சனி, 27 ஏப்ரல், 2013

தமிழக காவல் துறையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் - சட்டமன்றத்தில் சமுதாயத் தலைவரின் முழக்கம்



தமிழக காவல் துறையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும்

பாஸ்போர்ட் விசாரணைக்கு மக்களை காவல்துறை
அலைக்கழிக்க கூடாது

கோவை நீலகிரி மாவட்டங்களில் வெறுப்புணர்வைத் தூண்டும் உரையாற்றியவர்கள் மீது நடவடிக்கை வேண்டும்

10 ஆண்டுகளாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலைச் செய்யப்பட வேண்டும்

காவல்துறை மானியக் கோரிக்கையின் போது மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை

23.04.2013 அன்று தமிழ்நாடு சட்டபேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை மானியக் கோரிக்கையின் போது மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவர் பேரா எம் எச் ஜவாஹிருல்லா அவர்களின் உரையும் மாண்புமிகு முதலமைச்சரின் பதிலும்

எம் எச் ஜவாஹிருல்லா : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

டெல்லியிலே பெண்களுக்கு எதிராக, சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்று வரக்கூடிய பாலியல் வன்கொடுமைகள் தமிழகத்திலும் நடந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த அக்கறையுடனும், முன்னெச்சரிக்கையுடனும் செயல்பட்டு ஒரு 13 அம்ச செயல் திட்டத்தை தமிழக அரசு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இதுபோன்ற குற்றங்களை காவல்துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் இந்த விசாரணை நடைபெறும் இதுபோன்ற வழக்குகளை விசாரிப்பதற்காக மகளிர் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்ற அந்த அம்சங்களையெல்லாம் நான் வரவேற்கின்றேன்.

அதேநேரத்தில் தமிழகத்திலே சில இடங்களிலே எளிதாகக் கிடைக்கக்கூடிய ஆசிட்களை வைத்துக்கொண்டு பெண்கள் மீதான தாக்குதல் அங்கொன்றும்,இங்கொன்றுமாக நடக்கக்கூடிய சூழலிலே பெண்களைப் பாதுகாப்பதற்காக இந்த எளிய ஆயுதமான ஆசிடை எல்லோருக்கும் கிடைக்காத வகையிலே உரிய சட்டத்தைக் கொண்டுவருதற்கு இந்த அரசு முயற்சி செய்ய வேண்டுமென்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

மாண்புமிகு முதல்வர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,முனைவர் ஜவாஹிருல்லா பேசுகின்ற போது பெண்கள் மீது திராவகம் வீசி நடைபெறும் குற்றங்களைப் பற்றி குறிபிட்டு, அந்த திராகவம் விற்பனையை கட்டுப்பத்த நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்று கோரிக்கையை வைத்தார். திராவகம் வீசி தாக்கும் குற்றங்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் விசாரித்து வருகின்றன. இதன்மீது விசாரணை முடிந்து நீதிமன்றங்கள் அளிக்கும் உத்தரவை தமிழக அரசு செயல்படுத்தும், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

எம் எச் ஜவாஹிருல்லா :மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,தமிழக மக்களுடைய உணர்வுகளையெல்லாம் புரிந்து, கொந்தளிப்பான சூழலிலே சாந்தப்படுத்தி சமூக அமைதியை நிலை நாட்டுவதற்காக டேம்1999 சம்பவத்திலும், விஸ்வரூபம் சம்பவத்திலும், இலங்கையிலே நடைபெற்ற இனப் படுகொலைக்கு எதிராக தன்னெழுச்சியுடன் தமிழகத்திலே மாணவர்கள் போராட்டம் களத்திலே வந்தபோதும் மிகச் சாதுரியமாக இந்த அரசு சமூக அமைதியை நிலை நாட்டியிருக்கின்றது.அதை நான் வரவேற்கின்றேன்.

சிறுபான்மையின மக்கள் மீது மிகுந்த அக்கறை உள்ள இந்த அரசாங்கத்திடம் மிக முக்கியமான கோரிக்கையை நான் வைக்க விரும்புகிறேன். தமிழகத்தில் 2001 ல் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின்படி முஸ்லிம்களுடைய மக்கள் தொகை 5.6 சதவிகிதம் என்று சொல்லப்படுகிறது ஆனால் தமிழக காவல்துறையில் முஸ்லிம்கள் 1சதவிததிற்கும் குறைவாகத்தான் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதை சரிக் கட்டுவதற்கு முஸ்லிம்களுடைய பங்களிப்பு காவல் துறையில் அதிகப்படுத்துவதற்கு இந்த அரசு சிறப்பான முறையிலே நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகத்திலே, முஸ்லிம் இளைஞர்கள் கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது அதற்கான விசாரணைகளை காவல்துறையினுடைய சிறப்புப் பிரிவு மேற்கொள்கின்றது. அதிலே பல இடங்களிலே, பல்வேறு வகையான இடையூறுகள் ஏற்படுகின்றது. உதாரணமாக, சொல்ல வேண்டுமென்றால் 107சி.ஆர்.பி.சி. போன்ற வழக்குகள், அது குற்ற வழக்கே இல்லை ஆனால் காவல் ஆய்வாளர் ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக செய்யக்கூடிய நடவடிக்கையாகும் அப்படி 107 சி.ஆர்.பி.சி. இருந்தாலும்கூட அந்த பாஸ்போர்ட் விசாரணை நீடிக்கப்பட்டு பாஸ்போர்ட் கிடைக்காத ஒரு சூழல் ஏற்பட்டிருக்கின்றது. அதைபோல் ஒரு குற்றம் செய்தததாக கருதப்பட்டு,கைது செய்யப்பட்டு, வழக்கு நடைபெற்று, விடுதலையானப் பிறகும் கூட அப்படிப்பட்டவர்கள் பாஸ்பார்ட்க்கு விண்ணப்பம் செய்யும்போதுகூட,அவர்களுக்கு அந்த விசாரணையிலே தடைகள் ஏற்பட்டு இருக்கக்கூடிய சூழலைப் பார்கின்றோம்.

இந்தப் பாஸ்பார்ட் விசாரணைக்காக சிறப்பு பிரிவு காவல் துறையினர் சம்பந்தப்பட்ட வீடுகளுக்குச் சென்று விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், சில மாவட்டங்களிலே, இராமநாதபுரம் மாவட்டம் உட்பட, பெண்கள் உள்பட எல்லோரையும் காவல்நிலையங்களுக்கு வரவழைத்து விசாரணை செய்யக்கூடிய ஒரு நிலை இருக்கின்றது.இதையும் சீர்படுத்துவதற்கு இந்த அரசு முன் வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

(மாண்புமிகு முதல்வர் அவர்கள் தனது பதிலுரையில் இதற்கு பின்வருமாறு பதிலளித்தார்கள்

மாண்புமிகு முதல்வர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,முனைவர் ஜவாஹிருல்லா பேசுகின்ற போது பாஸ்போர்ட் விசாரணைக்கு பெண்கள் கூட காவல்நிலையத்திற்கு வரவழைக்கப்படுகின்றனர் என்று கூறினார். சி.ஆர்.பி.சி. சட்டத்தின் படி பெண்கள், குழந்தைகளை சாட்சியாக விசாரணை செய்யக்கூடாது காவல்நிலையத்திற்கு அழைக்கக்கூடாது அவர்களை அவர்களது இருப்பிடத்திற்குச் சென்றுதான் விசாரிக்க வேண்டும். எனவே பாஸ்போர்ட் விசாரணைக்கு அவர்களை அழைக்கத் தேவையில்லை அவ்வாறு நடைபெற்றிருந்தால் அது விசாரிக்கப்பட்டு இதுபோன்று இனிமேல் நிகழாமல் பார்த்துக்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

எம் எச் ஜவாஹிருல்லா :மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,சாலை விபத்துகளை தவிர்ப்பதற்காக இந்த அரசு நல்ல முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றது அதைப் பற்றி கொள்கை விளக்கக் குறிப்பிலும்கூட மாண்புமிகு முதலமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்கள். மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவது சாலை விபத்திற்கு மிகு முக்கிய காரணமாக சொல்லப்படுகின்றது, அதுபோன்று மது அருத்தி விட்டு வாகனங்களை ஓட்டுபவர்களை கண்டுப்பிடிப்பதற்காக புதிதாக Breath Analysis என்ற கருவியை 100 கருவிகளை வாங்கப் போகின்றோம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது அதேபோல் உடனடியாக Golden Hours ல் புதிதாக ஏற்கெனவே கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு,செயலிழந்த அந்த விபத்து காப்பகங்களை மீண்டும் இந்த ஆட்சி உருவாக்கும் என்று சொல்லியிருப்பதையும் நான் வரவேற்கின்றேன்.

இராமேஸ்வரம் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வரக்கூடிய ஒரு நகரம்,அங்கே யாத்திரைப் பணியாளர்கள் என்று சொல்லக்கூடியவகையிலே அங்கிருக்ககூடிய முக்கிய இடங்களையெல்லாம் வழிகாட்டியாக காட்டக்கூடிய அந்தச் சங்கத்திலே உறுப்பினர்கள் சேர்வதில் இரண்டு சமூகங்களுக்கு மத்தியிலே ஒரு மோதல் ஏற்பட்டு கலவரம் ஏற்பட்டிருக்கக்கூடிய ஒரு நிலை, அது தொடர்ந்து வரக்கூடிய ஒரு சூழலிலே சமீபத்திலே அங்கு அமைதிக் குழு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.இருந்தாலும் மிக வலுவான நடவடிக்கைகளை எடுத்து அங்கே அமைதி திரும்புவதற்கும், சகஜ நிலை திரும்புவதற்கும் இந்த அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

மாண்புமிகு உறுப்பினர் திரு. எம்.ஆறுமுகம் அவர்கள் உரையாற்றும் போது கோவை போன்ற பகுதிகளிலே இருக்கக்கூடிய பதட்ட நிலையை பற்றிக் குறிப்பிட்ட போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பதட்டத்தை தணிப்பதற்காக இந்த அரசு எடுத்து வரக்கூடிய முயற்சிகளை எல்லாம் சொன்னார்கள். 1997லும் 1998லும் நடைபெற்ற கொடூர சம்பவங்கள் நிச்சயமாக மான்செஸ்டர் ஆர் இந்தியா என்று சொல்லப்படக்கூடிய கோவை மாநகரத்தினுடைய எல்லாத் தரப்பினருக்கும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது அதற்கு அடிப்படை என்ன என்று பார்க்கும்போது அரசியல் இலாபத்திற்காக அரசியல் காரணங்களுக்காக வெறுப்புணர்வைத் தூண்டக்கூடிய பேச்சுகளை சில அரசியல்வாதிகள் சில மதவாத அமைப்புகள் செய்து வருகிறார்கள். செல்வபுரம் பகுதியிலே ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்த ஒருவர் 20ஆம் தேதி பேசும்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பற்றி முஸ்லிம்களைப் பற்றி மிகச் கொச்சையாக பேசுகின்றார். அதோடு நின்றுவிடாமல், அவர் திராவிட அமைப்புகளுடைய தலைவர்களையும் சேர்த்து இணைத்து மிகக் கொச்சையாகப் பேசியுள்ளார்.அப்படிப்பட்ட HATE SPEECH என்று சொல்லக்கூடிய வெறுப்புணர்வைத் துôண்டக்கூடிய வகையிலே பேச்சுகள் நடைபெறும்போது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், நீலகரி மாவட்டத்திலே இப்போது ஏற்பட்டிருக்கக்கூடிய பதட்டத்தினுடைய அடிப்படையைப் பார்க்கும் போது கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி ஏ.டி.எஸ். சுதந்திரத் திடதில் அங்கு நடைபெற்ற ஒரு தீவிர மதவாத அமைப்பினுடைய ஒரு கூட்டத்திலே மிகச் கொச்சையாக மிக மோசமாக நா கூசக்கூடிய வகையிலே பேச்சுகளும் அதேபோல காந்தியடிகளையும்,பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களையும் பேறிஞர் அண்ணா அவர்களையும் முஸ்லிம்களுடன் இணைத்து மிக மோசமாகப் பேசியிருக்கிறார்கள். பொதுமக்கள் காவல்துறையினரிடம் புகார் கொடுக்கின்றார்கள். ஆனால், அதுகுறித்து உரிய நேரத்திலே நடவடிக்கை எடுக்காதததன் காரணமாக, இந்தச் சம்பவங்கள் தொடருகின்றன. கடந்த சனிக்கிழமை கோவையிலே அன்னபூர்ணா ஒட்டலிலே மாலையிலே 5நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன அந்த ஒட்டலில் இருக்கக்கூடியGas Chamber- ல் நல்லவேளை அது விழவில்லை மாலை நேரம் ஏராளமானோர் சாப்பிட்டுக்கொண்டிருக்கக்கூடிய நேரத்திலே Gas Chamber நோக்கி அந்த வெடிகுண்டு வீசப்பட்டது. நல்லவேளை அந்த ஒட்டலில் கண்காணிப்பு கேமராக்கள் இருந்ததன் காரணமாக சரவணப்பட்டியைச் சேர்ந்த பா.ஜ.க.வைச் சார்ந்த 3 பேர்களை உடனடியாக காவல்துறை கைது செய்கின்றது. எனவே நிச்சயமாக அபார்ட்மென்டுகளில் இது போன்ற ஒட்டல்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்பதைக் கட்டயமாக இந்த அரசு அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மாண்புமிகு முதல்வர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பொது இடங்களிலும், பொதுமக்கள் கூடுகின்ற இடங்களிலும் கட்டாயமாக சிசிடிவி கேமராக்கள் வைக்க வேண்டும் என்று ஏற்கெனவே இந்த அரசு உத்திரவிட்டுள்ளது. அது கொள்கை விளக்கக் குறிப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை அரசு கடுமையாக அமல்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

எம் எச் ஜவாஹிருல்லா: மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய அறிவிப்புக்கு நன்றி மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்றைக்கு தமிழகத்திலே வேலூர் சிறையில் 3 தமிழர்கள் தூக்கை எதிர்நோக்கிக் கொண்டிருக்கக்கூடிய ஒரு நிலையிலே அரசியல் சாசன சட்டத்தின் 161 வது பிரிவை பயன்படுத்தி அமைச்சரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி மாண்புமிகு மாநில ஆளுநர் அவர்களுக்கு அனுப்ப வேண்டும்.இதனைகடந்த திமுக ஆட்சியினர் அப்போதே செய்திருக்கலாம்,செய்வதற்குத் தவறிவிட்டார்கள்.

இந்த ஆட்சியிலே தமிழர்களைப் பற்றி தமிழக மக்களின்மேல் அக்கறைகொண்டு ஏராளமாக நாம் செய்திருக்கின்றோம். 161 வது பிரிவின் கீழ் இந்த மூவரின் உயிரைக் காப்பதற்கு இந்த அரசு முன்வரவேண்டும் அதேபோல் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனைக் கைதிகளாக தமிழக சிறையிலே இருக்கக்கூடிய அனைவரையும் 161வது பிரிவின் கீழ் அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கர்நாடகப் போலிசாரைக் கண்டித்து தமுமுக ஆர்பாட்டம்


அதிரையில் பேரணி ஆர்ப்பாட்டம்

பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் அப்பாவி தமிழக முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து இன்று 27-04-2013 மாலை 3.00 மணிக்கு கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் அதிராம்பட்டினத்தில் நடைபெற உள்ளது. தமுமுக பொதுசெயலாளர் அண்ணன் ப.அப்துல் சமது அவர்கள் கண்டன உரை நிகழ்த்துகின்றார்கள்.
அனைவரும் பெங்கேடுத்து அநீதிக்கு எதிராக ஆர்ப்பரிப்போம் இன்ஷா அல்லாஹ்....

