின்றான். அவைகள்: நோன்புப் பெருநாள்ஹஜ்ஜுப் பெருநாள் என குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள்நூல்: நஸாஈ).
ஹாபிஃழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் இந்த நபி மொழியை விளக்கும்போது:நிராகரிப்பாளர்களின் பெருநாட்களை கொண்டாடுவதும்அவர்களுக்கு ஒப்பாகுவதும் வெறுப்பான ஒரு விடயம் எனக் குறிப்பிடுகின்றார்கள்’.அல்லாஹ்வின் தூதர் தனது உம்மத்துக்கு கொண்டாடி மகிழ்வதற்கு வழிகாட்டிய இரு பெருநாட்களும் எவைஎன்பதை மிகத் தெளிவாக இந்த ஹதீஸ் கூறிக்கொண்டிருக்கின்றது. இதை விட்டு விட்டு வேறு வழிகளைத் தேடுவது அறியாமையிலும்வழிகேட்டிலும் தவிர வேறு எதில்தான் கொண்டு போய் சேர்க்கும் என்பதை இவர்கள் சற்று சிந்திக்க வேண்டாமா?
ஹிஜ்ரி ஆண்டின் துவக்கத்தைமுஹர்ரம் முதல் நாளை கொண்டாடுவதை கூடாது பித்அத் வழிகேடு என்று சொல்கின்றோம். அல்லாஹ்வின் தூதரிடம் அதற்கு எந்த முன்மாதிரியும் இல்லை என்கின்றோம். ஆனால் கிறிஸ்தவர்கள்ஏனைய சமூகங்கள் கொண்டாடும் ஜனவரி முதல் திகதியை கொண்டாடுகின்றோம். இது எவ்வளவு பெரிய முரண்பாடுவழிகேடு என்பதை ஏன் நாம் சிந்திக்க மறுக்கின்றோம்?.
புது வருடம் பிறந்து விட்டது என்று அன்றைய இரவில் எத்தனை எத்தனை அனாச்சாரங்கள்விபச்சாரம்மதுபானம்இசைஆடல் பாடல்கள் இவைகள் ஒரு புரம்,பட்டாசு வெடிகள் என்று பல கோடிக் கணக்கான ரூபாய்கள் வாரி இறைக்ககப்படுவது மறு புரம். இவைகளுக்காக முஸ்லிம் நாடுகள் வாரி இறைக்கும் பணம் பல மிலியன்கள் என்பது இன்னும் வேதனையான விடயம். உலகின் பல பாகங்களிலும் கோடிக்கணக்கான மக்கள் உண்ண உணவின்றிதங்க இடமின்றி வாடி வதங்கிக்கொண்டிருக்கின்றனர்எந்தப் பயனும் இன்றி வீண் விரயம் செய்யப்படும் இந்த கோடிகளை அவைகளுக்கு பயன்படுத்தப்படுமென்றால் அந்த மக்கள் எவ்வளவு நிம்மதி அடைவர்.
இன்னும் பல மூட நம்பிக்கைகள் இந்நாளில் பரவி இருப்பதையம் பார்க்க முடியும்: கடன் வாங்குவதோகொடுப்பதோ கிடையாதுஏனேனில் அன்றைய நாளில் கடன் வாங்கினாலோகொடுத்தாலோ அது தொடர்ந்து கொண்டே இருக்கும் என்ற நம்பிக்கை தான் இதற்குக் காரணம். இது தெளிவான மூட நம்பிக்கை இல்லையா?இது ஒரு உதாரணம் மாத்திரம் தான். இது போன்று எண்ணற்ற மூட நம்பிக்கைகள் அந்நாளில் பரவிக்கிடக்கின்றன.
அல்லாஹ்வின் தூதர் தனது வாழ்நாளில் எச்சரித்த ஒரு விடயத்தை இவர்கள் உண்மைப் படுத்தும் வேதனையான ஒரு நிலையைத் தான் இங்கு பார்க்க முடிகின்றது:

