அன்பான நன்றிகள் பேராசிரியரே...
இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகள்
ஆயுள்சிறைவாசிகளின் விடுதலை கோரிக்கையை சட்ட மன்ற கூட்டத் தொடர் நடை பெரும்
இவ் வேலையில் தமிழக சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு மின் அஞ்சல் மூலம்
அனுப்பிவைத்தோம். பல தோழர்கள் மின் அஞ்சல்
அனுப்பினார்கள். எமது மின் அஞ்சலுக்கு அழகிய முறையில் மிக
பொருப்புனர்வோடு பதில் அனுப்பிய மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற தலைவர்
பேராசிரியர். ஜவாஹிருள்ளா அவர்களுக்கு நன்றி....
-அவரின் செய்தி-
அன்புச் சகோதரருக்கு
தங்கள் மின்னஞ்சலுக்கு நன்றி. இந்த கோரிக்கையை பல முறை சட்டமன்றத்தில்
எடுத்துரைத்து வி்ட்டேன். இந்த முறையும் சிறை மானியக் கோரிக்கையில் இதனை
எழுப்புவோம். மேலும் வரும் 6 7 2013 அன்று சென்னையில் இந்த
கோரிக்கையையும் முன் வைத்து தமுமுக சார்பில் பேரணி நடைபெற உள்ளது. தங்கள்
தகவல்களுக்கு நன்றி.
அன்புடன்
ஜவாஹிருல்லா