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

இவரை பற்றி தெரியாத தகவல்கள்!!!


டித்ததில் பிடித்து என்ற வரிசையில் மனிதனேயம் உள்ள மார்கஸ் அவர்களின் கட்டுரையை அப்படியே தந்துயுள்ளேன்.நாம் சொல்வதைவிட சகோதரர் மார்க்ஸ் சரியாக சொல்லியுள்ளார்...

ஒரு ஜனநாயக அரசமைப்பில் சட்டமன்றம்மற்றும் நாடாளுமன்றங்களின் பங்கு மிக மிக முக்கியமானது. வெறுமனே சட்டங்களை இயற்றுவது மட்டும் அதன் பணி அல்ல. சட்டம் இயற்றுதல், மக்களின் குறைகளைத் தீர்த்தல், தேசிய மற்றும்சமூக அளவிலான மோதல்களுக்குத் தீர்வு காணுதல் (conflict resolution) எனச் சுமார் இருபதுபணிகள் அதற்கு உண்டு என்பர்.
ஆளும் கட்சியும் அதனால் அமைக்கப்பட்ட அமைச்சரவையும்தான்ஆட்சி செய்கின்றன என்றபோதிலும் ஒரு ஜனநாயக ஆட்சி முறையில் அரசுகளைச் சட்டமன்றங்களும் நாடாளுமன்றமும் கட்டுப்படுத்துகின்றன.

ஜனநாயகம் என்பது பெரும்பான்மையின்ஆட்சி என்பது மட்டுமல்ல. சிறுபான்மை தனது கருத்துக்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கும்,பிரச்சாரம் செய்வதற்கும், செயல்படுத்துவதற்குமான சாத்தியங்களும் உரிமைகளும் சேர்ந்ததேஜனநாயகம். அந்த வகையில் அரசின் திட்டங்களில் தலையிடுவதும், கருத்துத் தெரிவிப்பதும்,விமர்சிப்பதும், இவற்றினூடாக அத் திட்டங்களில் உரிய மாற்றங்களைச் செய்வதும் கொள்கையளவில்ஜனநாயகத்தில் சாத்தியம். அதைச் சாத்தியப்படுத்தும் முக்கிய நிறுவனங்களாகச் சட்டமன்றங்களும் நாடாளுமன்றமும் நிலவுகின்றன.

அந்த வகையில் சட்டமன்ற, நாடாளுமன்றஉறுப்பினர்களின் பங்கு முக்கியமானது. அதற்குரிய வகையில் அவர்கள் திறனும் ஆளுமையும்மிக்கவர்களாக இருத்தல் அவசியம், இம் மன்றங்களில் அவர்கள் ஆற்றக்கூடிய உரைகளில் ஆழமும்கருத்துச் செறிவும் மட்டும் முக்கியமல்ல. எதிராளியையும் தம் கருத்திலுள்ள நியாயங்களைஏற்கச் செய்யும் தர்க்க மற்றும் வாதத் திறன்களும் முக்கியம். நறுக்குத் தெரித்தாற்போலும்,நகைச்சுவைத் திறனுடனும், மிக்க சமயோசித்துடனும் மக்கள் மன்ற விவாதங்களில் ஒளியூட்டியவர்கள்இந்திய, தமிழக மாமன்ற வரலாற்றில் பலருண்டு. ராம்மனோகர் லோகியா, இந்திரஜித் குப்தா,புபேஷ் குப்தா, பிலு மோடி, தாராகேஸ்வரி சின்ஹா, ராஜாஜி, கே.டி.கே. தங்கமணி, சி.என்.அண்ணாதுரை,கிருபளானி என இந்த வரிசையில் பலரைச் சொல்ல இயலும்.
புகழ்பெற்ற நாடாளுமன்றப் பேச்சுகள்குறித்த நூல்களைப் புரட்டினால் அவற்றில் லாயிட் ஜார்ஜ், வின்சென்ட் சர்ச்சில், ஜியாஃப்ரேஹோ முதலோனோர் மிகவும் நெருக்கடியான சந்தர்ப்ப்ங்களை எவ்வாறு கையாண்டுள்ளார்கள் என்பதுவிளங்கும். ஜவஹர்லால் நேருவின் புகழ்பெற்ற “Tryst with Destiny” உரையும், டாக்டர் அம்பேத்கர்அரசியல் சட்ட அவையில் ஆற்றிய இறுதி உரையும் இந்த வரிசையில் குறிப்பிடத் தக்கன.

ஆனால் இன்று சட்டமன்றங்களும் நாடாளுமன்றங்களும்இந்த அற்புதமான பாரம்பரியங்களை இழந்து வெட்டிப் பேச்சு மடங்களாகவும், அதிகாரத்திலுள்ளவர்களின்புகழைப்பாடித் தெண்டனிடும் கொட்டரங்களாகவும் மாறிவிட்டன. தேர்ந்த அரசியலறிவும், கண்ணியமும்மிக்க உறுப்பினர்களால் நிரம்பியிருந்த இந்த அவைகளை இன்று ஒவ்வொரு கட்சியும் பெரிய அளவில்கிரிமினல்களைக் கொண்டு நிரப்புகின்றன.
இதில் எந்தக் கட்சியும் விதிவிலக்கில்லை. ஆபாசமாகப்பேசுவது, ஆபாசச் சைகைகளைக் காட்டி மிரட்டுவது, ஆபாசப் படங்களைச் செல்போனில் பார்த்துரசித்துக் கொண்டிருப்பது என்பதெல்லாம் இன்று இந்த மாமன்றங்களில் சகஜமாகிவிட்டன. நாடாளுமன்றஜனநாயகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் முதலமைச்சருக்குச் சமமாக மதிக்கப்படுபவர். அத்தகையஎதிக்கட்சித் தலைவர் ஐந்தாண்டு காலமும் சட்டமன்றத்தையே மிதிக்காத வரலாறுகள் தமிழகத்தில்மட்டுமே உண்டு.

இந்திய நாடாளுமன்றச் செயல்பாடுகள்குறித்து மிக விரிவாக ஆய்வுகளைச் செய்துள்ள
டாக்டர் சுபாஷ் காஷ்யப், முன்னெல்லாம் நாடாளுமன்றநேரத்தில் 49 சதம் சட்ட உருவாக்கத்தில் செலவிடப்பட்டது எனவும், இது இப்போது 13 சதமாகக்குறைந்துள்ளது எனவும் குறிப்பிடுகிறார், யாரும் சட்ட மசோதாக்களை ஆழமாகப் படித்து விவாதிப்பதில்லை.கடந்த 30 ஆண்டுகளில் ஒரு தனி நபர் மசோதா கூட நிறைவேற்றப்படவில்லை என்கிறார் காஷ்யப்.அரசு மசோதாக்கள் எந்தப் பெரிய விவாதங்களுமின்றிச் சடசடவென மன்றத் தொடரின் இறுதி நாட்களில் நிறைவேற்றி முடித்துக் கொள்ளப்படுகின்றன.தேவையான ‘கோரம்’ இல்லாமல் சட்டங்களை நிறைவேற்றுவதும் வாடிக்கையாகிவிட்டன.
இத்தனைக்கும் நமது நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் அதிகாரங்களும், சலுகைகளும், ஊதியமும் ஏராளம்.

இப்படியான ஒரு சூழலில் கடந்த இருஆண்டுகளில் தமிழகச் சட்டமன்றத்தில் ‘மனித நேயமக்கள் கட்சி’யின் உறுப்பினர்கள் இருவரும் ஆற்றியுள்ள உரைகளின் தொகுப்பை வாசிக்கும்போது ஆறுதல் ஏற்படுகிறது. இருவருமே சட்டமன்றத்தின்கன்னி உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ம.ம.கவின் சட்டமன்றத் தலைவர் பேராசிரியர்முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் நாடறிந்த ஒரு அரசியல்வதி, தலைவர், மாணவப் பருவத்திலிருந்துஅரசியல் செயற்பாடுகளும், நீண்ட காலப் பேராசிரிய அனுபவமும் மிக்கவர். பொது வாழ்வில்நேர்மைக்குப் பெயர் பெற்றவர்.
தொண்ணூறுகளில் முஸ்லிம்கள் மத்தியில் empowerment என்கிறகோரிக்கை மேலெழுந்தபோது முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டிற்கான இயக்கம் ஒன்றை உருவாக்கி,பல்வேறு போராட்டங்கள் முன்னெடுத்து இறுதியில் அதைச் சாதித்துக் காட்டியதில் முக்கியபங்காற்றியவர், முஸ்லிம்களின் பிரச்சினைக்குள் மட்டும் முடங்கிவிடாமல் அனைத்து மக்களின்பிரச்சினைகள் குறித்தும் கருத்துச் சொல்லத் தக்க ஆளுமையும் திறனும் உடையவர். அவ்வகையில்அனைத்து இயக்கங்களாலும் மதிக்கப்படுபவர்.

இந்த இரண்டாண்டுகளில் அவர் சட்டமன்றத்தில்தமிழக மக்களைப் பாதிக்கும் அனைத்துப் பிரச்சினைகளை, குறித்தும் முக்கியமான கருத்துக்களை முன்வைத்து உரையாற்றியுள்ளார். இலங்கைப் படையினரால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவது,அருந்ததியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உள் ஒதுக்கீடு பாதுகாக்கப்படுவதன் அவசியம், நிகர்நிலைப் பலகலைக் கழகங்களில் இட ஒதுக்கீடு முதலியன கடைபிடிக்கப் படாமை,
சித்த மருத்துவத்தைப்பாதுகாப்பதன் அவசியம் மற்றும் சித்த மருத்துவக் கல்விக்குத் தற்போது ஏற்பட்டுள்ள தடையைநீக்குவதற்கான வழிமுறைகள், கூடங்குளப் போராளிகள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுதல்,தமிழகத்தில் மதுபானக் கடைகளை மூடுதல் எனச் சகல மக்களுக்குமான பொதுப் பிரச்சினைகளை முன்வைத்துப்பேசியதோடு அவர் நிற்கவில்லை.

ஒரு முஸ்லிம் அல்லது தலித் சட்டமன்றஉறுப்பினருக்குக் குறைந்தபட்சம் மூன்று கடமைகள் உண்டு. ஒரு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்கிற வகையில் அவர் தொகுதி மக்களின் பிரச்சினைகளை முன்வைக்க வேண்டும்; பொதுவான அரசியல்பிரச்சினைகளிலும் அவர் நிலைபாடு மேற்கொண்டு கருத்துச் சொல்லியாக வேண்டும்; தாம் ஒருசிறுபான்மைச் சமூகத்தவர் என்கிற வகையில் அந்தச் சமூகத்தைப் பாதிக்கும் பிரச்சினைகளையும்அவரே முன்னெடுத்தாக வேண்டும்.
தி.முக, அ.தி.மு.க அல்லது கம்டூனிஸ்ட் கட்சிகள் போன்றவற்றில்உள்ள தலித் அல்லது முஸ்லிம் உறுப்பினர்களால் இந்த மூன்றாவது பணியைத் திறம்படச் செய்யஇயலாது. குறிப்பிட்ட பிரச்சினை குறித்து தான் சார்ந்துள்ள கட்சியின் நிலைபாட்டைத்தான்அவர் பேச முடியுமே ஒழிய முஸ்லிம்கள் அல்லது தலித்களுக்கு எது நல்லது என அவர் பேசிவிடஇயலாது. ஆனால் ஜவாஹிருல்லஹ் போன்ற முஸ்லிம்களுக்கான தனித்த அடையாளத்துடன் கூடிய கட்சியைச்சார்ந்தவர்கள் முஸ்லிம்களின் நலன்களை முன்வைத்துச் சுதந்திரமாக இயங்க இயலும். அந்த வகையில் அவர் ஒரு தொகுதியின் பிரதிநிதியாக மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம்மக்களின் பிரதிநிதியாகவும் சட்டமன்றத்தில் பணியாற்ற வேண்டியுள்ளது. இதனூடாக அவரது பொறுப்பும் சுமையும் கூடுதலாகின்றன.

இந்த மூன்று பணிகளையும் அவர் செவ்வனே செய்து வருவதற்கான சான்றாக அவரது சட்டமன்ற உரைகள் அமைந்துள்ளன. முஸ்லிம் இட ஒதுக்கீட்டின்அளவை அதிகரிக்க வேண்டிய அவசியம், முலிம்களின் திருமணப் பதிவு குறித்துக் கொண்டுவரப்பட்டுள்ளசட்டத்தில் கண்டுள்ள சிக்கல்கள்,
வக்ஃப் வாரியத்திர்கு மானியம் அளிக்க வேண்டியதன் அவசியம்,ஓரியண்டல் பள்ளிகளின் தனித்தன்மையைக் காக்க வேண்டியதன் தேவை, கல்வி நிலையங்களுக்குச்சிறுபான்மை நிலை வழங்குவதிலுள்ள குளறுபடிகளை நீக்குதல், TAMCO மூலம் அளிக்கப்படும்உதவித் தொகைகளை அதிகரித்தல், மதம்மாறி வருபவர்களுக்குப் பிற்படுத்தப்பட்ட பிரிவுச்சான்றளிப்பதன் உடனடி அவசியம் என ஒட்டு மொத்தமான முஸ்லிம்களின் கோரிக்கையை அவர் முன்வைக்கிறார்.

இன்னொருபக்கம் கச்சத் தீவுப் பகுதியில்நமது மீனவர்களின் உரிமையைப் பாதுகாத்தல், இலங்கைப் படைகளால் கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பதவி அளித்தல், கடல் அட்டை மீதான மீன்பிடித் தடையைநீக்குதல், இராமநாதபுரத்தில் மருத்துவக் கல்லூரி அமைத்தலின் அவசியம், கடல் அரிப்புக்குத்தடுப்புச் சுவர் கட்டுதல், பாம்பன் கால்வாயைத் தூர் வாருதல், ராமேஸ்வரம் தீவுக்குப்பூமி அடியாகக் கேபிள்கள் மூலம் மின் சக்தி கொண்டுவருதல், புறவழிச்சாலை அமைத்தல் எனத்தொகுதிப் பிரச்சினைகள் ஆகியவற்றிற்கும் அழுத்தம் கொடுத்துப் பேசியுள்ளார். ராமேஸ்வரம்அதிக அளவில் மீனவர்கள் வாழும் தொகுதி என்பதால் மீனவர்களின் பிரச்சினையும் அவரது பேச்சுக்களில்முக்கியத்துவம் பெறுகின்றன.

ம.ம.கவின் இன்னொரு உறுப்பினரும்ஆம்பூர்த் தொகுதியைப் பிரதிநிதித்துவப் படுத்துபவருமான அ.அஸ்லம் பாஷா அவர்களும் இவ்வாறு தொகுதிப் பிரச்சினை, முஸ்லிம்களின் பிரச்சினை பொதுப்பிரச்சினை என மூன்றிற்கும் முக்கியத்துவம்அளித்துப் பேசியுள்ளார்.

ம.ம.க ஆளும் கூட்டணிக் கட்சிகளில் ஒன்று. எனவே இவர்கள் “கூட்டணிதர்மத்திற்குள்” நின்று பேச வேண்டிய நிர்ப்பந்தத்தையும் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.முஸ்லிம் சிறைக் கைதிகளை விடுதலை செய்தல், முந்தைய தி.மு.க ஆட்சியில் முஸ்லிம்களுக்குஅளிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டின் அளவை அதிகப் படுத்துதல் முதலான சட்டமன்றப் பேசுக்கள்அழுத்தமாக அமைந்த போதும் ஜெயலலிதா அரசு அவற்றைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை என்பதையும்நம்மால் கவனிக்க முடிகிறது.