நீங்கள் உங்களுக்கு முன் சென்றவர்களின் வழி முறைகளை சானுக்கு சான்,முழத்துக்கு முழம் பின்பற்றுவீர்கள் அவர்கள் ஓர் உடும்பு பொந்துக்குல் புகுந்து விட்டால் அவர்களைத் தொடர்ந்து நீங்களும் புகுந்து விடுவீர்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் யூதர்களையும்கிறிஸ்தவர்களையுமா குறிப்பீடுகின்றீர்கள்என்று நாங்கள் கேட்டபோதுவேறு யாரைஎன்று அல்லாஹ்வின் தூதர் திருப்பிக் கேட்டார்கள்”. அறிவிப்பவர்: அபூ ஸஈத் (ரலி) அவர்கள்புஹாரி).

பலர் இந் நாளில் உதயத்துடன் புது வருடம் பிறந்து விட்டது (Happy New Year) என்று வாழ்த்துக்கள் தெரிவிப்பதையும்ஏனையவர்களுக்கு தொடர்பு கொள்வதன் மூலம்,குறுஞ் செய்திகள் மூலம் ஈமெயில்கள் மூலம் வாழ்த்து தெரிவிப்பதையும் பரவலாக பார்க்க முடிகின்றது. ஆனால் ஒரு உண்மையான முஸ்லிம் எப்போதும் இந்த அறியாமைகளில்வழிகேடுகளில் வீழ்ந்துவிடாமல் எச்சரிக்கையாகவே இருப்பான். இன்னும் ஒரு உண்மையான முஸ்லிம் எப்போதும் பிற மதத்தவர்களுக்கு ஒப்பாக செயல்பட மாட்டான்.

