ஞாயிறு, 29 டிசம்பர், 2013

பா.ஜ.க நினைவிடத்தை இடித்த ஆர்.எஸ்.எஸ் - காட்டிக் கொடுத்த வீடியோ!



கண்ணூர்: பா.ஜ.க நினைவிடத்தை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இடித்ததை சி.சி.டிவி காட்டிக் கொடுத்தது.
மறைந்த பா.ஜ.க உறுப்பினர் கே.டி.ஜெயகிருஷ்ணன் நினைவாக கட்டப்பட்ட தூணையும், அங்கு கட்டப்பட்டிருந்த கொடி தோரணங்கள் மற்றும் ப்ளக்ஸ்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்களால் சேதப்படுத்தப்பட்டன.
ஆனால், இதற்கு ஆர்.எஸ்.எஸ்ஸை விட்டு பிரிந்து தனி இயக்கமாக செயல்படும் நமோ விசார் மஞ்ச் தான் காரணம் என்று பா.ஜ.க குற்றம் சாட்டி 2 பேர் மீது வழக்கு தொடர்ந்தது. ஆனால் ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்த சதிச் செயலை உணர்ந்த நமோ விசார் மஞ்சைச் சார்ந்த சிலர் அப்பகுதியில் சி.சி.டி.வியை முன்னரே நிறுவியிருந்தனர். இதில் ஆர்.எஸ்.எஸ்ஸை சார்ந்தவர்கள் நினைவு தூண், ப்ளக்ஸ் மற்றும் கொடி தோரணங்களை சேதப்படுத்துவது பதிவாகியிருந்தது. இதன் மூலம் சதிச் செயலில் ஈடுபட்டு பெரும் கலவரம் ஏற்பட இவர்கள் முயன்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.
மேலும், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திலும் துண்களை இடித்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதற்கிடையே சி.சி.டி.வி காட்சிகள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, நினைவு தூணை தகர்த்து கலவரம் உருவாக்க திட்டமிட்டதாக குற்றம் சாட்டி நமோ விசார் மஞ்ச் சார்பாக ஆர்.எஸ்.எஸ் காரர்கள் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய இரவு நடந்த இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.