ஜனநாயக அரசில் சட்டமன்றம் மூலமாககோரிக்கைகளை வைப்பது நமது செயற்பாடுகளின் ஒரங்கம் மட்டுமே. அதனை மிகச் சிறப்பாக ம.ம.கவின்இரு உறுப்பினர்களும் செவ்வனே செய்துள்ளனர். பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் ஒரு முஸ்லிம்தலைவர் என்கிற நிலைக்கும் அப்பால் ஒட்டுமொத்தத் தமிழர்களின் நலன்களையும் பிரதிபலிக்கும்தலைவராக மலர்ந்துள்ளமைக்கு அவரது சட்டமன்ற உரைகள் சாட்சியமளிக்கின்றன. சட்டமன்ற உரைகளால்சாதிக்க முடியாத கோரிக்கைகளை நாம் வீதியில் இறங்கித்தான் சாதித்தாக வேண்டும். அப்படியானபல போராட்டங்களை முன்னெடுத்த பாரம்பரியமிக்க த.மு.மு.கவின் வழிவந்தோர் அதற்கும் தயங்கார்என்பதை நாம் அறிவோம்.

Thanks (kiliyanur.net)

கச்சத்தீவு-மறைக்கப்பட்ட உண்மைகள்!

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள கடற்பரப்பில்(மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணைப்பு) பல மணற் திட்டுக்களும்,சிறிதும் பெரிதுமான பல தீவுகளும் உள்ளன,அவற்றில் குறிப்பிடத்தக்க அளவில் 12 தீவுகள் உள்ளன,

1480 ம் ஆண்டில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் பெரும் புயல் ஏற்பட கடற் அடிப்பரப்பில் ஏற்பட்ட நிலவியல் மாற்றத்தால் வங்கக் கடலில் ராமேஸ்வரம் தீவும் அதை சுற்றி 11 தீவுகளும் உண்டாயின என்கிறார்கள்.

அத்தீவுகளின் பெயர்கள்:

01 ராமேஸ்வரம்

02 குந்துகால் தீவு

03 புனவாசல் தீவு

04 முயல் தீவு

05 பூமரிச்சான் தீவு

06 முல்லைத் தீவு

07 மணல் தீவு

08 வாலித் தீவு (கச்சத் தீவு)

09 அப்பா தீவு

10 நல்ல தண்ணீர் தீவு

11 உப்பு தண்ணீர் தீவு

12 குருசடி தீவு



இதில் ஓரளவு பெரிய பரப்பினைக்கொண்டது கச்சத்தீவு  கும் ,ராமேஷ்வரத்தில் இருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது, பரப்பளவு சுமார்  285 ஏக்கர்(1.15ச.கி.மீ).

இத்தீவானது 1974 ஆம் ஆண்டு வரையில் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது, 1974 இல் இலங்கை பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகாவிற்கும், இந்திய பிரதமர் இந்திராகாந்திக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைக்கு விட்டுக்கொடுக்கப்பட்டது அன்று முதல் இக்கடற்பரப்பில் தமிழக மீனவர்களுக்கு சோதனைக்காலம் துவங்கிவிட்டது.

கச்சத்தீவினை தாரைவார்த்துக்கொடுத்ததின் பின்னால் உள்ள அரசியலையும், நமது தமிழக அரசியல் தலைவர்களின்  செயல்படாத்தன்மையும் விரிவாக காணலாம்.

1974 ஒப்பந்தம்:

பண்டார நாயகா மறைவுக்கு பின்னர் அவரது மனைவி சிரிமாவோ பண்டார நாயகா இலங்கையின் பிரதமராக பதவிக்கு வந்தார், ஆனால் அவருக்கு இலங்கையில் அரசியல் ரீதியாக பல நெருக்கடிகள் ஏற்பட்டதால் தனது அரசியலை வலுவாக்கிக்கொள்ள ஏதேனும் அசாத்திய சாதனை செய்ய விரும்பினார், இதனால் நீண்ட நாட்களாக இலங்கை உரிமைக்கேட்டு வந்த கட்சத்தீவு பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு ,அப்போதைய இந்திய பிரதமரை அனுகினார்.



பண்டாரநாயகா காலம் தொட்டே நேரு குடும்பத்துடன் நட்புறவு கொண்டிருந்தார்கள்,அதே நட்புடன் இந்திராவும் இருந்ததால் காரியம் சாதிக்க விரும்பினார். அக்காலக்கட்டத்தில் இந்திரா தலைமையிலான அரசுக்கும் ஒரு நெருக்கடி உருவானது,அது என்னவெனில்,மே-18,1974 இல் இந்திராவின் திட்டப்பட்டி ,ராஜஸ்தான் பாலைவனத்தில் போக்ரானில் முதல் அணுகுண்டு வெடிப்பு சோதனை நிகழ்த்தப்பட்டிருந்து. இதனால் உலக நாடுகள் எல்லாம் இந்தியாவின் மீது கோபம் கொண்டிருந்தன, மேலும் ஐநா சபையில் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க ஒரு தீர்மானம் கொண்டு வரும் திட்டமும் இருந்தது. எனவே ஐநா சபையில் தனக்கான ஆதரவை திரட்ட அண்டை நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக்கொள்ள இந்திரா காந்தி அவர்கள் ஆர்வமாக இருந்த சூழலில், சிரிமாவோ கட்சத்தீவைக்கேட்கவும் விட்டுக்கொடுத்து இலங்கையை வளைத்துவிடலாம் என திட்டமிட்டார்கள்.

பல நாடுகள் இருக்கும் போது இலங்கையால் என்ன பெரிதாக ஐநாவில் உதவிட முடியும் என நினைக்கலாம்,ஆனால் அந்த காலக்கட்டத்தில் ஐநாவின் பாதுகாப்பு அவையின் தற்காலிக உறுப்புநாடுகளின் தலைமை பொறுப்பினை இலங்கையே வகித்து வந்தது.

ஐநா பாதுகாப்பு அவையில் ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினர்கள்,அது அல்லாமல் 15 உறுப்பினர்களை தற்காலிகமாக தேர்ந்தெடுப்பார்கள், பின்னர் அவர்களில் ஒரு நாட்டினை அகரவரிசைப்ப்படி ஒவ்வொரு மாதமும் பாதுகாப்பு அவையின் தலைவராக சுழற்சி முறையில் தேர்வு செய்வார்கள், எனவே அக்காலத்தில் இலங்கைக்கு பாதுகாப்பு அவையின் தலைவராக வரும் சூழல் உருவானது.

எனவே இலங்கையை வளைப்பதன் மூலம் ஐநா பாதுகாப்பு அவையில் கொண்டு வரும் தீர்மானத்தினை தகர்க்கலாம் என திட்டம் போட்டு ,கச்சத்தீவினை தாரை வார்க்கும் திட்டத்தினை முன்னெடுத்தார் இந்திராகாந்தி.

இது போன்ற "சூப்பர் திட்டங்களை" எல்லாம் அரசியல்வாதியே போட்டிருப்பார் என்றெல்லாம் சொல்ல முடியாது,எல்லாம் அயலக உறவுத்துறை அதிகாரிகளின் கைங்கரியமாகத்தான் இருக்க வேண்டும்.

இத்தனைக்கும், 1971 ஆம் ஆண்டு பங்களாதேச உருவாக்க போரின் போது ,பாகிஸ்தான் விமான படை விமானங்கள் இந்திய வான் வெளியில் பறக்க தடை என்பதால் ,அரபிக்கடலில் சுற்றிக்கொண்டு ,கிழக்கு பாகிஸ்தான் எனப்பட்ட பங்க்ளாதேசத்திற்கு செல்ல வேண்டிய நிலை,அப்பொழது, விமான படை விமானங்களுக்கு எரிப்பொருள் கொடுத்து பாகிஸ்தானுடன் நட்புப்பாராட்டிய நாடு தான் இலங்கை. ஆனாலும் அதை எல்லாம் மறந்துவிட்டு நட்புப்பாராட்டி கச்சத்தீவினை கொடுக்க நம்ம ஆட்களே வரிந்துக்கட்டி வேலை செய்தார்கள் என்பதை எந்த வகையில் சேர்க்க?

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும் அன்னிய நாட்டிற்கு விட்டுக்கொடுக்க நம் அரசியல் அமைப்பு சட்டத்தில் இடமேயில்லை, சட்டமேதை அம்பேத்கார் தொலைநோக்கு பார்வையோடு அப்படி ஒரு கிடுக்கிப்பிடி போட்டு வைத்திருந்தார் எனலாம். அதனைப்பின்னர் விரிவாக காணலாம்.

இந்திய நாட்டின்  ஒரு பகுதி என சொன்னால் தானே கொடுக்க முடியாது என கட்சத்தீவு இந்தியாவின் பகுதியேயில்லை ,இரு நாட்டுக்கும் இடையே பொதுவாக உள்ள ஒரு பகுதி ,யாருக்கு சொந்தம் என தெரியாத "டிஸ்பியுட்டட்" லேண்ட் என இந்தியாவே வலிய தெரிவித்தது. இது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம் ஆகும்.ஏன் எனில் கட்சத்தீவு தமிழகத்தின் ஒரு பகுதியாகும் அதற்கான ஆதரங்களும் உள்ளன.

இவ்வாறு கடல்ப்பகுதியில் உள்ள பகுதியில் ஒரு இடத்தினையும் உடனே கொடுக்க முடியாது,புதிதாக கடல் எல்லையை வரையறுக்க வேண்டும்.எனவே 1974 இந்தியா-இலங்கை கடல் எல்லை மறுசீரமைப்பு ஒப்பந்தம் என போடப்பட்டது. பின்னர் கச்சத்தீவினை இலங்கைக்கு விட்டுக்கொடுப்பதாகவும், இந்திய மீனவர்களுக்கு என சில  உரிமைகள் அளிக்க ஒப்பந்தம் இடப்பட்டுள்ளதாகவும் சொல்லி கட்சத்தீவினை தாரை வார்த்துவிட்டார்கள்.

இதில் நடந்த உரிமை மீறல்களை காண்போம்,

இரு நாட்டுக்கடல் எல்லைகள் ஒன்றின் மீது ஒன்றாக பரவும் நிலையில் புதிய கடல் எல்லை வகுக்க வேண்டும் எனில் ,இருநாட்டுக்கும் சம தூரம் வருமாறு கடல் எல்லை வகுக்க வேண்டும்,அப்படி செய்தால் கட்சத்தீவு தானாகவே இந்திய கடல் எல்லைக்குள் வந்துவிடும் என்கிறார்கள்,ஆனால் அப்படி செய்யாமல் இலங்கைக்கு அதிகப்படியான கடல் எல்லை வருமாறு எல்லைப்பிரித்து விட்டார்கள்.

மேலும் இந்தியாவின் ஒரு அங்கமான நிலப்பரப்பை வேண்டுமென்றே இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அதனை விரிவாக காண்போம்.

கச்சத்தீவு தமிழகத்தின் ஒரு பகுதி:

வெள்ளையர்களின் காலனியாக இந்தியா இருந்த போதும் இந்தியாவில் பல தன்னாட்சி பெற்ற சமஸ்தானங்களும்,ஜமீந்தார்களும் இருந்தார்கள்,அவர்களின் ஆளுகைக்குட்பட்ட நிலப்பரப்பின் உரிமையாளர்கள் அவர்களே, பிரிட்டீஷ் அரசு கூட அல்ல.

தமிழகத்தின் ராமநாதபுரம் சமஸ்தானத்துக்குட்பட்ட ஒரு நிலப்பரப்பே கச்சத்தீவு ஆகும், கி.பி 1882 ஆம் ஆண்டு முதல் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் கச்சத்தீவு உட்பட எட்டுத்தீவுகளுக்கு உரிமையாளர்கள் ராமநாதபுர சமஸ்தானமே. இதற்கான ஆவணங்களும், மேலும் பலருடன் இடப்பட்ட குத்தகை ஒப்பந்தங்களும் உள்ளன. வெள்ளையருக்கே கூட தீவுகளை குத்தகைக்கு விட்டிருக்கிறார் என ஆவணங்கள் உள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

மேலும் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தினை கட்டியதும் ஒரு தமிழரே, 1905ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த சீனி கருப்பன் படையாச்சி என்ற மீனவர் புனித அந்தோனியார் கோயிலைக் கட்டினார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4ம் நாள் திருவிழா நடக்கும். இதில் தமிழர்கள் யாருடைய அனுமதியும் பெறாமல் செல்லாம். இலங்கை பக்தர்கள் இலங்கை அரசின் அனுமதி பெற்று தான் வரவேண்டும்.

கச்சத்தீவுரிமையை நிலைநாட்டும் பல ஒப்பந்தங்கள்,ஆவண விவரங்கள்:

1. During A.D. 1605, the clan of Ramanathapuram Sethupathy King was established by the Madurai Nayaks, incorporating 69 coastal villages and 7 Islands, of which Katchatheevu Island is one of the Island.

2. A copper plate plaque issued by King Koothan Sethupathy who ruled Ramanathapuram during the years 1622- 1635, depicts that the Sea upto Talaimannar belonged to Sethupathy Kings.

3. Coronation flowers which adorn the Goddess, Malai Valar Kathali Ammai of Rameswaram are grown in Katchatheevu Island. Similarly, cattle’s that are donated to the Temple are cared for in Katchatheevu Island and the Milk and other items needed for pooja are brought only from Katchatheevu island.

4. In the Kingdom of Ramanathapuram, there existed a separate account section to maintain and audit the accounts of Kathatheevu Island.

5. In the plaque issued to Jamindarine Mangaleswari Natchiyar, who took over after the period of Ramanathapuram King Muthuramalinga Sethupathy (who was imprisoned for a long period for having opposed the British), it is clearly mentioned that Katchatheevu Island belonged to Ramanathapuram Zamin.

6. There is a clear document evidencing leasing out Katchatheevu Island to East India Company by Ramanathapuram Sethupathy in the year 1822.

7. In Queen Victoria’s 1858 Proclamation whereby the powers got transferred to British Rule from East India Company, reference is made that Katchatheevu Island belong to Ramanathapuram Zamin.

8. P.P.Peris, who during the years of British Rule in 1936- 40, served as an Assistant Draftsman and later became a Ministerial Secretary after Sri Lanka attained independence, on 08.05.1966, made the following statement, confirming that Katchatheevu Island belonged to Ramanathapuram Kings. He says, “During the years 1936-40, when I served as Assistant Draftsman in the Land Survey Department, I was directed to survey the district boundaries of Ceylon. Therefore, I perused all records, documents, historical evidences and the Queen Victoria’s proclamation, by which 1 found that Katchatheevu Island belonged to King Sethupathy, Therefore I drew the Northern District of Ceylon delineating Katchatheevu Island.” This statement issued by the Ministerial Secretary on 08.05.1966, was widely reported in the then Daily Mirror published from Sri Lanka and thereafter reported in Indian Express in India.

9. There is a Registered Document (Registration No. 510/1880, Book 1, Volume 16) evidencing the fact that on 23.06.1880, eight coastal villages and four Island, including the Katchatheevu Island, belong to the Ramanathapuram Sethupathy’s were given in lease by the District Collector, Madurai jointly to one Abdul Kadar Marakayar and Muthusamy Pillai.

