அஸ்ஸலாமு அலைக்கும்...
தன்னலம் கருதாமல் தன் குருதியையும் கொடையாகக் கொடுக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மக்கள் மத்தியிலும் ஆட்சியாளர்கள் மத்தியலும் குறிப்பாக மாற்று மத சகோதரர்கள் மத்தியிலும் நீங்கா இடம்பிடித்துள்ளது.
அதன் மைல் கல்லான இராமநாபுரம் கிழக்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அவசராகால உதவியான இயற்கைபேரிடர் காலங்களில் மற்றும் சாலை விபத்துக்கள், இரத்ததானம் போன்ற உயிர் காக்கும் உயர்ந்த பணியை சிறப்பாக செய்து வருகிறார்கள்.
இந்த ஆண்டு இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் இரத்ததான முகாம்கள் அவசரகால இரத்ததான உதவிகள் மூலம் சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள் பயன் அடைந்துள்ளனர். இதை பாராட்டி தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் இராமநாபுரம் கிழக்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு இன்று (5-12-2013) சிறந்த இரத்ததானத்திற்கான விருதை வழங்கியது.
இவ்விருதை மாவட்டத் தலைவர் சகோ.சாதிக் பாட்ஷா பெற்றுக் கொண்டார். மாவட்டச் செயலாளர் சகோ.அன்வர் மற்றும் நகர் பொருளாளர் சகோ.பிஸ்மி உடன் இருந்தனர்.
சகோ.அக்பர் சுல்தான்