எவன் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாகச் செயல்படுகின்றானோ அவனும் அந்தக்கூட்டத்தைச் சேர்ந்தவனே” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூதாவுத்).இது எவ்வளவு கடும் எச்சரிக்கைஇதில் எவ்வாறு ஒரு முஸ்லிம் அலடச்சியமாக இருக்க முடியும்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு மனிதர் புவானா எனும் இடத்தில் ஓர் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட நேர்ச்சை செய்திருந்தார். அதை நிறைவேற்றுவதற்கு அல்லாஹ்வின் தூதரிடம் வந்து அனுமதி கேட்டபோது நபியவர்கள் அவ்விடத்தில் அறியாமைக் காலத்தில் ஏதும் சிலைகள் வணங்கப்பட்டனவாஅதற்கு இல்லை என்று சொன்னார்கள்அறியாமை கால பெருநாட்கள் ஏதும் அவ்விடத்தில் கொண்டாடப்பட்டனவாஎன்று கேட்டார்கள் அதற்கும் இல்லை என்று சொன்னார்கள். அப்படியென்றால் உனது நேர்ச்சையை நிறைவேற்றும்” என்று கூறினார்கள். (அபூதாவுத்).
அல்லாஹ்வுக்காக நிறைவேற்றும் ஒரு நேர்ச்சைஅது நிறைவேற்றப்படும் இடத்தில் கூட பிற மதத்தவர்களுக்கு ஒப்பாகி விடக்கூடாது என்பதில் எந்தளவு அல்லாஹ்வின் தூதர் கண்டிப்பாக இருந்தார்கள் என்று பாருங்கள்.
அல்லாஹ்வுக்கா நாம் நிறைவேற்றும் பல வணக்கங்களில்நடை முறை வாழக்கை தொடர்பான விடயங்களில் யூதர்களுக்குகிறிஸ்தவர்களுக்கு மாறு செய்யுமாறு அல்லாஹ்வின் தூதர் நமக்கு பணித்திருக்கின்றார்கள். சூரியன் உதிக்கும்மறையும் நேரங்களில் சுன்னத்தான தொழுகைகள தொழுவதற்கு அல்லாஹ்வின் தூதர் தடை விதித்தார்கள். காரணம் அந்நேரத்தில் இறை நிராகரிப்பாளர்கள் தங்கள் கடவுள்களை வணங்கும் நேரம் என்பதற்காக (இந்த செய்தி முஸ்லிமில் பதிவாகியுள்ளது).
இவைகளை நாம் எடுத்துச் சொல்லும்போது சிலர் இது மத நல்லிணக்கத்திற்கு எதிரானது இது இஸ்லாத்தைப் பற்றித் தவரான ஒரு தோற்றத்தையே பிற மதத்தவரிடம் ஏற்படுத்தும் என்று கூற ஆரம்பித்து விடுகின்றனர். இது இவர்களின் வெறும் ஒரு வீணாண கற்பனையைத் தவிர வேறு இல்லை. அல்லாஹ் தனது தூதரைப் பற்றி கூறும்போது ” மேலும், (நபியே!) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்”. (68:4).
என்று போற்றுகிறான் அவரை விட அழகிய முறையில் இந்த உலகிற்கு நற்பண்புகளை போதித்தவர் வேறு எவரும் இருக்க முடியாது. அவர்கள் பிற மதத்தவர்களுடன் நடந்து கொள்ளும்போது எந்த உயரிய வழி முறைகளைக் கடைபிடித்தார்களோ அது தான் நமக்கு மிகச்சிறந்த முன் மாதிரி. அதல்லாத வேறு ஒரு முன்மாதிரி நமக்குக் கிடையாது.
கிறிஸ்மஸைஜனவரி முதல் திகதியைஏனைய மதத்தவர்களின் பண்டிகைகளைக் கொண்டாடியதன் மூலம்அல்லது அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தன் மூலம்தான் அல்லாஹ்வின் தூதர் மத நல்லிணக்கத்தை கடைபிடித்தார்கள் என்று இவர்கள் சொல்ல வருகின்றார்களாஅதற்கு துளியும் அன்னாரது வாழ்வில் ஆதாரம் இல்லை. மாறாக எந்த வகையிலும் பிற மதத்தவர்களுக்கு ஒப்பாக செயல்படக்கூடாது என்பதில்தான் அவர்கள் மிக உறுதியாக இருந்தார்கள். 
அல்லாஹ்வின் தூதர் கடைபிடித்த அந்த உயரிய வரையறைகள் மிகத் தெளிவாக சுன்னாவில் பதிவாகியுள்ளன. (அதை வேண்டுமானால் அல்லாஹ்வின் தூதர் பிற மதத்தவர்களுடன் எவ்வளவு பண்பாக நடந்துகொண்டார்கள் என்பதை தனிக் கட்டுரையாக விளக்கலாம்). ஆனால் நாம் இங்கு குறிப்பிடும் வரம்புகளை முரண்படாமல் நீங்கள் மிகத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
நம்மிடம் ஒரு ஹிந்து நண்பரோபௌத்த நண்பரோ விருந்துக்கு வருகின்றார் என்று வைத்துக்கொள்ளுங்கள்அவரது உணவு சைவம்தான் என்பதை அறிந்து அதற்கேற்ப உணவைத் தயாரித்து அதைப் பரிமாறுகின்றோம். இது போன்று நமது நிலைகளையும்கொள்கை கோட்பாடுகளையும் அவர்களுக்கு கூறியிருப்போமென்றால் அவர்கள் நிச்சயமாக நம்முடன் அதற்கேற்பத்தான் நடந்துகொள்வார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 
அவர்கள் தெரிந்து வைத்திருக்கும் சில விடயங்களில் அவ்வாறு தான் நம்முடன் நடந்துகொள்கின்றார்கள் என்பதும் இதற்கு மிகப் பெரிய ஆதாரம். ஆனால் நாம் விட்ட தவறென்னநமது கொள்கை கோட்பாடுகளை சரியாக அவர்களுக்கு புரிய வைக்காததே. இதை உணராமல் நம்மில் சிலர் இஸ்லாத்தின் மீது குறை காண்பது அறிவீனமாகும்.
இறுதியாக அல்குர்ஆனின் ஒரு வசனத்தை உங்களுக்கு நினைவு கூறி நிறைவு செய்கின்றேன்:
وَاللَّهُ وَرَسُولُهُ أَحَقُّ أَنْ يُرْضُوهُ إِنْ كَانُوا مُؤْمِنِينَ

அவர்கள் (உண்மையாகவே) முஃமின்களாக இருந்தால்அவர்கள் திருப்திப்படுத்த மிகவும் தகுதியுடையவர்கள் அல்லாஹ்வும்அவனுடைய தூதரும்தான்.” (9: 62).
தொகுப்பு: அஸ்ஹர் ஸீலானி

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

பா.ஜ.க நினைவிடத்தை இடித்த ஆர்.எஸ்.எஸ் - காட்டிக் கொடுத்த வீடியோ!