10. By a document dt.04.02.1885 (Registration No. 134/1885), Muthusamy Pillai, has taken the Katchatheevu Island on an annual lease of Rs.15 per annum from the Estate Manager of Ramanathapuram Sethupathy for the purpose of procuring dye roots.

11. Under a pact entered into between the Dutch and Ramanathapuram Seethupathy during the year 1767, a clause was incorporated to permit ail those residing Ramanathapuram Zamin can always visit Katchtheevu Island.

12. Baskara Sethypathy of Ramanathapuram, has assigned a portion of Katchatheevu island to Poet Sundaram.

13. When Zamindari Abolition Act came into force, Katchatheevu Island is mentioned as 285 Acres of Government Poromboke land in Ramanathapuram Village.

14. In the Ramanathpuram Gazetteer, issued by S.A.Viswanathan, Assistant Revenue Officer, Madras (then Tamiinadu was called Madras) on 11.11.1958, in Register No.68, Katchatheevu Island is shown as comprised in Ramanathapuram Village.

15. On 01.07.1913, when few Islands were taken on a 15 year lease by the Government of Madras Presidency from Ramanathapuram Sethupathy, Katchatheevu Island is mentioned by the Secretary to Government, as a territory belonging to Ramanathapuram Zamin and situate on the North East of Ramanathapuram.

16. In the year 1947, one K.M.Mohammed Merasa Marakayar, took the Katchatheevu Island on lease from Ramanathapuram Sethupathy. In the documents which was then executed, Katchatheevu Island was shown as a territory situated between Talaimannar and Danuskodi and belonging to Ramanathapuram Suzerainty.

17. In the Land Document Register issued by the Government, firstly issued in the year 1957 and again reprinted and issued as an updated publication, in the year 1966, at page 107, Katchatheevu Island is mentioned as a uninhabited territory belonging to Danuskodi.

18. Between the years 1913 and 1928, many Islands including the Katchatheevu Island were taken on lease from Ramanathapuram Sethupathy Kings and were again sublet to fishermen.

19. On several occasion the Sethupathy Kings, have themselves directly leased out many islands including the Katchatheevu Island to fishermen. There are records to show that fishermen from Tondi and Nambuthazhai have taken such leases.

20. In all the Indian Land Survey Records issued between the years 1874 and 1956, Katchatheevu Island is depicted as an Indian Territory alone. The Indian Land Survey Department has mentioned Katchatheevu Island as, measuring 285 Acres and 20 cents comprised in Survey No.1250,

மூலம்:  http://katchatheevu.com/katchatheevu-is-ours-concrete-evdiences/

நன்றி!
-------------------------



இந்தியா சுதந்திரமடைந்த போது சமஸ்தானங்கள் அனைத்தும் இந்திய யூனியனில் இணைக்கப்பட்டு ஒரு தேசமாக உருவாக்கப்பட்டது, அவ்வேளையில் ராமநாதபுரம் சமஸ்தானமும் இணைக்கப்பட்டது, அவர்கள் சமஸ்தானம் குறித்த நில ஆவணங்கள் அனைத்தும் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது,எனவே அனைத்து ஆவணங்களும் மத்திய அரசிடம் சிக்கிக்கொண்டதால் யாரும் கேள்விக்கேட்க முடியாது என 1974 இல் துணிகரமாக கச்சத்தீவின் உரிமையாளர் யார் என தெரியாத "டிஸ்பியுட்டட் லேண்ட்" என அறிவித்து இலங்கைக்கு கைமாற்றிவிட்டார்கள்.

இவ்வாறு செய்தால் மட்டுமே இந்தியாவின் நிலப்பரப்பை அன்னிய நாட்டுக்கு விட்டுக்கொடுக்க முடியும்,அவ்வாறு இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை சட்டமேதை அம்பேத்கர் வடிவமைத்துவிட்டார் என முன்னர் குறிப்பிட்டதை இப்பொழுது விரிவாக காண்போம்.

இந்தியா என்பது முழு தன்னாட்சி பெற்ற ஒரு நாடு ,அதன் செயல்ப்படுத்தும் தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்கு அன்னிய நாடுகளுடன் ஒப்பந்தங்கள் நிறைவேற்ற , நிர்வகிக்க என அனைத்து அதிகாரங்களும் உண்டு. ஒரு புதிய நிலப்பரப்பினை இந்தியாவுடன் இணைக்க யாருடைய அனுமதியும் பெறத்தேவையில்லை,ஆனால் ஏற்கனவே இந்தியாவுடன் இணைந்த நிலப்பரப்பினை அன்னிய நாடுகளுக்கோ, சக்திகளுக்கோ தன்னிச்சையாக விட்டுக்கொடுக்க முடியாது என அரசியலமைப்பு சட்டத்தினை வரையறுத்துவிட்டார்.

ஆனால் சுதந்திரமடைந்த காலத்தில் சரியாக எல்லைப்பிரிக்காமல் இருந்தது எனவே எல்லைப்பிரச்சினையை தீர்க்க , பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தம் நிலப்பரிமாற்றம் செய்யலாம் எனவும் வழியும் உருவாக்கி இருந்தார், அதை வைத்தே கட்சத்தீவை தாரைவார்த்தார்கள்.

மேலும் அரசியல் நிர்ணய சட்டத்தினை வடிவமைக்கும் போது பல பரிசீலனைகளை அரசியல் தலைவர்கள் முன் வைத்திருக்க கூடும்,எனவே ஆளுவோருக்கு இப்படி நிலத்தை விட்டுக்கொடுக்க அதிகாரம் இல்லைனு சொல்வதை ஏற்கவில்லை போல எனவே , அதுக்கும் ஒரு ஓட்டையும் போட்டுக்கொடுத்திருக்கார், ஆனால் கொஞ்சம் சிக்கலாக ,எளிதில் நிலப்பரப்பை விட்டுக்கொடுக்க முடியாத படி தான் செய்திருக்கார் எனலாம்.

இந்தியாவுக்கு சொந்தமான நிலபரப்பினை விட்டுக்கொடுக்க வேண்டும் எனில் அரசியலமைப்பு சட்டத்தில் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்து, அதனை மாநிலங்கள் அவை,மக்களவை இரண்டிலும் சமர்ப்பித்து வெற்றிப்பெற வேண்டும், அதன் பின்னர் அச்சட்டத்தினை எந்த மாநிலத்தின் நிலப்பரப்பினை விட்டுக்கொடுக்க இருக்கிறார்களோ அம்மாநில சட்டமன்றத்திலும் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும்,அதன் பின்னரே நிலப்பரிமாற்றம் செய்யலாம்.

நாடாளுமன்ற இரு அவையிலும் ஒப்புதல் பெறுவதோடு,மாநில சட்டமன்றத்திலும் ஒப்புதல் பெறுவது(rattification at state council) என்பது கடினமான காரியம் எனவே எளிதில் நிலப்பரப்பினை விட்டுக்கொடுக்க முடியாது என நினைத்திருக்கலாம்.

அம்பேத்காருக்கு அப்போவே தெரிஞ்சிருக்கும் போல நம்ம அரசியல்வாதிகள் வருங்காலத்தில் காசுக்கு நாட்டையே வித்தாலும் வித்துடுவாங்கன்னு எனவே முன்னெச்சரிக்கையாக சிக்கலான சட்டத்தை போட்டு வைத்துவிட்டார்.

கச்சத்தீவினை விட்டுக்கொடுக்கும் நிகழ்வில் டிஸ்பியூட்டட் லேண்ட் என அறிவித்து விட்டுக்கொடுக்க மேற்சொன்ன சட்ட சிக்கலே காரணம் ஆகும்.

கச்சத்தீவு குறித்தான ஆவணங்களை வைத்து நமக்கு சொந்தமான நிலம் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால், முன்னர் அரசு ஒப்பந்தம் மூலம் விட்டுக்கொடுத்த கச்சத்தீவு உடன்படிக்கை செல்லாது என அறிவிக்க இயலும்.

இது முடியுமா என சந்தேகம் வரலாம், ஆனால் இதற்கும் ஒரு முன்னுதாரண சம்பவம் இந்தியாவில் உண்டு.

பெருபாரி வழக்கு:

கி.பி 1947 ,ஆகஸ்ட்-15 இல் இந்தியா சுதந்திரமடைந்ததாக அறிவிக்கப்பட்டப்போது, இந்தியா-பாகிஸ்தான் எல்லையே முழுமையாக வரையறுக்கப்படவில்லை, எனவே நன்கு தெளிவான எல்லைகள் கொண்ட பகுதிகளை மட்டும் சரியாக குறிப்பிட்டு பிரித்துக்கொண்டு , மற்றவற்றை பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.

மேலும் பாகிஸ்தான் மேற்கு,கிழக்கு என இரண்டுப்பிரிவாக உருவாகி இருந்தது. இதில் கிழக்கு பாகிஸ்தானுக்கும், மேற்கு வங்கத்துக்கும் சரியாக எல்லை பிரிக்காத சூழல்.

அப்பொழுது மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தின் ஒரு பகுதியாக பெருபாரி வட்டம் இருந்தது,இதில் ஒரு பகுதி ,கிழக்கு பாகிஸ்தான் என அறியப்பட்ட பகுதிக்குள் நீட்டிக்கொண்டு இருந்தது,அதே போல சில தனி தீவுகளாக கிழக்கு பாகிஸ்தானின் பகுதிகள் மேற்குவங்கத்தில் இருந்தன. அதாவது மதத்தின் அடிப்படையில் எந்த நாட்டில் சேர்வது என மக்களை முடிவெடுக்க சொல்லி பிரித்ததால் மேற்கு வங்க எல்லைக்குள் அமைந்த சில வட்டங்கள் மட்டும் கிழக்கு பாகிஸ்தானுடன் இணைந்துக்கொண்டன,ஆனால் அவர்களுக்கு நிலவியல் ரீதியாக கிழக்கு பாகிஸ்தானுடன் தொடர்பேயில்லை, இவ்வாறு தனித்தீவா ஒரு நாட்டுக்குள் இன்னொரு நாட்டின் பகுதி இருப்பதை என்கிளேவ் என்பார்கள்.

இந்த என்கிளேவில் வசிக்கும் கிழக்கு பாகிஸ்தானியர் அவர்கள் நாட்டுக்கு செல்ல பெருபாரி வட்டம் வழியாகத்தான் செல்ல வேண்டும்,ஆனால் அது இந்திய நிலப்பரப்பு என்பதால் ,ஒவ்வொரு முறை செல்லவும்,விசா நடைமுறையினைப்பின்ப்பற்ற வேண்டும்.

எனவே பாகிஸ்தான் அரசு பெருபாரி வட்டத்தில் பாதி எங்களுக்கு சொந்தம், எல்லைக்கோட்டினை வரையருக்கும் முன்னரே பெருபாரி வட்டம் இந்தியாவுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டதால் தான் இப்பிரச்சினை,எனவே பெருபாரியை கொடுங்கள் எனக்கேட்க ஆரம்பித்தார்கள்.

சமாதான பிறா  ச்சே புறா விரும்பியான நேருவுக்கு அண்டை நாட்டுடன் சர்ச்சை வேண்டாம் என ரொம்ப நல்ல மனசு,இத்தனைக்கும் பாகிஸ்தான் காஷ்மீர் சண்டை எல்லாம் போட்டிருந்தது,ஆனாலும் பாகிஸ்தான் நம்ம சகோதர நாடு என பெருபாரியை எடுத்துக்கோங்க என சொல்லி ஒப்பந்தம் போட்டுக்கொடுத்துட்டார்.

(Dr.Bidan chandra roy)


இது நடந்தது 1951 இல்,அப்பொழுது மேற்குவங்கத்தினை ஆண்டதும் காங்கிரஸ் கட்சியே,அதன் முதல்வராக டாக்டர்.பிசி.ராய் என்ற மூத்த காங்கிரஸ் தலைவர் இருந்தார். அவர் மற்ற காங்கிரஸ் தலைவர்கள் போல தலையாட்டி பொம்மையல்ல, அது எப்படி மேற்கு வங்க மாநிலத்துக்கு சொந்தமான நிலத்தினை பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுக்கலாம்,இதைப்பற்றி எங்கக்கிட்டே ஒரு வார்த்தை கூட கேட்கலையேனு கடுப்பாகிட்டார், ஒப்பந்தம் எல்லாம் செல்லாது, ரத்து செய்யுங்கள்னு நேருவிடம் சொல்லிப்பார்த்தார், நான் தேசிய தலைவர், நீர் மாநில முதல்வர் எனக்கே அறிவுரையா சொல்லுறீர்னு நேரு கண்டுக்கவேயில்லை போல.

பி.சி.ராயும் விடுவதாக இல்லை உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கை மத்திய அரசுக்கு எதிராகவே போட்டுவிட்டார், அதற்கு அடிப்படை நாம் முன்னர் பார்த்த அரசியல் நிர்ணய சட்டமே, பெருபாரியை வெறும் ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக்கொடுத்தது செல்லாது,அப்படி செய்வது அரசியல் நிர்ணய சட்டத்திற்கு விரோதம் என்பதே வாதம்.ஒரே கட்சியாக இருந்தாலும் ,மாநில நலனை கருதி அவ்வாறு செய்தார். வழக்கை வாபஸ் பெற வைக்க நேரு தரப்பும் பல முயற்சிகள்  செய்து பார்த்தது, ஆனால் பி.சி.ராய் மசியவேயில்லை, அவரை முதல்வர் பதவியில் இருந்து தூக்கலாம்னாலும் அதுவும் முடியலை,எல்லா எம்.எல்.ஏக்களும் பி.சி.ராய் பக்கமே,போதாக்குறைக்கு மக்களும் பலத்த ஆதரவு,மத்திய அரசுக்கு ஆப்பசைத்த குரங்கு நிலைமை, சொந்த கட்சியையே சமாளிக்க முடியலை,பாகிஸ்தானிடமும் திரும்பி கேட்க முடியலை.

1951 இல் போட்ட வழக்கு ,அப்படி இப்படினு இழுத்து 1960 இல் உட்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இந்திய அரசின் தலைமைப்பொறுப்பில் உள்ளவருக்கு அதிகாரம் இருக்கு,ஆனால் வெறும் ஒப்பந்தம் மூலமாக எல்லாம் விட்டுக்கொடுக்க முடியாது, ஏற்கனவே அரசியல் நிர்ணய சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட சட்ட திருத்த வழியை தான் பின்ப்பற்றனும் என்பதே தீர்ப்பாகும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு:

//the Agreement cannot be implemented by a  law
relatable  to Art. 3 and legislation relatable to  Art.  368
would be inevitable.
It follows, therefore, that the Parliament acting under Art.
368  can  make a  law to  give  effect  and  implement  the
Agreement  in  question  covering  both  Berubari  and  the
Enclaves or pass a law amending Art. 3 so as to cover  cases
of  cession of the territory of India and thereafter make  a
law under the amended Art. 3 to implement the Agreement.//


முழு தீர்ப்பையும் காண்க:

http://www.indiacourts.in/IN-RE--THE-BERUBARI-UNION-ANDEXCHANGE-OF-ENCLAVES-Vs.-REFERENCE-UNDER-ARTICLE-143(1)-OFTHE-CONSTITUT_81ff5700-42dc-491f-89ab-d6b539e75ba1

----------------
(Nehru and V.Krishna menon)


நேரு அப்பொழுதும் பிரதமராகத்தான் இருந்தார், ஆனால் சட்டத்திருத்தம் கொண்டு வந்தால் அதனை பி.சி.ராய் எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி வைத்து தோற்கடிக்க கூடும் என கருதினார்,ஏன் எனில் அப்பொழுது மற்றக்கட்சிகளும் பி.சி.ராய்க்கு தான் ஆதரவு, அப்பொழுது பி.ஜேபியின் முன்னோடியான ஜனசங்கம், மற்றும் சட்ட மேதைகள்,மற்ற சிறிய கட்சிகள் எல்லாம் வழக்கில் தங்களையும் ஒரு வாதியாக சேர்க்க சொல்லி ,மத்திய அரசுக்கு எதிராக வாதாடி வந்தன. இதனால் நேருவுக்கு நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் செய்து பெருபாரி பகுதியை பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுக்க தயக்கம்,எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பை காரணம் சொல்லி பாகிஸ்தானுடன் செய்த ஒப்பந்தத்தினை ரத்து செய்து விட்டார்.

