ஏப்ரல் 14 அன்று பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக மமக பொது செயலாளர் தமிமுன் அன்சாரி நெல்லை மாவட்டம் ஏர்வாடிக்கு வருகை தந்தார் அப்போது, அதே ஊரை சேர்ந்த SDPI கட்சியின் தலைவர் தெஹ்லான் பாகவியின் வீட்டுக்கு சென்று நலம் விசாரித்து அரை மணி நேரத்திற்கும் மேல் உரையாடினார். குடும்பத்தினரை தெஹ்லான் பாகவி தமிமுன் அன்சாரியிடம் அறிமுகம் செய்து வைத்தார். மரியாதை நிமித்தமாகவும், நலம் விசாரிப்பாகவும் அமைந்த இச்சந்திப்பின்போது தமுமுக வின் மாநில செயலாளர் பி.எஸ்.ஹமீது, மமக மாநில அமைப்பு செயலாளர் செல்லச்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.