அஸ்ஸலாமு அலைக்கும்
அஹமதாபாத்: "2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தை முன்னின்று நடத்திவிட்டு தற்போது மோடி முதலைக்கண்ணீர் வடிக்கிறார்"
என்று கலவரத்தில் இழந்து இன்று வரை மகனைக் காணாமல் தவிக்கும் தாய் ரூபா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "மோடிக்கு கல்இதயம். அதற்கு வேதனை ஏற்படாது. இப்போதும் சொந்த மகன் உயிரோடு இருக்கிறானா? என்பதை தெரியாத தாய் நான். 12 ஆண்டுகளாக என் வேதனை என்னவென்று மோடிக்குத் தெரியுமா?எனக்குத்தான் தெரியும். கலவரத்தின்போது, என் மகனுடன் இஹ்ஸான் ஜாஃப்ரியின் வீட்டில் அடைக்கலம் தேடினேன். அங்குதான் என் மகனை காணவில்லை" என்று ரூபா கூறியுள்ளார். இவரின் கதையை பின்னணியாகக் கொண்டுதான் பர்ஸானியா என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டது.
மேலும் இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஹாத்தூன் ஆபா கூறுகையில், "அன்று எல்லா காவல்துறையினரையும் உதவி தேடி அழைத்தோம். ஆனால் அவர்கள் அப்போது கூறிய வார்த்தை."இன்று நீங்கள் மரணிக்க வேண்டிய தினமாகும்.மேலிட உத்தரவே அதுதான்" என்கிறார்.
அன்று மோடி நினைத்திருந்தால் கலவரத்தைத் தடுத்து பெரும் இழப்பைத் தவிர்த்திருக்கலாம். அதையெல்லாம் விட்டு தற்போது முதலைக் கண்ணீர் வடிக்கிறார் என்று குஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நினைவு கூறுகின்றனர்.
SOURCE : INNERAM