கண்ணூர்: பா.ஜ.க நினைவிடத்தை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இடித்ததை சி.சி.டிவி காட்டிக் கொடுத்தது.
மறைந்த பா.ஜ.க உறுப்பினர் கே.டி.ஜெயகிருஷ்ணன் நினைவாக கட்டப்பட்ட தூணையும், அங்கு கட்டப்பட்டிருந்த கொடி தோரணங்கள் மற்றும் ப்ளக்ஸ்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்களால் சேதப்படுத்தப்பட்டன.
ஆனால், இதற்கு ஆர்.எஸ்.எஸ்ஸை விட்டு பிரிந்து தனி இயக்கமாக செயல்படும் நமோ விசார் மஞ்ச் தான் காரணம் என்று பா.ஜ.க குற்றம் சாட்டி 2 பேர் மீது வழக்கு தொடர்ந்தது. ஆனால் ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்த சதிச் செயலை உணர்ந்த நமோ விசார் மஞ்சைச் சார்ந்த சிலர் அப்பகுதியில் சி.சி.டி.வியை முன்னரே நிறுவியிருந்தனர். இதில் ஆர்.எஸ்.எஸ்ஸை சார்ந்தவர்கள் நினைவு தூண், ப்ளக்ஸ் மற்றும் கொடி தோரணங்களை சேதப்படுத்துவது பதிவாகியிருந்தது. இதன் மூலம் சதிச் செயலில் ஈடுபட்டு பெரும் கலவரம் ஏற்பட இவர்கள் முயன்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.
மேலும், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திலும் துண்களை இடித்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதற்கிடையே சி.சி.டி.வி காட்சிகள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, நினைவு தூணை தகர்த்து கலவரம் உருவாக்க திட்டமிட்டதாக குற்றம் சாட்டி நமோ விசார் மஞ்ச் சார்பாக ஆர்.எஸ்.எஸ் காரர்கள் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய இரவு நடந்த இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

புதன், 25 டிசம்பர், 2013

பைபிள் சொல்கின்றது இயேசு ஒரு முஸ்லிம் என்று.....!

அஸ்ஸலாமு அலைக்கும்




முஸ்லிம் என்றாள் யார்..?

முஸ்லிம் என்பது அரபு வார்த்தை அதற்கு கட்டுப்பட்டவன்/சரணடைந்தவன்/கீல்ப்படிந்தவன் என்று பொருள் கொள்ளலாம். யாரெல்லாம் ஒரே இறைவனுக்கு மட்டும் கட்டுப்படுகின்றானோ அவர்கள் யாராக இருந்தாலும் யூதராக,கிருஸ்த்தவறாக,ஹிந்துவாக யாராக இருந்தாலும் அவரை முஸ்லிம் என்று அரபியில் அழைப்பர். குர்ஆன் கூறும் இந்த வசனத்தை பார்ப்போம்..!!

(குர்ஆன் 3:67)

இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை. ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார்;. அவர் முஷ்ரிக்குகளில் (இணைவைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை.

எனவே முஸ்லிம் என்பது ஒரு சமூகதின்/நாட்டின்/தனி மனிதனின் பெயர் அல்ல அது ஒரு பதவி. எனவே எம் அனைவரையும் பார்த்து அல்லாஹ் சொல்கின்றான் பின்வருமாறு..!!

(குர்ஆன் 3:84)

"அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்;. நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.

எனவே அவனை பின் பற்றுபவர்கள் முஸ்லிம்கள் என்று தெளிவாக இறைவன் எமக்கு சொல்லி தந்து விட்டான்.மேலும் இந்த முழு உலகமும் முஸ்லிம் என்றும் இறைவன் சொல்கின்றான்.