அன்னிய நாட்டுக்கு விட்டுக்கொடுக்கப்பட்ட நிலப்பரப்பினை சட்ட போராட்டத்தின் மூலம் ஒரு மாநில முதல்வர் நினைத்தால் மீட்க முடியும் என்பதற்கு நல்ல முன்னுதாரணமாக இச்சம்பவம் அமைந்துவிட்டது.

இப்படி லட்டு மாதிரி நல்ல முன்னுதாரண சம்பவம் இருந்தும் 1974 இல் கட்சத்தீவை விட்டுக்கொடுத்தப்போது தமிழகத்தினை ஆண்ட தி.முக அரசு என்ன செய்தது, மஞ்சத்துண்டு என்ன செய்தார் எனப்பார்ப்போம்.

கொஞ்சம் விரிவாகவே அக்கால திமுக-காங்கிரஸ் உறவைப்பார்ப்போம்,

அண்ணா அவர்கள் தலைமையில் திமுக இந்தி எதிர்ப்பு என்ற பிரச்சாரத்தை முன் வைத்தே அரசியல் செய்து வந்தது, தமிழைக்காக்க ,தமிழர் உரிமையை நிலைநாட்ட காங்கிரசை விரட்ட வேண்டும் என்று சொல்லி தான் அரசியல் செய்து வந்தார்.

1967 இல் நடந்த பொது தேர்தலிலும் இதுவே கொள்கையாக இருந்தது, காங்கிரசை கடுமையாக எதிர்த்தார்கள், தேர்தலில் வென்று ஆட்சி அமைப்போம் என அண்ணாவுக்கே நம்பிக்கை இல்லை போலும் சட்டமன்றத்திற்கு போட்டியிடாமல் ,நாடாளுமன்றத்துக்கு தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டார்.

இந்தி எதிர்ப்பு,மாணவர் போராட்டம் ஆகியவற்றோடு, அக்காலக்கட்டத்தில் எம்.ஆர்.ராதா ,எம்ஜிஆரை சுட்ட சம்பவமும் சேர்ந்துக்கொள்ள ,கழுத்தில் கட்டுப்போட்ட எம்ஜிஆர் போஸ்டரை ஒட்டி அனுதாப அலையை வீச செய்தார்கள், எல்லாம் சேர்ந்து காங்கிரசை வீழ்த்த உதவியது.

மாநில சட்ட சபைக்கும்,நாடாளுமன்றத்திற்கும் நடைப்பெற்ற தேர்தலில் தி.முக அமோக வெற்றி,

சட்ட சபை- 137 இடங்கள்,தனிப்பெரும்பான்மை.

நாடாளுமன்றம்- 25 இடங்கள்.

 இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ,இந்தியா முழுக்க வெறும் 283 இடங்களே வென்றது, ஆட்சி அமைக்க 273 இடங்கள் போதும் என்றாலும், 283 எம்பிக்களை வைத்துக்கொண்டு நாடாளுமன்றத்தில் எந்த சட்டமும் இயற்ற முடியாது, கிட்டத்தட்ட "மைனாரிட்டி அரசு" நிலை தான்.

இந்நிலையில் தி.மு.க என்ன செய்தது என்றால், யாரை எதிர்த்து அரசியல் செய்தார்களோ அவர்களுடனே தேர்தல் முடிந்தவுடன் கூட்டணி வைத்துவிட்டார்கள்,காங்கிரசுக்கு தனது 25 எம்பிக்களும்  நிபந்தனை அற்ற ஆதரவு வெளியில் இருந்தே அளிப்பதாக அண்ணா அறிவித்துக்கூட்டணி ஒன்றை உருவாக்கிவிட்டார். பின்னர் 1969 இல் அண்ணா மறைவுக்கு பின்னர் முதல்வரான கலைஞரும் கூட்டணி உறவை அப்படியே தக்க வைத்துக்கொண்டார்.

இப்படிப்பட்ட அரசியல் கொள்கையாளர்களுக்காக எளிமையும்,நேர்மையின் வடிவமான  தமிழக காங்கிரஸ் தலைவரான காமராஜரையே தமிழக மக்கள் தோற்கடித்தார்கள் என்றால் அக்காலத்தில்  காங்கிரஸ் மீது எத்தகைய  வெறுப்புணர்வு திமுகவால் தூண்டி வளர்க்கப்பட்டு வந்தது என உணரலாம்.அதெல்லாம் தேர்தல் முடியும் வரையில் தான் ஆட்சிக்கு வந்ததும்,நட்புறவு :-))

அதன் பின்னர் 1971 இல் மீண்டும் பொது தேர்தல் வந்த போது , கலைஞர் தலைமையிலான திமுகவும்,இந்திராக்காந்தி தலைமையிலான இந்திரா காங்கிரசும் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன. இதற்கிடையில் காங்கிரஸ் இரண்டாக உடைந்து ,காங்கிரஸ்-ஓ, காங்கிரஸ் ஐ என பிரிந்த கதை எல்லாம் நடந்துவிட்டது.எனவே இந்திரா தலைமையிலான காங்கிரஸ் வலிமையிழந்தே இருந்தது ஆனாலும் தி.மு.க விசுவாசமாக முட்டுக்கொடுத்து வந்தது.

1971 பொதுத்தேர்தலிலும் இந்திரா காங்கிரஸ்- திமுக கூட்டணி அமோக வெற்றிப்பெற்றது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி,மாநிலத்தில் தி.முக ஆட்சி, தி.முகவுக்கு 28 எம்பிக்கள் வேறு கிடைத்திருந்தார்கள், அமோக செல்வாக்குடன் ஆட்சிக்கு இரண்டாவது முறையாக கலைஞர் வந்தார். வழக்கம் போல மத்தியில் இந்திராவுக்கு நிபந்தனையற்ற ஆதரவும் கொடுத்திருந்தார்.

இப்படியான அதி அற்புத கூட்டணி உறவு இருக்கும் சூழலில் தான் 1974 இல் தமிழகத்திற்கு சொந்தமான கட்சத்தீவை முன்னரே பார்த்த அரசியல் காரணத்திற்காக இலங்கைக்கு இந்திரா காந்தி தாரை வார்த்தார், கூட்டணியில் பசைப்போட்டு ஒட்டியிருந்த கலைஞர் என்ன செய்திருக்கணும்?

சும்மா பேச்சுக்கு நாடாளுமன்றத்தில் நாஞ்சில்.மனோகரனை விட்டு கண்டனம் தெரிவித்தார்,  அப்போது நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழக உறுப்பினரான  ராமநாத புரம் எம்பி மற்றும் ஃபார்வர்ட் பிளாக் கட்சி எம்பி.பாரதிய ஜனதாக்கட்சியின் அடல்பிகாரி வாஜ்பாயி எல்லாம் கடும் கண்டனம் தெரிவித்தார்கள்.

அடுத்த நாளே, இந்திராகாந்தி,வெளியுறவு துறை அமைச்சர் ஸ்வரன் சிங்குடன் ஆலோசித்து, வெளியுறவு செயலாளர் கேவல் சிங்க் என்பவரை  தமிழகத்துக்கு அனுப்பினார், அவர் என்ன பேசினாரோ கலைஞரின் சுருதி அமுங்கிப்போச்சு :-))

காரணமில்லாமல் ஒன்றும் கலைஞர் அடக்கி வாசிக்கவில்லை, எப்பொழுதுமே ஒரு கொண்டான் கொடுத்தான் கொள்கையை வைத்திருப்பார் மஞ்சத்துண்டு,தான் ஒன்றை விட்டுக்கொடுத்தால் அதற்கு ஒன்றை பெற்று விடுவார்.

 அப்பொழுது கலைஞரின் மீது ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன, முக்கியமானது வீராணம் திட்ட ஊழல் ஆகும்,வீராணம் திட்டத்தினை ஒப்பந்தம் எடுத்தசத்தியநாராயண ரெட்டி என்பவர் மர்மமான முறையில் தற்கொலை எல்லாம் செய்துக்கொண்டிருந்தார்,எனவே இது  பெரிய அளவில் பிரச்சினைகளை கழகத்திற்கு உருவாக்கியிருந்தது. வீராணம் திட்டம் குறித்து விசாரனைக்கமிஷன் அமைக்க வேண்டும் என தி.முக.வை விட்டுப்பிரிந்து தனிக்கட்சிக்கண்ட எம்ஜிஆர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்த நேரம், எங்கே மத்திய அரசின் விருப்பத்திற்கு எதிராக பேசினால் ஊழல் குற்றச்சாட்டில் வழக்கோ,இல்லை ஆட்சிக்கலைப்போ வரலாம் என பயந்த கலைஞர் , எனவே வழக்கப்படி  தனது கொண்டான் கொடுத்தான் கொள்கைப்படி கச்ச தீவை விட்டுக்கொடுத்தது பற்றி அதிக அழுத்தம் கொடுக்காமல் சட்ட மன்றத்தில் ஒரு தீர்மானம் மட்டும் போட்டுவிட்டு அமைதியாகிவிட்டு,ஊழல் குற்றச்சாட்டினை மத்திய அரசு கிளராமல் பார்த்துக்கொண்டார்.

தீர்க்கமாக எதிர்க்க வேண்டும் என நினைத்திருந்தால் , பி.சிராய் வழியில் ,உச்ச நீதிமன்றத்தில் வழக்குப்போட்டே கச்சத்தீவை மீட்டிருக்கலாம். அல்லது 28 எம்பிக்கள் உள்ள ஒரு கட்சி நாடாளுமன்றத்தினையே கலக்கியிருக்கலாம், எதிர்க்கட்சியான பிஜேபியும் ஆதரவு தர தயாராக இருந்தது எனலாம், ஏன் எனில் அவர்களை பொறுத்தவரையில் கட்சத்தீவு "வாலித்தீவு" ஆகும். ராமனும்,வாலியும் சண்டையிட்டது கட்சத்தீவில் என ராமாயண அடிப்படையில் நம்புகிறார்கள்.

1976 கட்சத்தீவு ஒப்பந்தம்:

1974 இல் போடப்பட்ட ஒப்பந்தத்தில் தமிழக மீனவர்களுக்கு மீன் பிடி உரிமை,வலைகாய வைக்கும் உரிமை எல்லாம் இருந்தது,ஆனால் அவ்வுரிமை இலங்கைக்கு பிடிக்கவில்லை,எனவே ஒரு திருத்தம் செய்து ,எல்லா உரிமைகளையும் பறிக்க நினைத்து ,புதிய ஒப்பந்தம் போட்டது,நமது இந்திய அரசும் கொடுத்தது தான் கொடுத்தாச்சு முழுசாவே கொடுப்போம்னு ரொம்ப தாரளமாக அள்ளிக்கொடுத்துவிட்டது,இம்முறை சின்ன எதிர்ப்பு கூட மாநில அரசிடம் இருந்து வரவில்லை,ஏன் எனில் அப்பொழுது நாட்டில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வளவு தான் மடங்கிப்போனாலும் விடுவதாகயில்லை,எமர்ஜென்சிக்கு எதிர்ப்புக்காட்டினார்கள் எனக்கூறி தமிழகத்தில் ஆட்சிக்கலைப்பு செய்யப்பட்டு மிசாவின் கீழ் உடன்ப்பிறப்புகள் எல்லாம் தர்ம அடியும் வாங்கினார்கள்.

இம்புட்டு நடந்தும் 1981 பொது தேர்தலில் மீண்டும் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக எனக்கூவிய தன்மான சிங்கங்கள் தான் கழகத்தினர் :-))

அதுக்கப்புறம் இன்று வரையிலும் கூட காங்கிரஸுடன் கூட்டணி என வண்டியோட்டியும் கட்சத்தீவு கைவிட்டு போனது போனதாகவே தான் இருக்கிறது,அம்புட்டு தான் மஞ்சத்துண்டின் இராச தந்திரம்.

கட்சத்தீவு மீட்பு சாத்தியமா?

1992 இல் ஆட்சிக்கு வந்த அம்மையார் தலைமையிலான அ.தி.முக ஆட்சியின் போது கட்சத்தீவினை மீட்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சட்ட மன்றத்தில் அறிவித்தார்,ஆனால் ஏனோ உடனே நடவடிக்கை மேற்கொள்ளவில்லை, 2008 இல் தான்,மேற்கு வங்க பெருபாரி வழக்கின் அடிப்படையில் உட்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அவ்வழக்கு இன்னும் இழுத்துக்கொண்டுள்ளது, இம்முயற்சி சற்றே காலங்கடந்த ஒன்று என்ற போதிலும் சரியான வகையில் கட்சத்தீவு தமிழகத்திற்கு சொந்தமான நிலப்பரப்பு என ஆவணங்களை காட்டி வாதாடினால் தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக வர பெருமளவு வாய்ப்புள்ளது.

சமீபத்தில் கூட வழக்கினை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என உட்சநீதிமன்றத்தில் ஒரு மனுவினை தமிழக அரசு சமர்ப்பித்துள்ளது. அரசியல் ரீதியாக சாதிக்க முடியாததை சட்டப்போராட்டத்தின் மூலம் சாதிக்க முடிகிறதா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்,நல்ல தீர்ப்பு வர காத்திருப்போம்.
 
(Thanks K-TIC)

திங்கள், 22 ஏப்ரல், 2013

தமுமுகவின் கோடை கால மாணவர் முகாம்


தமுமுகவின் கோடை கால மாணவர் முகாம் ஏப்ரல் 27ல் தொடங்குகிறது

தமுமுக மாணவர் அணியின் சார்பில் கோடை கால இஸ்லாமிய பண்பியல் பயிற்சி முகாம் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடைபெற உள்ளது.

முதலாவதாக ஏப்ரல் 27 தொடங்கி மே 1 வரை விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பத்தில் நடைபெற இருக்கிறது. இதில் விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, கடலூர் வடக்கு, கடலூர் தெற்கு, புதுச்சேரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்.

இரண்டாவது முகாம் நாகூரில் ஏப்ரல் 29 தொடங்கி மே 2 வரை நடைபெற இருக்கிறது. இதில் நாகை தெற்கு, நாகை வடக்கு, தஞ்சை தெற்கு, தஞ்சை வடக்கு, காரைக்கால், திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்.

மூன்றாவது முகாம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மே 1 முதல் 5 வரை நடைபெற இருக்கிறது. இதில் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு மாவட்டங்களைச் சார்ந்த மாணவர்கள் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்.

இதர மாவட்டங்களில் நடைபெறும் முகாம்கள் குறித்தும், முகாம்கள் தொடர்பான இதர விஷயங்கள் குறித்தும் மாணவர் அணி மாநிலச் செயலாளர் டாக்டர் சர்வத்கான் அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

தொடர்பு எண்: 9943888950 (டாக்டர் சர்வத் கான்)

(குறிப்பு: 7ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்)

ஆற்றங்கரை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் சர்க்கரை மற்றும் இரத்தம் வகை கண்டறியும் முகாம்



ஆற்றங்கரை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் சர்க்கரை மற்றும் இரத்தம் வகை கண்டறியும் முகாம் நடத்தப்பட்டது .
 
