வியாழன், 5 டிசம்பர், 2013

தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணையக் குழு ஆய்வுக் கூட்டம்


அஸ்ஸலாமு அலைக்கும்...





பன்முகத் தன்மை கொண்ட இந்தியா பல மதங்கள் மற்றும் ஜாதிகளைக் கொண்டது. அதில் சிறுபான்மை மக்களாக  முஸ்லிம்கள், கிருத்தவர்கள், புத்தர்கள் உட்பட ஏனைய மதங்கள், ஜாதிகள் உள்ளனர்.

சிறுபான்மை மக்களின் வாழ்வாதார உரிமைகள் பாதிக்கப்படாத வண்ணம் அவைகளைப் பாதுகாக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் சிறுபான்மை ஆணையங்களை ஏற்படுத்தி உள்ளது.

அதன் ஒரு அங்கமான தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணையக் குழு இன்று (5-12-2013)  இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறுபான்மை மக்களிடம் ஆய்வுகள் நடத்தியது.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மை ஆணையக் குழுத் தலைவர் பேராயர் பிரகாஷ் தலைமையில் நடந்த இந்த ஆய்வுக் கூட்டத்தில் இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு.நந்தக்குமார், மாவட்ட கண்கானிப்பாளர் மயில்வாகனம் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள், இராமநாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் கொண்டர்.

மேலும் இக்கூட்டத்தில் சிறுபான்மை அமைப்புகள், கட்சிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். தமிழநாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் சகோ.சாதிக் பாட்ஷா தலைமையில் தமுமுக மாவட்ட செயலாளர் சகோ.அன்வர், மமக மாவட்டச் செயலாளர் சகோ.ஜாஹிர் உசேன் மாவட்டப் பொருளாளர் சகோ.சித்திக் உட்பட மாவட்ட, ஒன்றி, நகர் நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


இராமநாதபுரம் மாவட்ட தமிழநாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக முஸ்லிம்களின் பாதுகாப்பு , முஸ்லிம்களின் மேன்பாடு உட்பட பல அம்சக் கோரிக்கை அடங்கிய மனு  ஆணையக் குழுத் தலைவர் பேராயர் பிரகாஷிடம் கொடுக்கப்பட்டது.


களத்தகவல்

சகோ.அக்பர் சுல்தான்