புதன், 17 ஏப்ரல், 2013




 கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூக விரோதிகள் பெரியபட்டிணம் அரசு மருத்துவமனையின் மீது மேற்கொண்ட தாக்குதல் குறித்தும் அதன் பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவின் பேரில் மருத்துவமனை மூடப்பட்டது . இதனால் அப்பகுதியில் வாழும் ஏழை முஸ்லிம்கள் உட்பட பலர் அடிப்படை மருத்துவ வசதி இன்றி தவித்தனர்.  இதை அறிந்த இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் சமுதாயத் தலைவர் ஜனாப். ஜவாஹிருல்லாஹ்  அவர்கள் பெரியபட்டிணம் மருத்துவமனை உடன் திறக்கப்பட வேண்டும் அப்பகுதி மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதி உடன் கிடைக்க வேண்டும் என்று  சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சரை உடனடியாக அழைத்து பிரச்சினையை கூறியுளளார்கள் அத்துடன் மாவட்ட செயலாளர் ஜனாப் அன்வர் அவர்களையும் அழைத்து களப்பனியாற்ற சொல்லியுள்ளார்கள் அதன் தொடர்ச்சியாக பெரியபட்டிணம்அரசு மருத்துவமனை இன்று திறக்கப்பட்டு செயல்படுகிறது. தொகுதி மக்களுக்கு  ஏற்படும் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கும் சட்டமன்ற உறுப்பிருக்கு அப்பகுதி மக்கள் தங்கள் நன்றி கலந்த பாராட்டைத் தெரிவித்தனர்.