சனி, 20 ஏப்ரல், 2013

இராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட மரைக்காயர்பட்டிணத்தில் மட்டும் நடந்த மக்கள் பணி.


 இராமநாதபுரம் மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் மரைக்காயர்பட்டிணமும் ஒன்று. இந்த ஊரில் தான் கடல் வாழ் உயிரின ஆராய்சி மையமும் உள்ளது. நீண்ட நாட்களாக சில அடிப்படை வசிகளுக்காக ஏங்கிய மக்கள் நம் சட்டமன்ற உறுப்பினர் பேரா.ஜவாஹிருல்லாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதன் விபரமும் நம் சட்டமன்ற உறுப்பினரால் விரைவில் முடிக்கப்பட்ட பணிகளும்.

தேசிய நெடுஞ்சாலையில் தென்புறம் பயணிகள் நிழற்குடை கேட்டிருந்தார்கள் அதற்கு 2012-2013 நிதியாண்டில் ரூபாய் 3.00 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது 

வயர்மேன் வேண்டும் என்று கோரிக்கைவைக்கப்பட்டது அதுவும் நிறைவேற்றப்பட்டுள்ளது 

கே வி பள்ளிக்கூடம் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் மாற்றக்கோரி கோரிக்கை வைக்கப்பட்டது தற்போது மின்சார வாரிய அதிகாரிகள் மாற்றிதருவதாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் உறுதிஅளித்துள்ளனர் விரைவில் நிறைவேற்றப்படும் இன்ஷா அல்லாஹ்.

ஊரின் தென்கரைப்பகுதியில் கடலரிப்பு காரணமாக நிலப்பகுதிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாககோரிக்கை வைக்கப்பட்டது இம்மனுவை மீன்வளத்துறை அமைச்சரிடமும் இதேதுறையைசார்ந்த அரசுசெயலாளரிடமும் அனுப்பப்ட்டு நாகர்கோவிலில் உள்ள கடலியல் ஆய்வு நிபுனர்களின் ஆய்வுக்கு அனுப்பபட்ட்ள்ளது
  

 ஆகவே நமது எண்ணமாகிய மாற்று அரசியளின் அடையாளச் சின்னமாக இன்ஷா அல்லாஹ்   ம ம க விளங்கும்