ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

அழகன்குளம் மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானி விருது



ராமநாதபுரம்:  அழகன்குளம் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் விஜயகுமார், அஜித்குமர், பாத்திமா பர்கானா, அட்சயா ஆகியோர் சென்னை அறிவியல் சிட்டி சார்பில் நடந்த, மாநில அளவிலான ஆய்வு கட்டுரை போட்டியில் பங்கேற்றனர். கணிதத்தில் பிதாகாரஸ் தேற்றத்தில் கர்ணத்திற்கு புதிய வகை பார்முலா கண்டுபிடித்து, அது தொடர்பான ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்தனர்.
இவர்களின் கண்டுபிடிப்பு மாநில அளவில் இரண்டாம் பரிசு பெற்று இளம் விஞ்ஞானி விருது பெற்றனர். அறிவியல் சிட்டி சேர்மன் சுப்புராஜ், விருதுகளை வழங்கினார். மாணவர்களை கணித ஆசிரியர் வெங்கடேசன், தலைமை ஆசிரியர் ராமசந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் முகம்மது முர்சுதீன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ரெத்தினம் ஆகியோர் பாராட்டினர்.
(Dinamalar)