அஸ்ஸலாமு அலைக்கும்
முஸ்லிம் என்றாள் யார்..?முஸ்லிம் என்பது அரபு வார்த்தை அதற்கு கட்டுப்பட்டவன்/சரணடைந்தவன்/கீல்ப்படிந்தவன் என்று பொருள் கொள்ளலாம். யாரெல்லாம் ஒரே இறைவனுக்கு மட்டும் கட்டுப்படுகின்றானோ அவர்கள் யாராக இருந்தாலும் யூதராக,கிருஸ்த்தவறாக,ஹிந்துவாக யாராக இருந்தாலும் அவரை முஸ்லிம் என்று அரபியில் அழைப்பர். குர்ஆன் கூறும் இந்த வசனத்தை பார்ப்போம்..!! (குர்ஆன் 3:67)இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை. ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார்;. அவர் முஷ்ரிக்குகளில் (இணைவைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை.எனவே முஸ்லிம் என்பது ஒரு சமூகதின்/நாட்டின்/தனி மனிதனின் பெயர் அல்ல அது ஒரு பதவி. எனவே எம் அனைவரையும் பார்த்து அல்லாஹ் சொல்கின்றான் பின்வருமாறு..!!(குர்ஆன் 3:84)"அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்;. நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.எனவே அவனை பின் பற்றுபவர்கள் முஸ்லிம்கள் என்று தெளிவாக இறைவன் எமக்கு சொல்லி தந்து விட்டான்.மேலும் இந்த முழு உலகமும் முஸ்லிம் என்றும் இறைவன் சொல்கின்றான்.(குர்ஆன் 3:83)அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன. மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்.எனவே முஸ்லிம் என்பது ஒரு சமூகதின்/நாட்டின்/தனி மனிதனின் பெயர் அல்ல அது ஒரு பதவி.இந்த தெளிவோடு கீழ் உள்ள வசனத்தை திரும்ப வாசித்து பாருங்கள்..!!!!!(குர்ஆன் 3:84)"அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்;. நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.எனவே ஈஸா (இயேசு ) வையும் அல்லாஹ் தான் துதராக அனுப்பினான் மற்றும் அவர் ஒரு முஸ்லிமாக இருந்தார் என்பதை அல்லாஹ் தெளிவாக சொல்லி தந்து விட்டான்.இதை பைபிள் அழகாக நிரூபித்து விட்டது எப்படி என்றால்..!!!!யோவான்-5 அதிகாரம்________________________________________ 30. நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.யாரெல்லாம் தன் சித்தப்படி செய்யாமல் கர்த்தரின் சித்தப்படி நடக்கின்றாரோ அவரே முஸ்லிம் என்பதை மேலே நாம் பார்த்தோம். எனவே இயேசு தெளிவாக சொல்லிவிட்டார் தனுடைய சித்தப்படி எதையும் பண்ணாமல் கர்த்தரின் சித்தப்படி செய்வதாக இதைதான் அரபியில் முஸ்லிம் என்று சொல்வது.இன்னும் ஒன்றை மிக முக்கியமாக நாம் இங்கே புரிந்து கொள்ள வேண்டும் அதாவது... என் பிதா என்று என்று இயேசு சொல்லி இருக்கின்றார் எனவே கர்த்தரின் மகன் தான் இயேசு என்று அர்த்தம் கொள்ள கூடாது ஏன் என்றால் பைபளின்வழக்கு படி கர்த்தர் அனைவருக்கும் பிதா... இந்த வசனத்தை படித்தால் உங்கள் சந்தேகம் தெளிவாகும்.மத்தேயு -23 அதிகாரம்________________________________________ 9. பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.அங்கே என் பிதா என்று சொன்ன இயேசு இங்கே உங்கள் பிதா என்று சொல்கின்றார் எனவே இது பைபளின் மொழிவழக்கு என்பது புரிகின்றது.எனவே இயேசு கர்த்தர் இடமே முழுமையாக தங்கி இருந்தார். யாரெல்லாம் கர்த்தரை மட்டும் கடவுள் என்று ஏற்ருக் கொள்கின்றார்களோ அவர்களையே முஸ்லிம்கள் என்று அரபியில் சொல்வோம்.எனவே உங்களையும் இயேசு வணங்கிய அதே கர்த்தரை நோக்கி அழைக்கின்றோம் அரபியில் அல்லாஹ் என்று சொல்வோம். இதை உங்களுக்கு ஒரு அரபி மொழியிலான பைபிள் எடுத்து பார்த்தல் அல்லாஹ் என்ற சொல் பல நூரு தடவை வந்துள்ளதை காணலாம். எனவே அந்த அல்லாஹ் தான் நித்திய ஜீவன். உலகில் தோன்றிய அனைத்து தூதர்களும் அந்த அல்லாஹ்வின் வின் பக்கமே மக்களை அழைத்தார்கள். நாமும் உங்களை அவன் பக்கமே அழைக்கின்றோம்... வாருங்கள் எம்மோடு சேர்ந்து ஒரு கர்த்தரை ஜெபிக்க...உங்களால் முடியமான அளவு எமது இந்த ஆக்கங்களை ஷேர் பண்ணுங்கள்..!! உங்களை கொண்டு ஒரு மனிதன் நேர்வழி பெற்றால் அது இந்த உலகமே கிடைப்பதை விட சிறந்தது..!!!
--
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّي
(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்;உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது)உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. (திருக்குர்ஆன்.1:5-7).
Source
tmmk al-khobar