(குர்ஆன் 3:83)

அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன. மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்.
எனவே முஸ்லிம் என்பது ஒரு சமூகதின்/நாட்டின்/தனி மனிதனின் பெயர் அல்ல அது ஒரு பதவி.இந்த தெளிவோடு கீழ் உள்ள வசனத்தை திரும்ப வாசித்து பாருங்கள்..!!!!!

(குர்ஆன் 3:84)

"அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்;. நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
எனவே ஈஸா (இயேசு ) வையும் அல்லாஹ் தான் துதராக அனுப்பினான் மற்றும் அவர் ஒரு முஸ்லிமாக இருந்தார் என்பதை அல்லாஹ் தெளிவாக சொல்லி தந்து விட்டான்.

இதை பைபிள் அழகாக நிரூபித்து விட்டது எப்படி என்றால்..!!!!
யோவான்-5 அதிகாரம்
________________________________________

30. நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.

யாரெல்லாம் தன் சித்தப்படி செய்யாமல் கர்த்தரின் சித்தப்படி நடக்கின்றாரோ அவரே முஸ்லிம் என்பதை மேலே நாம் பார்த்தோம். எனவே இயேசு தெளிவாக சொல்லிவிட்டார் தனுடைய சித்தப்படி எதையும் பண்ணாமல் கர்த்தரின் சித்தப்படி செய்வதாக இதைதான் அரபியில் முஸ்லிம் என்று சொல்வது.

இன்னும் ஒன்றை மிக முக்கியமாக நாம் இங்கே புரிந்து கொள்ள வேண்டும் அதாவது... என் பிதா என்று என்று இயேசு சொல்லி இருக்கின்றார் எனவே கர்த்தரின் மகன் தான் இயேசு என்று அர்த்தம் கொள்ள கூடாது ஏன் என்றால் பைபளின்வழக்கு படி கர்த்தர் அனைவருக்கும் பிதா... இந்த வசனத்தை படித்தால் உங்கள் சந்தேகம் தெளிவாகும்.மத்தேயு -23 அதிகாரம்
________________________________________

9. பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.
அங்கே என் பிதா என்று சொன்ன இயேசு இங்கே உங்கள் பிதா என்று சொல்கின்றார் எனவே இது பைபளின் மொழிவழக்கு என்பது புரிகின்றது.

எனவே இயேசு கர்த்தர் இடமே முழுமையாக தங்கி இருந்தார். யாரெல்லாம் கர்த்தரை மட்டும் கடவுள் என்று ஏற்ருக் கொள்கின்றார்களோ அவர்களையே முஸ்லிம்கள் என்று அரபியில் சொல்வோம்.

எனவே உங்களையும் இயேசு வணங்கிய அதே கர்த்தரை நோக்கி அழைக்கின்றோம் அரபியில் அல்லாஹ் என்று சொல்வோம். இதை உங்களுக்கு ஒரு அரபி மொழியிலான பைபிள் எடுத்து பார்த்தல் அல்லாஹ் என்ற சொல் பல நூரு தடவை வந்துள்ளதை காணலாம். எனவே அந்த அல்லாஹ் தான் நித்திய ஜீவன். உலகில் தோன்றிய அனைத்து தூதர்களும் அந்த அல்லாஹ்வின் வின் பக்கமே மக்களை அழைத்தார்கள். நாமும் உங்களை அவன் பக்கமே அழைக்கின்றோம்... வாருங்கள் எம்மோடு சேர்ந்து ஒரு கர்த்தரை ஜெபிக்க...


உங்களால் முடியமான அளவு எமது இந்த ஆக்கங்களை ஷேர் பண்ணுங்கள்..!! உங்களை கொண்டு ஒரு மனிதன் நேர்வழி பெற்றால் அது இந்த உலகமே கிடைப்பதை விட சிறந்தது..!!!


Inline image 1




-- 
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّي
(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்;உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது)உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. (திருக்குர்ஆன்.1:5-7).