இந்த முகாமில் 200 மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் முன்னதாக சிறப்பு விருந்தினர்களாக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயலாளர் சகோதரர் மைதீன் உலவி, தமுமுக மாவட்ட செயலாளர் சகோதரர் அன்வர், ஒன்றிய தலைவர் சகோதரர் ரசூல், சகோதரர்கள் ராம்நாட் பிஸ்மி, சுலைமான் மற்றும் கிளை நிர்வாகிகள் & உறுப்பினர்கள் முன்னிலையில் முகாம் சிறப்பாக நடைபெற்றது.

இலங்கை அமைச்சர் போல பேசும் நாராயணசாமி ம.ம.க.,- எம்.எல்.ஏ., கண்டனம்



ராஜபாளையம்: ''இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்தை, மத்திய அமைச்சர் நாராயணசாமி பிரதிபலிக்கிறார்'' என மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
 
அவர் கூறியதாவது:
 
பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு தற்போது உள்ள 3.5 சதவீத இடஒதுக்கீடை உயர்த்த வேண்டும். திருமணப் பதிவு சட்டத்தில் முஸ்லிம்களுக்கு உள்ள ஆட்சேபணைகளை சட்டத் திருத்தமாக கொண்டு வரவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை கோட்டை நோக்கி ஊர்வலம் நடத்த உள்ளோம். கூடங்குளம் அணுஉலையில் தரமற்ற 'வால்வு' கள் சப்ளை செய்ததாக ரஷ்ய நிறுவனத்தினர் மீது அந்நாட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளது. கடல் எல்லையை தாண்டுபவர்கள் மீது தாக்குதல் நடத்த உலகளாவிய கடற்சட்டத்தில் இடமில்லை. தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு மத்திய அரசின் இலங்கை ஆதரவு நிலைப்பாடுதான் காரணம். புதுச்சேரி மீனவர்கள் தாக்கப்பட்டபோது ''இலங்கை தமிழர்கள் குறித்து தமிழகத்தின் கோரிக்கையால் அந்நாட்டு படையினர் தாக்கினர்'' என மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியது கண்டிக்கத்தக்கது. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்தை அவர் பிரதிபலிக்கிறார். தமிழகத்திற்கு 19 ஆயிரம் கோடி ரூபாய் வறட்சி நிவாரணமாக மத்திய அரசு வழங்கவேண்டும் என்றார். மாநில அமைப்பு செயலாளர்கள் முகமது மைதீன் உலவி செல்லச்சாமி  மாவட்ட செயலாளர் அஜ்மீர் உடன் இருந்தனர்.
(தினமலர்)

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

சமுதாயப் பணியில் மீண்டும் சாதனை செய்த முகவை தமுமுக

தொண்டி,

தொண்டி அருகே அரசு பஸ் கவிழ்ந்து 9 பயணி கள் காயமடைந்தனர்.

அரசு பஸ் விபத்து

தொண்டி அருகே உள்ள வட்டாணம் கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் நேற்றுகாலை 5 மணி அள வில் சென்னையில் இருந்து ராமேசுவரம் நோக்கி தமிழ் நாடு அரசு விரைவு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 12 பயணிகள் பயணம் செய்தனர். இந்த பஸ் வட்டாணம் கிராமத்தின் சாலையில் உள்ள ஒரு வளைவில் திரும்ப முயன்ற போது நிலைதடுமாறி பாலத்தில் மோதி கவிழ்ந்து உருண் டது.

அப்போது ஏற்பட்ட பலத்த சப்தத்தை கேட்டதும் அருகில் டீக்கடையில் இருந்தவர்கள் ஓடோடிச்சென்று இடிபாடுகளில் சிக்கிக்கிடந்தவர்களை மீட்டனர். இதுபற்றி அவர்கள் அளித்த தகவலின் பேரில் தொண்டி த.மு.மு.க. ஆம்பு லன்சு மற்றும் 108 ஆம்புலன் சுகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந் தவர்களை ராமநாதபுரம், திருவாடானை ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு சென்றது.

சிகிச்சை

இந்த விபத்தில் காயம டைந்த பஸ் கண்டக்டர் திருச்சியை சேர்ந்த சேகர் (வயது 43), சென்னை குரோம் பேட்டை மாரிமுத்து மகன் விஜயகுமார்(28), இவரது நண்பர் விஜய்(28), ஏர்வாடி அருகே உள்ள கல்பார் கிரா மத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சேகர்(22) ஆகியோர் திருவாடானை அரசு ஆஸ்பத் திரியில் அனுமதிக்கப்பட்ட னர். ஆனால் அங்கு மருத்துவர் பணியில் இல்லாததால் ஆண் செவியர் முதலுதவி சிகிச்சை அளித்து ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயமடைந்த கீழக்க ரையை சேர்ந்த செய்யது முக மது பீவி(65), முனியாண்டி, சரவணன், சதீஷ்குமார், பிரியா உள்ளிட்ட பலர் ராமநாதபுரத் திலும் சிகிச்சைக்காக அனும திக்கப்பட்டனர். இந்த சம்ப வம் குறித்து எஸ்.பி.பட்டினம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் வேலம்மாள் மற்றும் போலீ சார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

(தினத்தந்தி)

இலவச கண்சிகிச்சை முகாம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ஜூம்மா பள்ளிவாசலில், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் த.மு.மு.க., ஆர்.எஸ்.மங்கலம் கிளை சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். த.மு.மு.க., மாவட்ட தலைவர் சாதிக்பாட்ஷா, நகர் தலைவர் மன்சூர், நகர் செயலாளர் அப்துல் ரஹீம், பங்கேற்றனர்.
(Dinamalar)

அழகன்குளம் மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானி விருது



ராமநாதபுரம்:  அழகன்குளம் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் விஜயகுமார், அஜித்குமர், பாத்திமா பர்கானா, அட்சயா ஆகியோர் சென்னை அறிவியல் சிட்டி சார்பில் நடந்த, மாநில அளவிலான ஆய்வு கட்டுரை போட்டியில் பங்கேற்றனர். கணிதத்தில் பிதாகாரஸ் தேற்றத்தில் கர்ணத்திற்கு புதிய வகை பார்முலா கண்டுபிடித்து, அது தொடர்பான ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்தனர்.
இவர்களின் கண்டுபிடிப்பு மாநில அளவில் இரண்டாம் பரிசு பெற்று இளம் விஞ்ஞானி விருது பெற்றனர். அறிவியல் சிட்டி சேர்மன் சுப்புராஜ், விருதுகளை வழங்கினார். மாணவர்களை கணித ஆசிரியர் வெங்கடேசன், தலைமை ஆசிரியர் ராமசந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் முகம்மது முர்சுதீன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ரெத்தினம் ஆகியோர் பாராட்டினர்.
(Dinamalar)

MUGAVAI-TMMK-DAWAH: அக்ரபியா தஃவா சென்டர் அறைநாள் இஸ்லாமிய மாநாடு

MUGAVAI-TMMK-DAWAH: அக்ரபியா தஃவா சென்டர் அறைநாள் இஸ்லாமிய மாநாடு

தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடர் மீன்வளத்துறை மானியக்கோரிக்கையில் பேரா எம் எச் ஜவாஹிருல்லா அவர்களில் உரை



மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே மீன் வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை மானியக் கோரிக்கையிலே மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக எங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வாய்ப்பு தந்தமைக்காக முதலிலே நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்திலே தற்போது நடைபெற்று வரக்கூடிய அதிமுக அரசு மீனவர்களுடைய நலனைப் பாதுகாப்பதற்காகவும் அவர்களுடைய வாழ்விலே வளம் ஏற்படுத்துவதற்காகவும் பல்வேறு நல்ல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஆழ்கட-லே மீன்பிடிப்பதற்காக சூரை மீன்பிடி விசைப் படகுகளுக்காக மானியம் 50 விழுக்காடாக உயர்த்தியிருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். அதேபோல் மீன்வர்களுடைய பாதுகாப்பிற்காக விஎச்எப் மற்றும் எச்எப் கருவிகளை 75 விழுக்காடு மானியத்திலே இந்த அரசு வழங்கும் என்ற அறிவிப்பையும் நான் பாராட்டுகின்றேன். அதேநேரத்தில் நம்முடைய மீனவர்களுடைய வாழ்வியல் வாழ்வுரிமை சிறப்பான முறையிலே பாதுகாக்கப்பட வேண்டுமென்பதற்காக சில கோரிக்கைகளை இந்த அரசு தெரிவிக்க விரும்புகின்றேன்.

மன்னார்வளைகுடா பகுதியிலுள்ள கடலோர மக்களின் முக்கிய பிரச்சினை கடல் அரிப்பாகும், இதன்காரணமாக கடலோரத்திலே இருக்கும் குடிசைகளில் வாழும் மீனவ மக்கள் பாதிப்படைவதுடன், அவர்களுடைய இருப்பிடங்கள் முற்றாக அழிந்துவிடுகின்றன, இதுபோல, கடலோரத்தில் இருக்கும் கட்டுமானங்களான சாலைகள், மின்கம்பங்கள், கட்டடங்கள் முதலியவை அழிந்து கடலுக்குள் மூழ்கிவிடக்கூடிய ஒரு சூழ்நிலையை பார்க்கின்றோம். இதுமட்டுமல்லாமல் கடல் அரிப்பின் காரணமாக உப்புநீர் உட்புகுந்தால் நிலத்திடி நீர் உபயோகமற்ற தன்மையுடைதாக ஆகிவிடுகிறது. கடலோர மக்களின் குடிநீர் ஆதாரமும் முற்றாக பழுதடையக்கூடிய ஒரு நிலை இருக்கின்றது. எனவே, இதைத் தடுப்பதற்கு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அலையாத்தி காடுகளைப் பாதுகாத்து மேலும் அவற்றை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீரோடி முதல் பழவேற்காடு வரையிலும் சுமார் 1078 கிலோ மீட்டர் நீளக் கடற்கரையிலே 608 மீனவக் கிராமங்கள் இருக்கின்றன. சுமார் 15 இலட்சம் மீனவர்கள் வசிக்கிறார்கள். பல்வேறுவகையான தொழிற்சாலைகள் நச்சுக் கழிவுகளைக் கட-ல்தான் கொட்டுகின்றன. அதுவும் குறிப்பாக, மத்திய அரசு 1991ல் கடலோர மேலாண்மை சட்டத்தைத் கொண்டு வந்தது. அந்தச் சட்டத்தில்கூட பல பாதுகாப்புகள் இருந்தாலும் அதை நீர்த்துப்போகக்கூடியவகையிலே பல்வேறு திருத்தங்களை அதில் கொண்டு வந்து இப்போது சிஆர்இசட் 2011 என்ற ஒரு சட்டத்தை சுற்றுச்சூழல் வன இலாகா மத்திய அரசு அந்த சட்டத்தின் மூலமாக மிகப் பெரிய அளவிலே மீனவர்களுடைய வாழ்வுரிமைக்கு இன்றைக்கு சவால் ஏற்பட்டிருக்கின்றது என்பதை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

சிஆர்இசட் 1991 ஐ நீர்த்துப்போக வைத்தன் காரணமாகத்தான் கடற்கரை ஓரம் வணிகமயமாகக்கூடிய ஒரு சூழலில் பல்வேறு விஷயங்கள் கூடங்குளம் அணு உலையாகட்டும், கல்பாக்கம், அணு உலையாக இருக்கட்டும், இன்னும் அனல் மின்சார நிலையங்களாக இருக்கட்டும், பல தொழிற்சாலைகள் கடற்கரை ஓரம் ஏற்படுத்தப்பட்டு அதன் காரணமாக மீனவர்களுடைய வாழ்வுரிமை இன்றைக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது. 23 திருத்தங்களை கொண்டு வந்து இப்போது புதிதாக சிஆர்இசட் 2011 ஐ கொண்டு வந்திருக்கிறார்கள், மாநில அரசு இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி இந்தச் சட்டத்தை மீனவர்களைப் பாதுகாக்கக்கூடியவகையிலே, மத்திய அரசு இயற்றுவதற்கான முன் முயற்சிகளைச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

பாரம்பரிய மீனவர்களுடைய பிரச்சினைகளில் தமிழகத்தின் மிகப் பெரிய கடலோர மாவட்டமான இராமநாதபுரம் மற்றும் துôத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 136 மீனவக் கிராமங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான பாரம்பரிய மீனவர்கள் வசித்துவருகிறார்கள். மன்னார் வளைகுடா பகுதியில் இராமநாதபுரம் மற்றும் துôத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த இந்த பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடித் தொழி-லும், அதிலே 10000 மீனவப் பெண்கள் கடல்பாசியை சேகரிக்கக்கூடிய தொழிலையும் செய்து வருகிறார்கள் இங்குள்ள நாட்டுப் படகு மீனவர்கள் எஞ்சின் பொருத்தப்படாத படகுகளிலும் மீனவப் பெண்கள் கடல்பாசியைச் சேகரிக்கும் தொழி-லும் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளுக்கு தீவுகளுக்கு அருகிலே பல நுôற்றாண்டுகாலமாக தொழில் செய்து வருகிறார்கள்.

இவர்கள் செய்கின்ற மீன்பிடித் தொழில் முறையினாலும் பயன்படுத்துகின்ற மீன்பிடி சாதனங்களினாலும் கடல் வனத்திற்கோ, மீன் வளத்திற்கோ, எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை. கடல்பாசி எடுப்பதற்காக எந்தவிதமான உபகரணமும் இல்லாமல் பாரம்பரியமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை வட்டத்தில் பாம்பன் பகுதியில் செல்லக்கூடிய இந்த மீனவப் பெண்கள் வனத் துறையினரால் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள், 21 தீவுகளுக்குச் செல்லக்கூடாது என்று தடை உத்தரவு ஒன்று போடப்பட்டிருக்கின்றது. அதற்குமேல் இப்போது மிதவைகளை போடக்கூடிய ஒரு திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கின்றது. சரியாகச் சொல்லவேண்டும் என்று சொன்னால் கீழக்கரையி-ருந்து இந்த மாதம் ஏப்ரல் 13ஆம் தேதி வன இலாக்காவி-ருந்து மிதவைகள், போயஸ் என்று சொல்லக்கூடிய மிதவைகளை மீனவர்கள் அந்தத் தீவுப் பகுதிக்குப் போகக்கூடாது என்ற நிலையில் மிதவைகளைப் போட்டிருக்கிறார்கள். இதன் காரணமாக அந்தப் பாரம்பரிய மீனவர்களுடைய வாழ்வுரிமை மிகப்பெரிய கேள்விக்குரியதாகியிருக்கின்றது. இதனை அரசு உரிய முறையில இந்தப் பாரம்பரிய மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய பணிகளைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகத்திலே 10 கடலோர மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் மூலம், நீரியல் உற்பத்தி அதிகார அமைப்பின் மீன்துறை இயக்குநர் அலுவலகம் மூலம் இறால் தொழிற்சாலைகளை ஊக்கப்படுத்தி உற்பத்தியாளர்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கடலோர மாவட்டங்களில் விவசாயம் மற்றும் கடலோர நிலங்களை அழித்து இறால் தொழிற்சாலைகள் ஊக்கம் பெறுகிறது இதனை தடுக்க அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மீன்பிடி தடை காலத்தில் மிக சொற்பமாக இருந்த தொகையை இந்த அரசுதான் பன்மடங்கு அதிகப்படுத்தி வழங்கியிருக்கின்றது. அதற்கு நிச்சயமாக மீனவர்கள் இந்த அரசுக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்கின்றார்கள். இருந்தபோதிலும்கூட அது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயர்த்தப்பட்டது இப்போது விலைவாசிகள் உயர்ந்திருக்கக்கூடிய சூழலில் இந்த அரசு மீனவர்கள் மீது நிச்சயமாக அக்கறையுள்ள இந்த அரசு மீன்பிடி தடைகாலத்தில் வழங்கக்கூடிய தொகையை இன்னும் அதிகப்படுத்தித்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மீனவப் பெண் தொழிலாளர்களையும் மீனவர் நல வாரியத்தின் உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ள வேண்டும். நல வாரியத்தில் தனி அலுவலகம் அமைத்து இதர வாரியம்போல் அது தொழிலாளர்களுக்குரிய வாரியத்தில் இருக்கவேண்டும்.

