ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

சமுதாயப் பணியில் மீண்டும் சாதனை செய்த முகவை தமுமுக

தொண்டி,

தொண்டி அருகே அரசு பஸ் கவிழ்ந்து 9 பயணி கள் காயமடைந்தனர்.

அரசு பஸ் விபத்து

தொண்டி அருகே உள்ள வட்டாணம் கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் நேற்றுகாலை 5 மணி அள வில் சென்னையில் இருந்து ராமேசுவரம் நோக்கி தமிழ் நாடு அரசு விரைவு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 12 பயணிகள் பயணம் செய்தனர். இந்த பஸ் வட்டாணம் கிராமத்தின் சாலையில் உள்ள ஒரு வளைவில் திரும்ப முயன்ற போது நிலைதடுமாறி பாலத்தில் மோதி கவிழ்ந்து உருண் டது.

அப்போது ஏற்பட்ட பலத்த சப்தத்தை கேட்டதும் அருகில் டீக்கடையில் இருந்தவர்கள் ஓடோடிச்சென்று இடிபாடுகளில் சிக்கிக்கிடந்தவர்களை மீட்டனர். இதுபற்றி அவர்கள் அளித்த தகவலின் பேரில் தொண்டி த.மு.மு.க. ஆம்பு லன்சு மற்றும் 108 ஆம்புலன் சுகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந் தவர்களை ராமநாதபுரம், திருவாடானை ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு சென்றது.

சிகிச்சை

இந்த விபத்தில் காயம டைந்த பஸ் கண்டக்டர் திருச்சியை சேர்ந்த சேகர் (வயது 43), சென்னை குரோம் பேட்டை மாரிமுத்து மகன் விஜயகுமார்(28), இவரது நண்பர் விஜய்(28), ஏர்வாடி அருகே உள்ள கல்பார் கிரா மத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சேகர்(22) ஆகியோர் திருவாடானை அரசு ஆஸ்பத் திரியில் அனுமதிக்கப்பட்ட னர். ஆனால் அங்கு மருத்துவர் பணியில் இல்லாததால் ஆண் செவியர் முதலுதவி சிகிச்சை அளித்து ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயமடைந்த கீழக்க ரையை சேர்ந்த செய்யது முக மது பீவி(65), முனியாண்டி, சரவணன், சதீஷ்குமார், பிரியா உள்ளிட்ட பலர் ராமநாதபுரத் திலும் சிகிச்சைக்காக அனும திக்கப்பட்டனர். இந்த சம்ப வம் குறித்து எஸ்.பி.பட்டினம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் வேலம்மாள் மற்றும் போலீ சார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

(தினத்தந்தி)