அஸ்ஸலாமு அலைக்கும்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பாபர் மசூதியை மீட்க கடந்த 1995 முதல் இன்று வரை பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்திவருகிறது..
பாப்ரி மஸ்ஜித் வழக்கை உச்சநீதிமன்றம் விரைந்து முடித்து தீர்ப்பை வழங்க வேண்டும்,
* பாப்ரி மஸ்ஜித் வழக்கில் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,
* பாப்ரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும்,
ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தமுமுக சார்பில் இன்று தமிழகமெங்கும் மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் மக்கள்
திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.அதன் தொடர்சியாக காஞ்சி வடக்கு மாவட்டத்தில் தமுமுகவின் மூத்த தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான போராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களின் தலைமையில் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் 2500க்கும் அதிகமான ஆண்களும் 500க்கும் மேற்பட்ட பெண்களும் கலந்து கொண்டனர்.