அஸ்ஸலாமு அலைக்கும்
மருத்துவ சேவையில் மகத்தான இடத்தைப் பிடித்திருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இன்று இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி வடக்குத் தெருவைச் சார்ந்த சிறுமிக்கு மருத்துவ உதவியாக ரூ.13,000 வழங்கியது. மேலும் சிறுமியின் பெற்றோரிடம் மருத்துவமனையில் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாக வாக்குறுதி வழங்கியது. இந்நிகழ்சியில் இராமநாதபுரம் மவாட்டத் தலைவர் சகோ.சாதிக் பாட்ஷா, திருவாடனை ஒன்றியச் செயலாளர் சகோ.அக்பர் சுல்தான் உட்பட தொண்டிக் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.