ராமநாதபுரம், : டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு அறிவிப்புகள் பட்டப்படிப்பு
மூன்றாம் ஆண்டு தேர்வு முடிவுகளின் அடிப்படையில் வெளியிட வேண் டும். இதன்
மூலம் கூடுதலான மாணவர்கள் இத்தேர் வை எழுத முடியும் என மாணவர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பல்வேறு துறைகளுக் கான அலுவலர்கள் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்காக குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு கட்ட தேர்வுகள் பணிக்கேற்ப நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் தேர்வுகள் நடைபெறும் விபரங்கள் முன்னமே தெரியாததால் மாணவர்கள் தேர்விற்குத் தயாராவதில் சிரமம் இருந்து வந்தது. இப்பிரச்னையை களையும் வகையில் இந்தாண்டு முதல் தேர்வு அட்டவணை பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் குரூப் 2விற்கான தேர்விற்கான அறிவிப்பு ஜூலையில் வர உள்ளது. இதற்கான தேர்வு ஆக.25ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வில் 604 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதே போல் எழுத்துத்தேர்வு மட்டும் கொண்ட குரூப் 2 தேர்வு ஜூலையில் அறிவிக்கப் பட்டு செப்.முதல் தேதியில் நடைபெற உள்ளது. இதில் 789 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இத்தேர்வுகளுக்கான கல்வித்தகுதி பட்டப்படிப்பு ஆகும்.
பொதுவாக பட்டப்படிப்பை அடிப்படையாக கொண்ட பிஎட். உள்ளிட்ட படிப்புகள் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு முடிவுகள் அடிப்படை யிலே சேர்க்கை நடைபெறுகிறது. இதனால் மூன்றாம் ஆண்டு படிப்பவர்கள் படிப்பு முடிந்ததும் பிஎட்.படிப்பு படிக்க முடிகிறது. இதுபோன்று குரூப் 2 தேர்வு அறிவிப்புகள் பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியானபிறகு அறிவித்தால் அவர்களும் இத்தேர்வில் கலந்து கொள்ள இயலும்.
இதுகுறித்து மாணவர்கள் சரவணன், மலர், பிரதாபன் ஆகியோர் கூறுகையில், பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படித்திருந்தால் குரூப் 4 மட்டுமே எழுத முடிகிறது. எனவே பட்டப்படிப்பு சேர்ந்துள்ளோம். மூன்றாம் ஆண்டு படிப்பு இன்னும் சில மாதங்களில் முடிய உள்ளது. எனவே அதற்கேற்ப குரூப்.2 தேர்வு அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்றனர்.