கடல் கடந்தது வாழும் சொந்தங்களையும் சமுதாயப் பணி என்ற பந்தத்தின் மூலம் இணைக்கும் ஒரே பேரியக்கம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.
அதன் ஒரு அங்கமான புருனையில் தமிழநாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் களந்தாய்வுக் கூட்டம் நேற்று 1-12-2013 அன்ற நடைபெற்றது. இக்கூட்டம் புருனை தமுமுகத் தலைவர் சகோ.நூருல்அமீன் (தொண்டி) தலைமையிலும், செயலாளர் முஹம்மது சரீஃப் (ஆயங்குடி) பொருளாளர் சகோ.ரிஃபாய் (குளச்சல்), துணைத்தலைவர் சகோ.ஜாஹிர்உசேன் (தஞ்சாவூர்) மற்றும் துணைச்செயலாளர் சகோ.சாகுல்ஹமீது (கோட்டைப்பட்டிணம்) ஆகியோர்களது முன்னிலையிலும் இக்கூட்டம் மிகச் சிறப்பாக நடந்தது.
இக்கூட்டத்தை சிறப்பிக்க தாயகத்தில் இருந்து மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் சகோ.தமீமுன் அன்சாரி அலைபேசியில் சிறப்புரையாற்றினார். இந்தியாவில் தற்போதைய தேர்தல் சூழல் மற்றும் சமுதாயக் களப்பணியை விளக்கினார். மேலும் தமுமுகவின் செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் வழிமுறைகளை விளக்கினார்.
அதன் பின் உரையாற்றிய மௌவலி. அபுதாஹிர் ஒற்றுமையின் அவசியம் மற்றும் புருனை தமுமுகவின் செயல்பாடுகளை விளக்கினார்.
கூட்டத்தின் தீர்மானங்கள்
1. எதிர்வரும் டிசம்பர் 6ல் புருனையின் அனைத்து நிர்வாகிகளும் உறுப்பினர்களும் தங்கள் குடும்பத்தை ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ள அறிவுருத்துவது.
2. புருனை தமுமுகவில் உறுப்பினர்களை அதிகப்படுத்துவது.
3. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தலைமைக்கு முடிந்தளவு பொருளாதார உதவிகள் செய்வது.
4. புருனையில் உள்ள தொழில் அதிபர்களைச் சந்தித்து தமுமுக மற்றும் மமகவின் செயல்பாடுகளை விளக்கி அவர்களையும் உறுப்பினர்களாக்குவது.
5. கூட்டணி அறிவித்தவுடன் தனிநபர் சந்திப்புகளை அதிகப்படுத்தி மமகவுக்கு ஓட்டுப்போட வலியுறுத்துவது.
6. மறுகூட்டம் ஜனவரி 5 2014ல் நடத்துவது.
இக்கூட்டத்தில் ஏராளமான உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
முகவை சீனிமுஹம்மது