நாட்டுப்படகு போன்ற பாராம்பரிய மீனவர்கள் நசித்துவரக்கூடிய இந்தச் சூழ-ல் விசைப்படகு மீனவர்களுக்கு மானியம் கொடுக்கிறோம். அந்த அடிப்படையில் இந்த சிறுதொழில் மீனவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு மடி, கயிறு போன்ற தொழிற் சாதனங்களை மானியத்துடன் வழங்குவதற்கு இந்த அரசு முன்வரவேண்டும்.

மத்திய அரசில் மீன்வளத்துறைக்கு என தனியாக அமைச்சகம் இல்லை வேளாண் அமைச்சகத்தின் ஒரு பகுதியாகத்தான் மீன்வளத் துறை இருக்கிறது. இதனால் நம்முடைய மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது அது பலவகையிலே சுற்றிப் போகவேண்டிய ஒரு சூழல் இருக்கிறது. எனவே தமிழக அரசு மத்திய அரசாங்கத்திடம் மீன்வளத் துறைக்கு என்று தமிழகத்திலே இருப்பதுபோன்று தனி அமைச்சகத்தை அமைப்பதற்கு கோரிக்கை வைக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

கடல்அட்டை பிரச்சினையில் மத்திய அமைச்சர்களிடமும், பிரதமரிடமும் நேரடியாகவே மீனவர்கள் சென்று கடல்அட்டை மீதான தடையினை நீக்க வேண்டும் அது அழியக்கூடிய இனம் இல்லை என்பதற்கான அறிவியல்பூர்வமான ஆதாரங்களை கொடுத்ததற்குப் பிறகும் அந்தத் தடை நீக்கப்படாதது வருத்தத்திற்குரிய ஒன்றாக அமைந்திருக்கிறது.

கடந்த ஜுலை 16 2012 அன்று துபாயில் ஜெபலிதுறைமுகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஆறுமுகம் சேகர் என்று மீனவர் அமெரிக்க கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார் அது தவிர முனிராஜ், பன்புவான் போன்றவர்கள் மிக மோசமாக காயமடைந்திருக்கிறார்கள் அவர்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசு கொடுத்தது என்பதிலே எந்த சந்தேகமும் இல்லை சரியான முறையிலே சரியான நேரத்திலே அந்த உதவித்தொகையை இழப்பீட்டை மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, அந்த வழக்கை சரி செய்து உயிரிழந்த மீனவர்களுக்கும், காயமடைந்த மீனவர்களுக்கும் உரிய இழப்பீட்டை உடனடியாகப் பெற்றுத் தருவதற்கு ஆவன செய்யவேண்டும். இப்போது அவர்கள் ஊர் திரும்பிவிட்டார்கள். ஆனால் அனாதைகளாக அந்த மீனவர்கள் இருக்கின்ற சூழல் இருக்கிறது என்பதை இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் திரு. நாராயணசாமி அவர்கள் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பûயினரால் தாக்கப்பட்டுவதற்கு காரணம் இலங்கையிலுள்ள தமிழக மீனவர்கள் என்று தவறான செய்தியை உண்மைக்குப் புறம்பான செய்தியை ஒரு அறிக்கையாக கொடுத்தார். இதை அவருடைய குரலாக நான் பார்க்கவில்லை. இராஜபக்ஷேவினுடைய கையாளாகா, தமிழினத்திற்கு துரோகம் இழைக்கக்கூடிய டக்ளஸ் தேவானந்தா என்ற இலங்கை அமைச்சர் என்ன சொல்கின்றாரோ அதை அப்படியே திரு. நாராயணசாமி அவர்கள் பேசியிருக்கக்கூடிய ஒரு சூழலை பார்க்கின்றோம். கச்சத் தீவை மீட்பதற்காக மாண்புமிகு முதல்வர் அவர்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் எல்லாம் நமக்கு நன்றாகத் தெரியும், ஆனால், அதேநேரத்தில் இப்போது ஆட்சியில் இருக்கக்கூடிய காங்கிரஸ், இன்று கச்சத்தீவு வழக்கு தொடர்பாக புதியதாக மீண்டும் புனர் நிர்மாணம் செய்யப்பட்டிருக்கக்கூடிய டெசோவின் மூலமாக வழக்குத் தொடர போகின்றேன். என்று சொல்லக்கூடிய முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கும் இந்த நேரத்திலே ஒரு செய்தியை சொல்ல விரும்புகின்றேன்.

2003 ஆம் ஆண்டில் இந்தியாவினுடைய வெளிவிவகாரத் துறை அமைச்சர் அவர்களுக்கும், இலங்கை வெளிவிவகாரத் துறை அமைச்சர் அவர்களுக்கும் இடையிலே ஒரு பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது. அந்தப் பேச்சுவார்தையிலே மன்னார் வளைகுடாவில் கன்னியாகுமரிக்கு அருகில் இருக்கக்கூடிய வர்ச்பேங் என்ற பகுதியிலே மீன்கள் அதிமாக இருக்கக்கூடியது நன்றாக கவனிக்கவேண்டும் இது நம்முடைய இந்திய கடல் எல்லையில் இருக்ககூடிய பகுதி. அதை 3 ஆண்டுகளுக்கு இந்திய அரசு இலங்கை மீனவர்களுக்கு குத்தகைக்கு விடுகிறது 2003 ஆம் ஆண்டில் ஆனால் அதற்குப்பிறகு அந்தப் பேச்சுவார்தையிலேயே நம்முடைய இந்திய தரப்பு சொல்கின்றது உங்களுடைய கடல் எல்லைப் பகுதியிலே எங்களுடைய மீனவர்க குறிப்பாக இராமேஸ்வரம் மீனவர்கள் இப்போது நடைமுறை என்னவென்றால் திரு. நாராயணசாமி அவர்கள் மீனவர்களுடைய பிரச்சினை இரண்டு நாட்டு மீனவர்களுக்கு இடையிலே எந்தப் பிரச்சனையும் இல்லை. 10 இடங்களில் இலங்கை மீனவர்கள் நம்முடைய கடல் எல்லைக்கு வந்து மீன் பிடித்துச் செல்கிறார்கள். எந்தவிதமான அச்சுறுத்தலையும் நம்முடைய மீனவர்கள் கொடுப்பதில்லை. அது ஒரு பக்கம் இருக்க நம்முடைய மீனவர்களுடைய வசதிக்காக வேண்டி, இலங்கைக் கடல் பகுதியில் எங்களுக்கு இடம் வேண்டுமென்று சொல்லும்போது இலங்கை அதிகாரிகள் அதுசம்பந்தமான ஒரு திட்டத்தைத் தாருங்கள் நாங்கள் அதைப் பரிசீ-க்கின்றோம் என்று சொன்னது 25.07.2003 அந்தப் பேச்சுவார்த்தையில் இந்தச் செய்தி குறிப்பிலே இடம்பெற்றிக்கிறது அதற்குபிறகு 2004ஆம் ஆண்டில் யார் டெல்லியில், மத்தியில் ஆட்சியில் இருந்தார்கள். என்பது நமக்குத் தெரியும், நம்முடைய கடல் எல்லையில் மூன்று ஆண்டுகளுக்கு இலங்கை குத்தகைக்குக் கொடுத்திருக்கின்றோம், அதற்குப்பதிலாக, அவர்களிடமிருந்து குத்தகைப் பெறுவதற்கு தவறிவிட்டு இன்றைக்கு வந்து மீனவர்களுடைய நலனை காப்பதற்காகத்தான் என்று சொல்லக்கூடியதை நிச்சயமாக மீன்வர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதை அழுத்தந்திருத்தமாக இங்கே நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

சிறந்த துவா




'அல்லாஹும்ம இன்னீ அஊது பின்ன மினல் ஹம்மி, வல்ஹஸனி, வல்அஜ்ஸி, வல்கஸலி, வல்ஜுப்னி, வல்புக்லி, வளலஇத் தைனி, வ ஃகலபத்திர் ரிஜால்'

இறைவா! கவலையிலிருந்தும் துக்கத்திலிருந்தும் இயலாமையிலிருந்தும் சோம்பலிருந்தும் கோழைத் தனத்திலிருந்தும் கருமித்தனத்திலிருந்தும் கடன் சுமையிலிருந்தும் மனிதர்களின் அடக்குமுறைகளிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்

சனி, 20 ஏப்ரல், 2013

இந்திய விடுதலை நாயகன் அபுல் கலாம் ஆசாத்

நாம் சுவாசிக்கும் இந்த சுதந்திர காற்றுக்காக திரு.அபுல் கலாம் ஆசாதுக்கு இந்த தேசம் என்றைக்கும் நன்றி கடன் பட்டிருக்கிறது. இவர் ஆற்றிய செயல்பாடுகள் நம்முடைய விடுதலைக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.



காந்தி, நேரு உடன் ஆசாத்.


மௌலான அபுல் கலாம் ஆசாத் - நவீன கல்வியின் சிற்பி!
இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும் இந்திய முசுலிம் அறிஞருமான‌ ஆசாத் தான் இந்திய உயர்கல்வி நிலையமான ஐ.ஐ.டி. நிறுவியவர் என்பது பலரும் அறியாத அல்லது பொதுவில் சொல்லப்படாத செய்தி.

ஐ.ஐ.டி என்ற கல்வி நிலையங்களால் பெரும் பயனுற்ற எவராலும் இந்த கல்வி நிலையங்களைத் தோற்றுவித்தவர் எவர் என்ற தகவல் வெளியில் சொல்லப்படுகிறதா என்றால், நிச்சயமாக இல்லையென்றே சொல்லப்பட வேண்டும்.

இந்தியாவில் கல்வித்துறைக்கு சரியான அடித்தளமிட்ட இவராற்றிய பணியை நினைவுகூறும் வகையில் இவரது பிறந்த நாள் தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது. புதுதில்லியில் உள்ள‌ மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் இவரது பெயரைத் தாங்கி உள்ளன.

ஆசாத் அவர்கள்தான் தேச கல்வி முறைக்காக முதலில் குரல் எழுப்பியவர். அனைத்து மாணவர்களுக்கும், சாதி, மத இட,பால் பாகுபாடின்றி தரமான கல்வியை குறிப்பிட்ட நிலை வரை அளிக்க வேண்டும், 14 வயது வரை அனைத்துகுழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று ஆசாத் வலியுறுத்தினார்.

கடைசி வரை இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டுவிடக்கூடாது என மிகவும் பாடுபட்டவர் திரு.ஆசாத் அவர்கள். திரு.ஜின்னாவின் பாகிஸ்தான் கோரிக்கைக்கு எதிராக திரு.ஆசாத் பலமுறை வலியுறுத்திப்பேசி பிறகு ஜின்னாவின் மனதையும் மாற்றுவதில் ஓரளவு வெற்றி கண்டபோதிலும், திரு.நேரு அவசரப்பட்டு வெளியிட்ட ஒரு அறிக்கையின் மூலமாக ஜின்னா மீண்டும் மனம் மாற நேரிட்டது.

தோற்றம் 11.11. 1888 - மறைவு 22.2.1958. 1888ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி, மௌலானா கைருதீனுக்கும், அலியாவுக்கு மகனாக, மெக்காவில், மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது (அபுல் கலாம் ஆசாத்) பிறந்தார். அபுல்கலாம் என்ற அரபுச் சொல்லிற்கு "சொல்லின் செல்வர்" என்று பொருள். பரவலாக இவர் மௌலானா ஆசாத் (விடுதலை) என அறியப்படுகிறார்.

10 வயதிலேயே குரானை கற்றுத் தேர்ந்தார். 17 வயதில் இஸ்லாமிய உலகில் பயிற்சி பெற்ற ஆன்மீகவாதியாக அறியப்பட்டார். கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைக்கழகத்தில் அவர் கற்ற கல்வி அவரது அறிவை விசாலமாக்கியது.

சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட ஆசாத், சிறையில் பல ஆண்டுகளைக் கழித்தார்.சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்து- முசுலிம் ஒற்றுமையை வலியுறுத்திய முசுலிம் தலைவர்களில் முதன்மையானவர்.

இந்தியா விடுதலையடைந்த பிறகு அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர். மதவாதத்தை ஒரேடியாக குழி தோண்டிப் புதையுங்கள் என்பதுதான் ஆசாத் மாணவர்களுக்கு எப்போதும் கூறும் அறிவுரையாகும். மாணவர்களின் ஒழுக்கமின்மை குறித்து அவர் வேதனைப்படுவார்.

1992ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத ரத்னா மறைந்த பிறகு வழங்கப்பட்டது. மௌலானா அபுல் கலாம் ஆசாத் அற்புதமான ஒரு மனிதர். தனது வாழ்வின் இறுதி வரை இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டார்.
 
தேசபக்தி திருத்தொண்டர்!

இஸ்லாமிய சமுதாயத்தின் இளைஞர் பட்டாளத்துக்குத் தேசபக்தி உணர்வூட்டும் திருத்தொண்டராக விளங்கினார் மௌலானா அபுல் கலாம் ஆசாத் . அவரது சண்டமாருதச் சொற்பொழிவில் இலக்கிய நயம் மிளிர்ந்தது. தத்துவ விளக்கம் தவழ்ந்தது. புரட்சிச் சூறாவளியும் சுழன்றடித்தது. ஆதலால் மக்கள் அந்த இளைஞரைப் பொங்கி வரும் பேருவகையோடு "அபுல்கலாம் " என்று அழைத்தனர். அபுல்கலாம் என்ற அரபுச் சொல்லிற்கு "சொல்லின் செல்வர்" என்று பொருள். சையத் மொகய்தீன் என்ற பெயர் மறைந்து அபுல்கலாம் என்ற சிறப்புப் பெயரே நிலைத்தது.

வங்கப்பிரிவினையை எதிர்த்து சுதந்திர ஆவேசக் கனலை எழுப்ப அரவிந்தரும் பரோடாவில் இருந்து கல்கத்தா வந்து சேர்ந்தார். 'கர்மயோகின்' என்ற வார ஏட்டைத் தொடங்கினார். "துணிந்த வாலிப உள்ளங்களே காரியமாற்றக் கனிந்த உள்ளத்தோடு வருக!" என்று அந்த ஏடு அறைகூவல் விடுத்தது. அபுல்கலாமும் அரவிந்தரும் தேசபக்த அன்பால் பிணைக்கப்பட்டனர். அபுல்கலாம் இப்போது பழுத்த விடுதலை வீரரானார். ஆனால் அவருக்கு ஒரு பெரிய மனக்குறை.

