அஸ்ஸலாமு அலைக்கும்...
இந்தியாவை உலகரங்கில் தலைகுனியச் செய்த கருப்புநாளாம் டிசம்பர் 6ல் பாபர் மசூதியை இடித்தக் கயவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற இந்த முழக்கத்துடன் மத்திய அரசு மற்றும் நீதித்துரையை ஜனநாயக ரீதியில் வருடந்ததோறும் எச்சரித்துக் கொண்டிருக்கும் பேரியக்கம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.
அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு டிசம்பர் 6ல் மக்கள் திரள் போராட்டத்தை தமுமுக அறிவித்துள்ளது.
இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பாக டிசம்பர் 6ல் போராட்டக்களம் குறித்த களந்தாய்வுக் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் சகோ.சாதிக் பாட்ஷா தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் தமுமுக சகோ.அன்வர் மமக சகோ.ஜாஹிர் மற்றும் மாவட்டப் பொருளாளர் சகோ.சித்திக் ஆகியோர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போராட்டத்திற்கான ஒழுங்குகளைப் பேணுதல் மற்றும் அநியாயத்திற்கெதிரான இந்த போராட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களையும் அழைக்கும் வியூகம் குறிப்பாக இராமநாதபுரம் நகர் நிர்வாகத்தில் இருந்து மக்களை அதிகளவில் கலந்து கொள்ளச் செய்யவும் திட்டங்கள் வகுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் ஒன்றிய, நகர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.