Source 

tmmk al-khobar

செவ்வாய், 24 டிசம்பர், 2013

உண்மையை உணர்ந்த தினத்தந்தி


துவாவுடைய ஒழுக்கங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு

அளவற்ற அருளாளனும்நிகரற்ற அன்புடையோனுமாகிய 
அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
துவாவுடைய ஒழுக்கங்கள்



அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதற்குமுன்
பிரார்த்தனை செய்வதற்கு முன் அல்லாஹ்வைப் போற்றிப் புகழவேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறவேண்டும். அது ஏனெனில்நிச்சயமாக நீர் அல்லாஹ்விடம் அவனுடைய அருட்கொடைகளைகருணைகளை,பாவமன்னிப்பை கேட்கப்போகிறீர். எனவே,அல்லாஹ்வுடைய தகுதிக்கேற்றவாறு எதிலே புகழ்வார்த்தையும்மேன்மைப்படுத்திப் பேசுதலும் இருக்குமோ அத்தகைய ஒரு முன்னுரையை நீர் முதலில் அவனுக்காக முற்படுத்துவதே இவ்விடத்தில் பொருத்தமான ஒரு செயலாக இருக்கும்.
இதற்குச் சான்றாக பின்வரும் நபிமொழியைப் பாருங்கள்!
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமர்ந்திருந்தபோதுஓர் ஆடவர் அந்நேரம் வந்தார். தொழுது முடித்தார். பின்னர்யாஅல்லாஹ்! எனக்கு நீ பாவம் பொருத்தருள்வாயாக! எனக்கு நீ அருள் செய்திடுவாயாக! என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தொழுது முடித்தவரே! நீர் அவசரப்பட்டுவிட்டீர்! நீர் தொழுது முடித்தால் அல்லாஹ் அவனுக்குத் தகுந்தவைகளைக் கொண்டு புகழ்வீராக! பின்னர் என்மீது ஸலவாத்துக் கூறுவீராக! பின்னர் அவனிடம் பிரார்த்திப்பீராக!
அறிவிப்பாளர் கூறுகிறார்:
பின்னர் அவரை அடுத்து ஒரு ஆடவர் தொழுது முடித்தார். அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்தைக் கூறினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவரிடம்தொழுது முடித்தவரே! துஆச் செய்வீராக! (ஒரு சமயம் உம்முடைய துஆ அங்கீகரிக்கப்பட்டு) நீர் பதிலளிக்கப்படலாம் என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: ஃபுளாலத் பின் உபைத் ரளியல்லா அன்ஹுநூல்: திர்மிதீ
அல்லாஹ்ப்பற்றி நல்லெண்ணம் கொள்ளுதல்
உயர்வானவனாகிய அல்லாஹ்,

(البقرة ) وَإِذا سَأَلَكَ عِبَادِيْ عَنِّي فَإِنِّيْ قَرِيْبٌ أُجِيْبُ دّعْوَةَ الدَّاعِى إِذَا دَعَانِ 
மேலும் , (நபியே!) என்னுடைய அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்நிச்சயமாக நான் சமீபத்தில் இருக்கிறேன் (என கூறுவீராக!). அழைப்பாளனின் அழைப்பிற்கு அவன் என்னை அழைக்கும்போது நான் பதிலளிக்கிறேன் என்று கூறினான். 