"ரகசிய விடுதலை இயக்க ஸ்தாபனங்களை வங்கத்திலும் பீகாரிலும்தானே நிறுவி இருக்கிறோம்? இந்தியா முழுவதும் இதன் கிளைகள் பரவ வேண்டாமா?" - இப்படி அவர் புரட்சித் தலைவர்களுடன் வாதிட்டார்.

"அமைக்கலாம் அபுல்கலாம். பரந்த அளவில் ஸ்தாபனங்களை அமைக்கும்போது ரகசியத்தைக் காக்க முடியுமா?"

"தூக்குமேடையே அழைத்தாலும் நமது ரகசியப் பணிகளை வெளியிடாத வீரர்களை மட்டும் சேர்த்துக் கொள்வோம்"- இது அபுல்கலாம் அளித்த பதில். அவர் ஒருவழியாகத் தலைமறைவு இயக்கத் தலைவர்களைத் தன் கருத்தை ஏற்றுக்கொள்ளுமாறு செய்து, இந்தியாவெங்கும் மாறுவேடத்தில் சென்று புரட்சி வீரர்களுடன் தொடர்பு கொண்டு ரகசிய விடுதலை இயக்க அமைப்புகளை அமைத்தார். செய்தி அறிந்த பல மாநில அரசாங்கங்கள் அபுல்கலாம் தங்கள் மாநிலத்தில் நுழையக்கூடது என்று தடைவிதித்தன.

1908ம் ஆண்டு அபுல்கலாம் எகிப்திற்குச் சென்றார். விடுதலை வீரர் முஸ்தபா கமால் பாட்சாவின் ஆதரவாளர்களோடு தொடர்பு கொண்டார். அங்கே இளம் துருக்கியர்கள் தொடங்கி நடத்திய வார ஏடு அவரைப் பெரிதும் கவர்ந்தது. ஓர் ஏட்டின் மூலமாக லட்சோப லட்சம் மக்களைப் புரட்சியின் தூதர்களாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை விடி வெள்ளி முளைத்தது. அங்கிருந்து அவர் துருக்கிக்குச் சென்றார். துருக்கியின் ரகசியப் புரட்சித் தலைவர்களைச் சந்தித்தார்.

புரட்சி உலகக் கூடங்களில் புடம்போட்ட வீரராக, அனுபவக் களஞ்சியமாக 1912ம் ஆண்டு அபுல்கலாம் தாயகம் திரும்பினர். "அரபு நாடுகளில் நடைபெறும் விடுதலை இயக்கங்களில் இஸ்லாமியர்கள் முன்னணியில் நிற்கும் போது இங்குமட்டும்?" - இந்தச் சிந்தனை சுழன்று சுழன்று வந்தது. இப்போது அவரது சிந்தையில் குடியேறியிருந்த ஒரே லட்சியம் இஸ்லாமிய சமுதாயத்தை முழுக்க முழுக்க விடுதலை இயக்கத்தின் போர்ப் பாசறைக்கு அழைத்து வர வேண்டுமென்பதுதான்.

அதற்காக அவர் 'அல்ஹிலால்' என்ற உருது வார ஏட்டைத் துவக்கினார். ஒவ்வொரு இதழும் புரட்சி ஜுவாலையாக வெளியே வந்தது. அந்த ஏடு வெளிவந்த மூன்றே மாதங்களில் இஸ்லாமிய சமுதாயத்தில் பெரும் பரபரப்பைத் துடிதுடிப்பை ஏற்படுத்தியது.

இஸ்லாமிய இளைஞர் சமுதாயம் அல்ஹிலாலுக்கு மகத்தான வரவேற்பளித்தது. மூன்றே மாதங்களில் ஏற்கெனவே வெளியிட்ட பிரதிகளையெல்லாம் மீண்டும் அச்சடித்துக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இரண்டே ஆண்டுகளில் 'அல்ஹிலால்' வாரம் இருபத்தாறாயிரம் பிரதிகள் விற்பனையாயின. இது அன்றைக்கு உருதுப்பத்திரிக்கை உலகத்தில் எவரெஸ்ட் சாதனையாகும்.

இந்த ஏட்டில் ஆசாத் என்ற புனை பெயரில் வந்த கட்டுரைகளை மக்கள் கற்கண்டுச் சுவையோடு படித்தனர். ஆசாத் என்றால் சுதந்திரம் என்று பொருள். இந்தப் புனைப் பெயரில் எழுதியவர் நமது அபுல் கலாம் தான். 1915 ஆண்டு வெள்ளை அரசாங்கம் அல்ஹிலாலின் தீவிரத்தைத் தாங்க இயலாது அச்சகத்தையே பறிமுதல் செய்தது. ஐந்தே மாதங்கள் இடைவெளியில் அபுல்கலாம் 'அல்பலாக்' என்ற வார ஏட்டைத் துவக்கினார். இப்போது வெள்ளை அரசாங்கம் தனது கடைசி ஆயுதத்தை வீசியது. 1916 ஆண்டு ஏப்ரல் மாதம் அபுல்கலாம் வங்க மாநிலத்தை விட்டுவெளியேற வேண்டுமென்ற உத்தரவு பிறந்தது. ஏற்கெனவே அபுல்கலாம் தங்கள் மாநிலத்தில் அடியெடுத்து வைக்கக்கூடாதென்று பம்பாய், பஞ்சாப், டெல்லி, உத்திரப்பிரதேச மாநிலங்கள் தடை விதித்திருந்தன. எனவே அவர் (பீகார் மாநிலம்) ராஞ்சிக்குச் சென்றார். ஆறுமாதங்களுக்குப் பின்னால் அவர் அங்கே கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகள் சிறையிலிருந்தார்.

1920ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி பூட்டிய இருப்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது.

1942ம் ஆண்டு ஆகஸ்ட் 7 நாள், பம்பாயில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி 'வெள்ளையனே வெளியேறு' என்று வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த தீர்மானத்தை வடித்தெடுத்தது. இந்தத் தீர்மானம் அன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவராக இருந்த அபுல்கலாம் ஆசாத்தின் தலைமையில்தான் நிறைவேற்றப்பட்டது. பம்பாயில் புலாபாய் தேசாய் அவர்களின் இல்லத்தில் தங்கியிருந்த ஆசாத் கைது செய்யப்பட்டார்.

1943ம் ஆண்டு ஏப்ரல்மாதம் சிறை அதிகாரி சீட்டாக்கான் மௌனமாக வந்து ஆசாத்திடம் ஒரு தந்தியை நீட்டினார். ஏதோ சிந்தனையில் மூழ்கியிருந்த ஆசாத் தந்தியை வாங்கிப்பிரித்துப்பார்த்தார். அவருடையை அன்பு மனைவி காலமாகிவிட்டார் என்கிற துயரச்செய்தியைத் தாங்கி வந்திருந்தது அது. 1945ம் ஜுன் மாதம் அபுல்கலாம் ஆசாத் பங்குதாராவிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். மறுநாள் காலை கல்கத்தா நகரம் அவரை வரவேற்க எழுச்சிப் பெருங்குன்றாக எழுந்து நின்றது. ஹவ்ரா ரெயில் நிலையத்தை மக்கட் கடல் மூழ்கடித்துவிட்டது.

ஆசாத் காரில் ஏறினார். ஆமாம் எங்கே செல்வது? அவரை வரவேற்க ரெயில் நிலையத்திற்கு இரண்டு லட்சம் மக்கள் வந்திருந்தனர். ஆனால் நாலரை ஆண்டுகளுக்கு முன்பு நோய் வாய்ப்பட்ட நிலையிலும் தள்ளாடிக் தள்ளாடிக் வாசலுக்கு வந்து பம்பாய் காங்கிரசிற்கு அவரை வழியனுப்பி வைத்த மாதர்குல மாணிக்கம் அவரை அதே வாசலில் நின்று வரவேற்க இன்று இல்லையே? இல்லம் காலியாக வெறிச் சோடிக்கிடக்கிறதே.

ஆசாதின் மாதரசி நீங்காத துயில் கொண்டிருக்கும் சமாதியை நோக்கி கார் ஓடியது. கண்களில் திரையிட்டு நின்ற கண்ணீரைத் துடைத்துக்கொண்டே காரில் இருந்த ஒரு மாலையை எடுத்து சமாதியின் மீது சூட்டி அஞ்சலி(ஸலாம்) செலுத்தினார் ஆசாத். அமைதியாக 'பாத்தியா'(துஆ) ஓதினார்."அவரைக் கணவராக அடைய மாதவம் செய்திருக்க வேண்டும். இனவெறியைக் கொன்ற உயர்ந்த தேச பக்தன்தான் உண்மையான முசல்மானாக இருக்க முடியும். எனவே அவரைக் கணவராக அடைந்ததிலே நான்பெருமைப் படுகிறேன்" என்று புன்னகையோடு சொன்ன தேச பக்த திலகமல்லவா அந்த அம்மையார்
.
சோலை, ஆனந்தவிகடன்(25-02-09)

உருது மொழி பாதுகாப்புப் பொதுக்கூட்டம்


துபாய் வாழ் தமிழர்களுக்கான புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி


இராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட மரைக்காயர்பட்டிணத்தில் மட்டும் நடந்த மக்கள் பணி.


 இராமநாதபுரம் மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் மரைக்காயர்பட்டிணமும் ஒன்று. இந்த ஊரில் தான் கடல் வாழ் உயிரின ஆராய்சி மையமும் உள்ளது. நீண்ட நாட்களாக சில அடிப்படை வசிகளுக்காக ஏங்கிய மக்கள் நம் சட்டமன்ற உறுப்பினர் பேரா.ஜவாஹிருல்லாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதன் விபரமும் நம் சட்டமன்ற உறுப்பினரால் விரைவில் முடிக்கப்பட்ட பணிகளும்.

தேசிய நெடுஞ்சாலையில் தென்புறம் பயணிகள் நிழற்குடை கேட்டிருந்தார்கள் அதற்கு 2012-2013 நிதியாண்டில் ரூபாய் 3.00 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது 

வயர்மேன் வேண்டும் என்று கோரிக்கைவைக்கப்பட்டது அதுவும் நிறைவேற்றப்பட்டுள்ளது 

கே வி பள்ளிக்கூடம் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் மாற்றக்கோரி கோரிக்கை வைக்கப்பட்டது தற்போது மின்சார வாரிய அதிகாரிகள் மாற்றிதருவதாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் உறுதிஅளித்துள்ளனர் விரைவில் நிறைவேற்றப்படும் இன்ஷா அல்லாஹ்.

ஊரின் தென்கரைப்பகுதியில் கடலரிப்பு காரணமாக நிலப்பகுதிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாககோரிக்கை வைக்கப்பட்டது இம்மனுவை மீன்வளத்துறை அமைச்சரிடமும் இதேதுறையைசார்ந்த அரசுசெயலாளரிடமும் அனுப்பப்ட்டு நாகர்கோவிலில் உள்ள கடலியல் ஆய்வு நிபுனர்களின் ஆய்வுக்கு அனுப்பபட்ட்ள்ளது
  

 ஆகவே நமது எண்ணமாகிய மாற்று அரசியளின் அடையாளச் சின்னமாக இன்ஷா அல்லாஹ்   ம ம க விளங்கும்

உஷார்!! RSS நடத்தும் போலி கணக்கெடுப்பு!!


தமிழகத்தில் RSS பயங்கரவாதிகளின் மகளிர் அமைப்பு முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்கு வீடு வீடாகச் சென்று நமது சமுதாய மக்களின் குடும்பவிபரம் குறித்து கணக்கெடு;ப்பு நடத்தி வருகிறார்கள் அவர்கள் தயாரித்த கணக்கெடுப்பு பற்றிய பட்டியலை கீழே தந்திருக்கிறோம். இது சமீபத்தில் அதாவது 09-02-2010 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில் அவர்களால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு ஆகும். இந்த கணக்கெடுப்பு பற்றி அறிந்த நமது சகோதரர்கள் அவர்களிடம் இதுபற்றிய விபரங்களை கேட்டபோது அரசாங்கம் சொல்லிதான் இந்த கணக்கெடுப்பு நடத்துகிறோம் என்று சொன்னார்கள். அப்படிhனால் அரசு உங்களிடம் கணக்கெடுப்பு நடத்தசொல்லி தந்த ஆணையோ அல்லது அரசின் அங்கீகார அடயாள அட்டையோ தந்திருப்பார்களே அதை காண்பியுங்கள் என்று கேட்டபோது அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. நாங்கள் சச்சார் கமிஷனுக்காக கணக்கெடுக்க வந்தவர்கள் என்று கூறினார்கள். சரி அதர்க்காக உங்களுக்கு அரசு தந்த அங்கீகார அடையாள அட்டையை எங்களிடம் காண்பியுங்கள் என்று கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் சொல்லிஇருக்கிறார்கள்.

இதனால் உஷாரான நமது சகோதரர்கள் அரசு அதிகாரிகளை நாடி இந்த சம்பவம் பற்றிகேட்டபோது அரசுதரப்பில் இவ்வாறு கணக்கெடுப்பு நடத்த யாரையும் நாங்கள் அனுமதிக்கவில்லை என்று கூறினார்கள் இதனால் பதட்டமடைந்த சகோதர்கள் குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் அளித்து இது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே ! ஹிந்து பயங்கரவாதிகளான ஆர் எஸ். எஸ். கும்பல்களின் சதிவலைகளை அறிந்து விழிப்புணர்வுடன் இருக்க சமுதாய மக்களை எச்சரிக்கிறோம். இப்படித்தன் இவ்கள் முதலாவதாக மும்பயிலும் பிறகு கோயம்புத்தூரிலும் குஜராத்திலும் போலி கணக்கெடுப்புகளை நடத்தி நமது சமுதாய பெண்மணிகளின் கற்பை சூறையாடினார்கள். பச்சிளம்குளந்தைகளையும் கற்பிணிகளையும் தீயிலிட்டு சாம்பலாக்கினார்கள். நமது சகோதரர்கின் வியாபாரதலங்களை முடிந்த அளவு கொள்ளையடித்துவிட்டு மீதியை தீக்கிரயாக்கினார்கள். தமிழகத்திலும் இதை அரங்கேற்ற ஹிந்து பயங்கரவாதிகள் நாள் குறித்துவிட்டார்கள்.

இதில் ஆச்சரியமான விசயம் என்னவெனில் நமது பகுதிகளின் முழு விபரங்களையும் இந்த சதிகாரர்களுக்கு பட்டியர் இட்டு கொடுப்பது யார் தெரியுமா? நம்மோடு ஒட்டி உறவாடி நெருங்கி பழகும் நம் வீட்டிற்கு வேலை செய்ய வரும் அவர்களது ஒற்றர்களான கொத்தனார் பால்காரன் காய்கறிவியாபாரி ஐஸ்கிரீம் வியாபாரி கியாஸ் வினியோகஸ்தர்கள் தெருவில் பொருள்களை விற்கவரும் டிப்படாப்ஆசாமிகள் பல கம்பெனிகளின் பெயரைச்சொல்லி களப்பணி செய்யும் பெண்கள் என பல ஒற்றர்கள் நமது பகுதிகளில் ஏற்கனவே நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இதிலிருந்து நாம் உஷார்அடையாமல் இருந்தால் இழப்பு நமக்குத்தான். நமது சமுதாய சகோதரிகளுக்கும்தான். நன்மையை ஏவி தீமையை தடுக்க முன் வாருங்கள்.

நன்றி : மின்னஞ்சல் தாருல்ஸபா ஷம்சுத்தீன்.