(
அல்பகறா:186)اَللّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا عمِلْتُ وَشَرِّ مَالَمْ أَعْمَلْஅல்லாஹும்ம! இன்னீ அஊது பிக மின் ஷர்ரி மா அமில்த்துவ ஷர்ரி மாலம் அஃமல் என்று துஆச்செய்பவர்களாக இருந்தார்கள் என்று கூறினார்கள்.
எனவேஅல்லாஹ் நம்மிலிருந்து மிகச் சமீபமாக இருக்கிறான். அவனுடைய அறிவு,எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் அவன் சூழ்ந்து அறிதல்அவனுடைய பாதுகாப்பு ஆகியவற்றால் அவன் நம்மோடு இருக்கிறான் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கவேண்டும்.
திட்டமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்துஆவை ஏற்றுக்கொள்ளுதல் என்ற விஷயத்தை அல்லாஹ்விடம் நாம் ஒப்படைத்து விடவேண்டும் எனவும்நாம் துஆச் செய்து கேட்ட நம்முடைய எண்ணம் நிறைவேறும் என்பதில் நாம் உறுதியாக இருக்கவேண்டும் எனவும் நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள்.
அல்லாஹ்வின்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
(
உங்களுடைய பிரார்த்தனை அல்லாஹ்வால்) ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை உறுதி கொண்டவர்களாக அல்லாஹ் அழைத்துப் பிரார்த்தனை புரியுங்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுநூல்: திர்மிதீ
நிச்சயமாக அல்லாஹ்அவனுடைய விசாலமான தயாளத்தனத்தாலும்பேருபகாரத்தின் சிறப்பாலும் உங்களை எப்போது பிரார்த்தனைச் செய்பவரிடமிருந்து பேராதரவும் பிரார்த்தனையில்தூய்மையான எண்ணமும் ஏற்பட்டுவிடுமோவெறுங்கையோடு திருப்பமாட்டான்என்பதை உறுதியாக நம்பிக்கைக் கொள்ளுங்கள். ஏனெனில்பிரார்த்தனை புரிபவர் (அல்லாஹ் நமது துஆவை ஏற்பான் என்ற) அவருடைய பேராதரவில் உறுதிகொண்டவராகஇல்லையென்றால் அவருடைய துஆவும் தூய்மையானதாக அமையாது.

Inline image 1

Inline image 3
--

إِيَّاكَ
 نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّي
(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்;உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது)உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. (திருக்குர்ஆன்.1:5-7).

SOURCE:
TMMK-ALKHOBAR

திங்கள், 16 டிசம்பர், 2013

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி வடக்குத் தெருவைச் சார்ந்த சிறுமிக்கு மருத்துவ உதவி

அஸ்ஸலாமு அலைக்கும்




மருத்துவ சேவையில் மகத்தான இடத்தைப் பிடித்திருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இன்று இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி வடக்குத் தெருவைச் சார்ந்த சிறுமிக்கு  மருத்துவ உதவியாக ரூ.13,000 வழங்கியது. மேலும் சிறுமியின் பெற்றோரிடம் மருத்துவமனையில் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாக வாக்குறுதி வழங்கியது. இந்நிகழ்சியில் இராமநாதபுரம் மவாட்டத் தலைவர் சகோ.சாதிக் பாட்ஷா, திருவாடனை ஒன்றியச் செயலாளர் சகோ.அக்பர் சுல்தான் உட்பட தொண்டிக் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சனி, 14 டிசம்பர், 2013

மீமிசல் மற்றும் கோபாலபட்டிணத்தில் கொடியேற்று நிகழ்ச்சி

 அஸ்ஸலாமு அலைக்கும்





 இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா மாவட்டம் முழுவதும் சுற்றுப் பயனம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆங்காங்கே ஜமாத் நிர்வாகிகளைச் சந்தித்த பேராசிரியர் அவர்கள் மீமிசல் மற்றும் கோபாலபுரம் பகுதியில் கட்சி தொண்டர்களின் தக்பீர் முழங்க கட்சி கொடி ஏற்றினார்கள்.

களத்தகவல்

முகவை பாக்கர்

புதன், 11 டிசம்பர், 2013

மோடி பிரச்சாரம் மேற்கொண்ட தொகுதிகளில் பா.ஜ.க தோல்வி!



புதுடெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொண்ட தொகுதிகளில் பா.ஜ.க தோல்வியைத் தழுவியுள்ளது.
பா.ஜ.க செல்வாக்கு மிகுந்த ரோஹிணி, துவாரகா,சுல்தான்பூர், மஜ்ரா, ஷஹ்தாரா, சாந்தினி சவுக் ஆகிய தொகுதிகளில் மோடிபிரச்சாரம் மேற்கொண்டார். இதில் சுல்தான்பூர், மஜ்ரா தொகுதிகளில் பா.ஜ.க நான்காவது தடவையாக தோல்வியை தழுவியுள்ளது.ஷாலிமார்பாக், ரோஹிணி, கரோல்பாக், க்ரேட்டர் கைலாஷ், திலக் நகர், டெல்லிகாண்ட், ஷக்கூர் பஸ்தி ஆகிய பா.ஜ.கவின் செல்வாக்குமிக்க தொகுதிகளையும் பா.ஜ.க இழந்துள்ளது.
 மோடி பிரச்சாரம் மேற்கொண்ட பெரும்பாலான தொகுதிகளில் பா.ஜ.க தோல்வியைச் சந்தித்து அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
INNERAM

வெள்ளி, 6 டிசம்பர், 2013

காஞ்சி வடக்கு மாவட்டத்தில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்


அஸ்ஸலாமு அலைக்கும்








தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பாபர் மசூதியை மீட்க கடந்த 1995 முதல் இன்று வரை பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்திவருகிறது..



பாப்ரி மஸ்ஜித் வழக்கை உச்சநீதிமன்றம் விரைந்து முடித்து தீர்ப்பை வழங்க வேண்டும்,
* பாப்ரி மஸ்ஜித் வழக்கில் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,
* பாப்ரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும்,
ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தமுமுக சார்பில் இன்று தமிழகமெங்கும் மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அதன் தொடர்சியாக காஞ்சி  வடக்கு மாவட்டத்தில் தமுமுகவின் மூத்த தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான போராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களின் தலைமையில் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் 2500க்கும் அதிகமான ஆண்களும் 500க்கும் மேற்பட்ட பெண்களும் கலந்து கொண்டனர்.


டிசம்பாட 6ல் இராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் திரள் ஆர்பாட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும்





















இந்தியாவின் வரலாற்றுச் சின்னமான பாப்ரி மஸ்ஜித், காவி மதவெறியர்களால் தரைமட்டமாக்கப்பட்டு இன்றோடு 21 ஆண்டுகள் நிறைவடைகிறது.
1995 முதல் தொடர்ந்து தமுமுக, ஜனநாயக வழியில் பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் நீதி கேட்டு போராடி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று,
* பாப்ரி மஸ்ஜித் வழக்கை உச்சநீதிமன்றம் விரைந்து முடித்து தீர்ப்பை வழங்க வேண்டும்,
* பாப்ரி மஸ்ஜித் வழக்கில் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,
* பாப்ரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும்,
ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தமுமுக சார்பில் இன்று தமிழகமெங்கும் மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இராமநாதபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எம்.சாதிக் பாட்சா தலைமை வகித்தார். நகர் தலைவர் சுல்தான் வரவேற்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் முஹம்மது சித்திக்,மாவட்ட நிர்வாகிகள் செய்யது காசீம், அஸீஸ் ரகுமான், வழக்கறிஞர் பாலா, அப்துல்ரகுமான், மற்றும் அணி நிர்வாகிகள் வழக்கறிஞர் உதுமான், புர்கான்அலி , பாபு இஸ்மாயில், கலந்தர் ஆசிக், யாசர் அரபாத், செய்யது முஹம்மது  காசீம், மற்றும் ஒன்றிய, நகர் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் மமக மாவட்ட செயலாளர் ஜாஹிர் ஹுசைன், வழக்கறிஞர் முருக பூபதி (CBI) மௌலவி ஹாஜி அலி பிர்தௌசி கண்டன உரையாற்றினார்கள். புதுவை. கோ.சுகுமாரன் (செயலாளர் மக்கள் உரிமை கூட்டமைப்பு புதுச்சேரி), A.S.M.ஜுனைத் (தமுமுக மாநில செயலாளர்) சிறப்புரையாற்றி கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 1000த்திற்கும் மேற்பட்ட ஆண்கள்,பெண்கள் கலந்துகொண்டு, கண்டன கோஷங்களை எழுப்பினர். தமுமுக மாவட்ட செயலாளர் அன்வர் அலி நன்றி கூறினார்.

களத்தகவல்

சகோ.அக்பர் சுல்தான்
முகவை பாக்கர்